பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

தன்னிலையில் நிற்றல், பொறிவாயில்களால் துன்பங்களையும் இன்பங்களை யும் அநுபவித்தலை விட்ட தன்மையே, மோக்கம்:மோக்ஷம். மூன்றில் எதும் - இம்மூன்றில் எஃதும், இங்கு அன்றி- இவ்வுலகத்தில் அல்லாமல், எவ்விடத் தும் இல்-வேறு எங்கும் இல்லை. நீ அறிவாய் (இந்த உண்மையை) நீ அறிவாயாக. க-ரை:-ஞானேந்திரியங்கள் வாயிலாகத் துன் பங்களை அனுபவித்தலே சுவர்க்கம் என்றும் ஞானேக் திரியங்கள் வாயிலாக இன்பங்களை அநுபவித்தலே நரகம் என் றும் ஞானேந்திரியங்கள் வாயிலாகத் துன்பங் களையும் இன்பங்களையும் அநுபவித்தலை விடுதலே மோக்ஷம் என்றும் நூல்கள் சொல்லும். இம்மூன் றும் வெவ்வேறு உலகங்கள் என்று கூறுதல் பொய். ஆங்கு அசை. தன்னையறிந் துணர்ந்து தன்னுடம்பைச் சீர்ப்படுத்தித், தன்னுளத்தை யாண்டென்றுத்தாரணியின் - மன்னா யறனெல்லாஞ் செய்து தவ மாற்றிடுவோன் மெய்யின் நிறனெல்லாங் கொள்வான் சிறந்து. (இய) அ-ம் :-- தன்னை அறிந்து உணர்ந்து, தன் உடம் பைச் சீர்ப்படுத்தி, தன் உளத்தை என்றும் ஆண்டு, தரணியின் மன்னாய், அறத்தை எல்லாம் செய்து, தவத்தை ஆற்றிடுவோன். சிறந்த மெய்யின் திறத்தை யெல்லாம் கொள்வான் ………………………