பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________




தன்னிலையில் சிற்றல். 47 க-ரை: நீசெய்யவேண்டில செயல் களுள் மூன்றாவது செயலாவது, அடைதற்கு அரிய மென்ன நிலையை அடைதல். மெளனநிலை என்பது மனம் முற்படாதவாறு ஆன்மா முன்நின்று, மெய்ப்பொருளை யுணர்ந்து, அறங்களைப் புரிந்து பேரின்பத்தை அடைதலாம். ஆங்கு எ என்பன அசைகள். மோனநிலை யெய்தியவர் முக்கால முங்காண்பர் ஞானநிலை யந்தமதுநன்கறவாய்-தான தருமமெலா மக்கிலையைச் சார்தற்குச் செய்யுங் கருமமென நன்றாகக் காண். அ-ம்:- மோன நிலையை எய்தியவர் முக்காலத் தையும் காண்பர். அது ஞான நிலையின் அந்தம். (இவ்வுண்மையை நீ) நன்கு அறிவாய். தான தருமம் எல்லாம் அந்நிலையைச் சார்தற்குச் செய்யும் கரும மென நன்றாகக் காண். - ப-ரை:-மோன நிலை எய்தியவர் மௌன நிலையை அடைந்தவர், முக்காலமும் காண்பர் - இறந் தகாலத்தில் நடந்தவற்றையும் நிகழ்காலத்தில் நடக் கின்றவற்றையும் எதிர்காலத்தில் நடப்பவற்றை யும், காண்பர் - அறிவர். அது-மெளன நிலையானது, ஞானநிலை அந்தம் - ஞானநிலையின் முடிவு. நன்கு அறிவாய். (இவ்வுண் மையை நீ) நன்றாகத் தெரிந்து கொள்வாயாக. தான தருமம் எல்லாம் தானம் தருமம் தவம் முதலிய யாவம், அங்நிலையை - மொன சிலை யை, சார்தற்கு - அடைதற்கு, செய்யும் கருமம் என-