பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௭-ம் அதி.–ஆசிரியரை யடைதல்.

அறிவினைத் தருபவ ராமா சிரியர். ௬௧.
இருபா லாருந் தருவதற் குரியவர். ௬௨.
அறிவு வகையா னாசிரி யர்பலர். ௬௩.
எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது. ௬௪.
அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல். ௬௫.
நல்வினை விரும்பு நல்லவர்க் கோடல். ௬௬.
மாணவர் தமைதம் மகாரெனப் பேணல். ௬௭.
அறிந்தவை யெல்லாஞ் செறிந்திடச் சொல்லல். ௬௮.
சொல்லிய செய்யவும் வல்லுந ராக்குதல். ௬௯.
அறிந்தா சிரியரை யடைந்தெலா மறிக. ௭0.

௮-ம் அதி.–தன்னை யறிதல்.

தன்னை யறித றலைப்படுங் கல்வி. ௭௧.
மனிதரி லுடம்பு மனமான் மாவுள. ௭௨.
தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு. ௭௩.
உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம். ௭௪.
உடம்பு மனமுமா ளுயரறி வான்மா. ௭௫.
ஆன்மா மனமுட றான்றன் வலிதனு. ௭௬.
மெய்ம்முத லியம் வெளிச்செலும் வாயில். ௭௭.
உடன்மனத் தின்பி னோடு மியலது. ௭௮.
மனமற வறநெறி மருவு மியலது. ௭௯.
ஆன்மா மனத்தை யறநெறி யுய்ப்பது. ௮0.


6