பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

பெய்யுணர்தggfd 89 க-ரை:---மன் முதலில் வித்துக்களை மர களாக்கி அவற்றின் கனிகளை நமக்கு நல்குவது போல, மெய்ப்பொருள் நாம் செய்யும் வினைகளை விதிகளாக்கி வினைகளின் நேரான பயன்களை நமக்கு நல்கும். பற்றறுக்க பெர்ஞான்றும் பற்றில்லா மெய்ப்பொருளைப் பற்றுகவென் முன்குரவன் பற்றியதைப்-பற்றறுத்த காலத்தே மெய்ப்பொருளைக் காரியத்தின் கர்த்தாவா ஞாலத்தே கண்டிடுவோ கன்கு. (அஎ) அ-ம் :- பற்றை அறுக்க எஞ்ஞான்றும் பற்று இல்லாத மெய்ப்பொருளைப் பற்றுக என்றான் குர வன். அதைப் பற்றிப் பற்றை அறுத்த காலத்தே மெய்ப்பொருளைக் காரியத்தின் கர்த்தாவாக ஞாலத் தே நன்கு கண்டிடுவோம். ப-ரை:- பற்று அறுக்க-அகப்பற்றையும் புறப் பற்றையும் ஒழிக்க, எஞ்ஞான்றும் பற்று இல்லா - எக்காலத்திலும் அவ்விரண்டு பற்றுக்களும் இல்லாத, மெய்ப்பொருளை-கடவுளை, பற்றுக - பற்றுக் கோடா கக் கொள்க, என்றான் குரவன் -என்று கூறினான் நமது ஆசிரியன் வள்ளுவன். அதைப்பற்றி - மெய்ப் பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டு, பற்று அறுத்த - அகப்பற்றையும் புறப்பற்றையும் ஒழித்த, காலத்தே - காலத்திலே, மெய்ப்பொருளை - கடவுளை, காரியத்தின் கர்த்தாவா-இங்கு நிகழ்கின்ற பல காரி பங்களுக்கும் முதல்வனாக, ஞாலத்தே - இவ்வுலகின்