பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்வியல்.

௪௧-ம் அதி.–பேதைமை யொழித்தல்.

பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்; ௪0௧
கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்; ௪0௨
நாணன் பருள்புகழ் பேணுத லின்மை; ௪0௩
அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்; ௪0௪
அறத்தை விடுத்து மறத்தைப் புரிதல். ௪0௫
வினைசெயின் பொய்படும் புணைகொளும் பேதை. ௪0௬
தமர்பசித் துழலப் பிறர்க்கிடும் பேதை. ௪0௭
பேதையோர் காசுறிற் பித்தன் களித்தற்று. ௪0௮
அவைபுகிற் பேதை யதனலங் குன்றும். ௪0௯
பெரியார் நூல்கொடு பேதைமை களைக. ௪௧0

௪௨-ம் அதி.–வெண்மை யொழித்தல்.

வெண்மை யறிவினை விடுத்த தன்மை; ௪௧௧
ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; ௪௧௨
ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; ௪௧௩
குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; ௪௧௪
கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்; ௪௧௫
அருமறை விடுத்துப் பெருமிறை கொள்ளல்; ௪௧௬
செய்வன சொல்லியுஞ் செய்யா திழுக்கல்; ௪௧௭
உலகின ருளதென்ப திலதென மறுத்தல். ௪௧௮
இன்மையு ளின்மை வெண்மை யொன்றே. ௪௧௯
ஒண்மைசா னூல்கொடு வெண்மையைக் களைக. ௪௨0


23