பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

viii சிறப்புப் பாயிரம்.

   அறமும், அறத்திற்கு இன்றியமையாத பொருளும், அறத்தால் எய்தப்படும் வீடும், அம்மூன்று பொருள்களையும் ஈட்டுதற்குரிய நெறிகளும், இந்நூல் நுதலிய பொருள்களாம்.
  அறத்தைச் சரியாகப் புரிதலும், பொருளை நியாயமாக ஈட்டலும், வீட்டை நேராக அடைதலும், அவற்றிற்கு அநுகூலமான நிலைகளை எய்தலும் இந்நூலைக் கேட்போர் பெறும்பயன்களாம்.
   இந்நூல் நமது பிள்ளையவர்கள் இராஜநிந்தனைக் குறத்திற்காக நாடுகடத்தல் தீர்ப்புப் பெற்றுக் கண்ணனூர்ச் சிறையில் வசித்த போது இயற்றப்பட்டு இவ்வருடம் அரங்கேற்றப் பெற்றது.
   அறிவும் அன்பும் ஓர் உருவாய்த் திரண்டு, நம்மவர் நன்மைக்காக அவதரித்துள்ள, ஸ்ரீ மார். தி. செல்வகேசவராய முதலியாரவர்கள், யம். எ., முன்னிலையில் இஃது அரங்கேற்றப் பெற்றது.
   இந்நூல் நமது தொன்னூல்களைப் போல இவ்வுலகின் கண் நீடு நின்று நிலவுமாறு அருள்புரிய எல்லாம் வல்ல இறைவனை எமது நெஞ்சத்துள் வைத்து வணங்குகின்றேம்.

சென்னை, இராக்ஷஸ ஆவணிமீ.ந.உ)

   கல்வியாண சுந்தரா யதீத்திரர்