________________
பொய்யுணர்தல். அ-ம்:--தானல் கயிறு இரண்டையும் காணுங் கால் நீரும் அாவும் போனபடி. மெய்யைக் காண உலகு போம். கானல் கயிறு (இவற்றின்) உண்மை சோர அவை காணும் ; (அது போல), மெய்யின் உண்மை சோர உலகு விரைந்து எய்தும். ப-ரை:- கானல் கயிறு இரண்டும் காணும் கால்-கானலும் கயிறுமாகிய இரண்டையும் காணும் போது, நீர் அரவு போனபடி - ஜலத் தோற்றமும் பாம்புத் தோற்றமும் நீங்கியது போல, மெய் காணமெய்ப்பொருளைக் காண, உலகு போம் - உலகத் தோற்றம் நீங்கி விடும். கானல் கயிறு உண்மை சோர-நானலென்ற உண்மையும் கயிறென்ற உண் மையும் நழுவ, அவை கானும்-ஜலத் தோற்றமும் பாம்புத் தோற்றமும் உண்டாம்; (அது போல), மெயின் உண்மை சோர-மெய்ப்பொருளென்ற உண் மை நழுவ, உலகு விரைந்து எய்தும் உலகத் தோற் நம் உடனே உண்டாம். க-ரை:- நீராகத் தோன்றிய பொருளைக் கான லென்று உணரும் போது நீர்த்தோற்றம் நீங்கிவிடு வது போலவும், அரவாகத் தோன்றிய பொருளைக் கயிறென்று உணரும் போது அரவுத்தோற்றம் நீங்கிவிடுவது போலவும், உலகமாகத் தோன்றிய பொருளை மெய்ப்பொருளென்று உணரும் போது உலகத் தோற்றம் நீங்கிவிடும். கானவென்ற உண் மை நழுவும் போது நீர்த்தோற்றம் உண்டாவது போலவும், கயிறென்ற உண்மையை மறந்தபோது அரவுத்தோற்றம் உண்டாவது போலவும், மெய்ப்