பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்வியல்.

௩௩-ம் அதி.–உயிர்த்துணை கொள்ளல்.

உயிர்த்துணை தன்னுயிர்க் குதவெதிர் பாற்றுணை. ௩௨௧
அத்துணைக் கெங்கணு மொத்ததொன் றிலதே. ௩௨௨
ஆக்கமுங் கேடு மத்துணை யாலாம். ௩௨௩
கொள்ளு மறிவெலாங் கொண்டுபின் றுணைகொளல். ௩௨௪
கொளுமுன் கொண்டிடிற் குற்றம் பலவாம். ௩௨௫
துணையிழந் தாரை மணப்பது புண்ணியம். ௩௨௬
விரும்பா தவரை விரும்புதல் பாவம். ௩௨௭
துணைநலங் குடிமையே தூய்மையே யொழுக்கமே; ௩௨௮
பருவமே யெழிலே பண்பே யின்சொலே; ௩௨௯
வரவினுள் வாழ்தலே மடிதுயி லிலாமையே. ௩௩0

௩௪-ம் அதி.–உயிர்த்துணை யாளுதல்.

இருவரு ளறிவிற் பெரியவ ராள்க. ௩௩௧
ஆண்பா லுயர்வெனல் வீண்பேச் சென்க. ௩௩௨
துணைநன் காள்பவர் தொல்லுல காள்வர். ௩௩௩
தன்னுயி ருடல்பொரு டன்றுணைக் குரியன. ௩௩௪
தன்றுணை யுயிர்முத றனக்காங் குரியன. ௩௩௫
இருவராத் தோன்றினு மொருவரே யுள்ளின். ௩௩௬
தானறிந் தவையெலாந் தன்றுணைக் குணர்த்துக. ௩௩௭
தனதுநன் னெறிதுணை சார்ந்திடச் செய்க. ௩௩௮
இயற்றுவ துணையுட னெண்ணி யியற்றுக. ௩௩௯
உண்பன துணையோ டுடனிருந் துண்ணுக. ௩௪0


19