________________ 86 - மெய்யறிவு பொருளென்ற உண்மை நழுவும் போது உலகத் தோற்றம் உண்டாம். கானலினீர் காணக் கயிற்றிலராக் காணச்சேண் போனவஞ ரஞ்சுமஞர் போக்தசெயல்--மான வுலகினைக்கானுர் தோறு முன்னரிய துன்ப மிலகிமிகுங் காண்பா யினிது. (அச) அ-ம்:--காணலில் நீரைக் காணச்சேண் போன அஞரும், கயிற்றில் அராவைவ்க்காண அஞ்சும் அஞரும், போத்த செயலமான, உலகினைக் காணும் தோறும் உன்னரிய துன்பம் இலகி மிகும். (இவ்வுண்மையை ) இனிது காண்பாய். ப-ரை :--கானலில் நீர் காண - கானலின்கண் ஜலத்தோற்றத்தைப் பார்க்க, சேண் போன அஞர், (அதனை பாம்பென்று கருதிப் பருகுதற்காக) நீண்ட தூரம் சென்றதுன்பமும், கயிற்றில் அராக்காண-கயிற் றில்பாம்புத் தோற்றத்தைப் பார்க்க, அஞ்சும் அஞர்(அதனைப் பாம்பென்று கருதிப்) பயப்படும் துன்ப மும், போந்த செயல் மான - உண்டாய் செய்கையை ஒப்ப, உலகினைக்ுணு ம் தோறும் (மெய்ப்பெருளில்) உலகத்தோற்றத்தைப் பார்க்கும் போதெல்லாம், உன் னரிய துன்பம் - நினைத்தற்கரிய துன்பங்கள், இலகி மிகும் - உண்டாகிப் பெருகும். இனிது காண்பாய் - இவ்வுண்மையை நீ நன்றுகக் காண்பாயாக. க-ரை :--கானலில் நீர்த்தோற்றத்தைக் காணும் போது அதனை நீசென்று கருதிப் பகுகுதற்காக அது
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/94
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.