________________
மெய்யறிவு, பொருளை, உள் நினைந்து போற்றி மனத்தால் தியா னித்து வணங்கி, உனது ஒழுக்கம் எண்ணி-உனது ஒழுக்கத்தை (முக்கரனச் செயல் களையும்) கினைந்து, கடிந்தவற்றை நீக்கி- அற நூல்களால் விலக்கப்பட்ட - வற்றை விடுத்து, கடியாத செய்யின்- அந்நூல்களால் விலக்கப்படாதவற்றைச் செய்தால், உன் வேலை முறை முடிந்தன- உனது ஆன்ம தன்மைக்காக நீ செய்ய வேண்டிய) உன் இயம நியம முறைகள் முடிவுற்றன. க-ரை :-- உண்ணுதற்கும் உறங்குதற்கும் முன் கடவுளை வணங்கி, அதற்கு முன் நீ செய்த சுருமங்களை யெல்லாம் எண்ணி, தீயவற்றை விலக்கி, நல்லவற்றைச் செய். 7-ம் அதி.---அறம் புரிதல். அருளீகை யுண்மையறி வாசையின்மை வாய்மை பொருளீயு மின்பமொடு போதத்- தெருளீயும் வீடீயு மாணீயு மெய்ப்பொருளி னெண்ணரிய பீடீயு மென்றுமிவை பேண். அ-ம் -: செய்யுள் கடையே அதுவய கடை. ப-ரை :__அருள் - அருளும், ஈகை - ஈகையும், உண்மையறிவு - உண்மையறிவும், ஆசையின்மை - ஆசையின்மையும், வாய்மை - வாய்மையும், பொருள் ஈயும் - செல்வத்தைக் கொடுக்கும்இன்பமொடு போதத்தெருன் ஈயம் - இன்பத்தோடு அறிவின் தெளிவைக் கொடுக்கும். வீடு ஈயும்: - துதலைக்கொ நிக்கும். மாண் ஈயும் சிறப்பைக் கொடுக்கும், மெய்ப்..... ...