பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்.

மாணவ ரியல்.

முதல் அதிகாரம்.–மாணவர் கடமை.


மாண்பெற முயல்பவர் மாணவ ராவர்.
ஆணும் பெண்ணு மதுசெய வுரியர்.
இளமைப் பருவ மியைந்த ததற்கே.
மற்றைய பருவமும் வரைநிலை யிலவே.
அவர்கடன் விதியிய லறிந்துநன் றாற்றல்.
அன்னைதந் தையரை யாதியைத் தொழுதல்.
தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்.
தக்கவா சிரியராற் ற்ன்னிய லறிதல்.
ஒழுக்கமுங் கல்வியு மொருங்குகைக் கொள்ளல்.
இறைவ னிலையினை யெய்திட முயறல். ௧0

௨-ம் அதி.–விதியியல் அறிதல்.

வினையின் விளைவே விதியென வந்துறும். ௧௧
விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே. ௧௨
மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும். ௧௩
தீவினை விளைவிற் சேருவ துன்பம். ௧௪
நல்வினை விளைவி னணுகுவ வின்பம். ௧௫
தீவிதி வரவைச் செப்பு மடன்மடி. ௧௬
நல்விதி வரவை நவிலுமறி வூக்கம். ௧௭
விதியை மாற்றிட வினையை மாற்றுக. ௧௮
தீவிதி வேண்டிற் றீவினை புரிக. ௧௯
நல்விதி வேண்டி னல்வினை புரிக. ௨0