பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

65) - அதடம் புரிதல். உண்மையறி வென்ப துலகத்து நன்ணுலின் திண்மையறிந் தவ்வழியே சென் றிடுதல்-வண்மைத் தொழிலெல்லாஞ் செய்தறிதல் தூலத்தைச் சார்ந்த இழிவெல்லாம் பாழுக் கிடல். (சுச) அ-ம் :-- செய்யுள் நடையே அதவய நடை. ப-ரை :-- உண்மையறிவு என்பது உண்மையறிவு என்று சொல்லப்படுவது, உலகத்து நல் நாலின்-உலகத்திலுள்ள நல்ல நூல்களின், திண்மை அறிந்து-சாரத்தை அறிந்து, அவ்வழியே சென்றிடுதல் - அந் நெறிகளிலெ ஒழுகுதலும்; வண்மைத் தொழில் எல்லாம்-பெரிய லாபத்தைத்தரும் தொழில் களை யெல்லாம், செய்து அறிதல்-செய்து தெரிதலும்; தூலத்தைச் சார்ந்த-சரீரத்தைப் பொருந்திய, இழிவு எல்லாம்-கெட்ட பழக்கங்களை யெல்லாம், பாழுக்கு இடல் நீக்கி விடுதலுமாம். க-ரை :-- உண்மையறிவு என்பது, நல்ல தூல் களின் சாரத்தை அறிந்து அவ்வாறு ஒழுகுதலும், பொருளை மிகுதியாகத் தரும் தொழில்களை யெல் லாம் செய்தறிதலும், சரீரத்தினது கெட்ட பழக்கங் களையெல்லாம் விடுதலுமாம். ஆசையின்பை யென்பதுன மைம்பொறிவா யின்மூல மாசைகொளுக் தீயவற்றை யாளாது-மீசையுள வாண்பிக்ளை யென்ன விருக் சுப்பொறியா ரூன்னத்தை நாண்பிள்ளை யாக்கி நகல், (ஈடு) அ-ம் :-- செய்யுள் நடையே அ.நவய 11 437 - .