பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்வியல்.

௩௭-ம் அதி.–பரத்தையை விலக்கல்.

பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள். ௩௬௧
மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள். ௩௬௨
அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்; ௩௬௩
இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்; ௩௬௪
உடைமுதற் பொருளெலா முயிரொடு கவர்வள். ௩௬௫
அவளினும் வஞ்சக ரவனியி லில்லை. ௩௬௬
அவளினுங் கள்வ ரருளின ரெனலாம். ௩௬௭
அவளுள நினைந்தாற் றவசியுங் கெடுவான். ௩௬௮
அவளா லந்தோ வழிந்தவ ரநேகர். ௩௬௯
அவளிலா நாடே யழிவுறா நாடு. ௩௭0

௩௮-ம் அதி.–பரத்தனை விலக்கல்.

தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன். ௩௭௧
பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன். ௩௭௨
பொதுமக ளாதலம் முழுமக னாலே. ௩௭௩
நன்மகன் கெடுதலப் புன்மக னாலே. ௩௭௪
மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே. ௩௭௫
அவனைக் காண்டலா லழியும் புகழே. ௩௭௬
அவனொடு பேசலா லழியு நிறையே. ௩௭௭
அவனொடு சேர்தலா லழியு மனைத்தும். ௩௭௮
அவனிலா நாடே யாகுநன் னாடு; ௩௭௯
அறனு மளியு மமைவுறு நாடு. ௩௮0


21