பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௪௭-ம் அதி.–செருக் கொழித்தல்.

செருக்கென் பதுதன் பெருக்கத் தகங்கொளல். ௪௬௧
அஃதறி யாமையி னங்குர மென்ப. ௪௬௨
ஆன்ம வுயர்வினை யழிப்பதச் செருக்கு. ௪௬௩
அடங்கா வுளத்தை யளிப்பதச் செருக்கு. ௪௬௪
அழியு முடம்பை யளிப்பது மஃதே. ௪௬௫
செருக்கினர் தம்மெய்த் திறத்தினைக் காணார்; ௪௬௬
தம்பகைத் திறத்தைத் தாழ்த்தியே யெண்ணுவர்; ௪௬௭
இன்பினு மடியினு மிறந்து படுவர்; ௪௬௮
துயிலு மறவியுந் தொடர்ந்து கொள்வர்; ௪௬௯
புகழெலாம் போக்கி யிகழெலா மீட்டுவர். ௪௭0

௪௮-ம் அதி.–அச்ச மொழித்தல்.

அச்ச மனமுட லழிவுற நடுங்கல். ௪௭௧
அஃதறி யாமையி னந்தமென் றுணர்க. ௪௭௨
அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம். ௪௭௩
மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம். ௪௭௪
அறம்புகழ் செய்வதற் கஞ்சுதன் மறனே. ௪௭௫
மறம்பழி செய்வதற் மாண்புடை யறனே. ௪௭௬
அறநெறி மறந்தரின் மறநெறி யாகும். ௪௭௭
மறநெறி யறந்தரி னறநெறி யாகும். ௪௭௮
அச்ச முடையார்க் கெச்சமிங் கில்லை. ௪௭௯
அச்ச மிலார்க்கு நிச்சலு மெச்சமாம். ௪௮0


26