பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

              அறம் புரிதல்.        67
   ப-ரை :- வாய்மை என்பது - வாய்மை என்று சொல்லப்படுவது, மனம் வாக்கு காயத்தில் - நினைப் பிலும் சொல்லிலும் செயலிலும், தூய்மை ஒன்றி நிற்றல் - நன்மை பொருந்தி நிற்றலும்; உண்மை சொல்லல் நிகழ்ந்ததை நிகழ்த்தவாறே சொல்லுதலும்; இவண் சேய்மையினும் - இவ்வுலகத்தில் நூரமான இடத்திலும் காலத்திலும், - தீமை தருபவற் றைச் செப்பாமை - உயிர்களுக்குத் துன்பங்களைக் கொடுக்கும் சொற்களைச் சொல்லாமையும், நன்மைத ரும் நீர்மையன உயிர்களுக்கு இன்பங்களைக் கொடுக்கும் தகுதியுடைய சொற்களை, நினைத்துச் சொல்லல்ஆராய்ந்து சொல்லுதலுமாம்………

க-ரை:- வாய்மையாவது நல்ல நினைப்பையும் நல்ல சொல்லையும் நல்ல செயலையும் பொருந்துத லும், உள்ளதை உள்ளவாறு கூறுதலும், உயிர்களுக் குத் துன்பங்களை விளைக்கும் சொற்களைச் சொல்லா மையும், உயிர்களுக்கு இன்பங்களை விளைக்கும் சொற் களைச் சொல்லுதலுமாம்

 அருளாதி நான்கையுமிங் காகாத செய்யும் பொருளாதி பாற்படுத்தல் போத-மருளாகு மெய்யறிவி னன்னெறியின் மேம்பாட்டி லாசையின்மை பொய்யறிவி லாய புரை.
   அ-ம் :-- செய்யுள் நடையே அநுவய நடை.

ப-ரை:- அருன் ஆதி நான்கையும்- அருளையும் ஈகையையும் உண்மையறிவையும் வாய்மையையும்,