பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௩௯-ம் அதி.–சிற்றினம் விலக்கல்.

சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்; ௩௮௧
பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்; ௩௮௨
அற்பத் தன்மை யளாவிய மாக்கள்; ௩௮௩
பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்; ௩௮௪
சுயநயங் கருதும் பயனிலா மாக்கள். ௩௮௫
சிற்றினம் பொருளையுஞ் சீரையு மழிக்கும்; ௩௮௬
அற்றமுங் குற்றமு முற்றிடச் செய்யும்; ௩௮௭
முற்றவ நலத்தொடு கற்றவுஞ் சிதைக்கும்; ௩௮௮
நரகும் பழியு நண்ணிடச் செய்யும். ௩௮௯
சிற்றினப் பற்றினைச் சிறிதும் வேண்டேல். ௩௯0

௪0-ம் அதி.–பெரியாரைத் துணைக்கொளல்.

பெரியா ரரியன பெரியன செய்பவர்; ௩௯௧
பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்; ௩௯௨
இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்; ௩௯௩
நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்; ௩௯௪
பின்னுறுந் தீங்கெலா முன்னறிந் தொழிப்பவர். ௩௯௫
அவரது துணைகொள லரும்பெருங் காப்பு. ௩௯௬
அவரை யறிந்துகொண் டநுதின மோம்புக. ௩௯௭
அவர்க்குரி யனவெலா மன்பொடு வழங்குக. ௩௯௮
அவரோ டெண்ணியே யனைத்துஞ் செய்க. ௩௯௯
அவருரை பிழையா தியாங்கணு மொழுகுக. ௪00


22