பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவ ரியல்.

௨௫-ம் அதி.–நடுவு நிலைமை.

நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல். ௨௪௧.
பிறவுயிர் நடுவள விறனடு வின்மை. ௨௪௨.
நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள். ௨௪௩.
அறனெலா நிற்பதற் கஃதா தாரம். ௨௪௪.
அதுசிறி தசையி னறனெலா மழியும். ௨௪௫.
நடுவினு ணிற்பவர் நலனெலாம் பெறுவர். ௨௪௬.
நடுவினை விடாரை நானிலம் விடாது. ௨௪௭.
நடுவிகந் தாருடன் கெடுவது திண்ணம். ௨௪௮.
நடுவிகந் தாரை நரகமும் விடாது. ௨௪௯.
ஆதலா னடுவி லசையாது நிற்க. ௨௫0.

௨௬-ம் அதி.–அடக்க முடைமை.

அடக்க மனம்புலத் தணுகா தடக்கல். ௨௫௧.
அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல். ௨௫௨.
அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும். ௨௫௩.
அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும். ௨௫௪.
அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே. ௨௫௫.
அடக்க மிலாமை யழிவெலாந் தருமே. ௨௫௬.
அடக்கமெய் வீட்டிற் கடிப்படி யாகும். ௨௫௭.
அப்படி யேறினா ரடைவரவ் வீடு. ௨௫௮.
அப்படி யேறா ராழ்வர்வெந் நரகு. ௨௫௯.
ஆதலா லடக்க மநுதின மோம்புக. ௨௬0.


15