________________
அறம் புரிதல்,
69 ளும், உன் செயலால் - உனது செயல்களாலாவது, வேறு உயிரால்-வேறு உயிர்களாலாவது, ஊண் இன் மையால் - உணவு இல்லாமையினாலாவது, தன்பகையின் வன் செயலால் - தம் பகையான உயிர் களின் கொடிய செயல்களாலாவது, வாடவிடாய்வருந்துமாறு இடம் கொடாதே. க-ரை :--நீ நித்திரையினின்று எழுந்திருந்த கணம் முதல் நீ நித்திரைக்குச் செல்லும் கணம் வரை உனது பார்வைக்கு எட்டக்கூடிய எல்லைக்குள் அற்ப உயிர்களும் உனது செயல்களாலாவது வேறு உயிர்க ளாலாவது உணவு இல்லாமையாலாவது தமது பகை உயிர்களாலாவது வருந்து மாறு விடற்க. மற்று அசை.) அறம்பொருளில் லின்பமுட னாதியருள் சேர்க்குந் திறம்பெருக்கு நூலெல்லாஞ் சிந்தி-நிறம்பலசே சாடைசெய லூண்விளைத்த.. வாக்கவரண் போர்முறைவா வாழிநிலஞ் செல்லலகழ் வாள்,
(சுக) அ-ம் :- அறம் பொருள் இல்லின்பமுடன் ஆதி யின் அருளைச் சேர்க்கும் திறத்தைப் பெருக்கும் நூல் எல்லாவற்றையும் சிந்தி. பல நிறம் சேர் ஆடையைச் செய்யலையும் ஊண் விளைத்தலையும் அரணை ஆக்கலையும் போர்முறையையும் வானிலும் ஆழியிலும் நிலத்தி லும் செல்லலையும் அகழ்வையும் ஆள்.
ப-ரை :- அறம் பொருள் இல் இன்பமுடன் - தருமம் செல்வம் மனையாளோடு துய்க்கும் இன்பம்..