பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்.

௬௫-ம் அதி.–தெரிந்து தெளிதல்.

செயல்செய் வாரிய லுயர்குடிப் பிறப்பே; ௬௪௧
செம்மையே வாய்மையே தீவினை யின்மையே; ௬௪௨
அறிவே யன்பே யழகே யாற்றலே; ௬௪௩
பண்பே பொறையே பணிவே யின்சொலே; ௬௪௪
மறவி நெடுநீர் மடிதுயி லிலாமையே; ௬௪௫
அவாஅ வின்மையே தவாவினை யுண்மையே; ௬௪௬
பொதுச்சிறப் பெனுமிரு மதிவளர் கல்வியே. ௬௪௭
இவையெலா மியைந்துள வினமெலாந் தெறிக ௬௪௮
அறம்பொரு ளின்புயி ரச்சத்தாற் றெளிக. ௬௪௯
தெளியுமுன் கொண்டிடேல் தெளிந்தபி னையுறேல். ௬௫0

௬௬-ம் அதி.–செய்வினை யாளுதல்.

நன்றுதீ தெண்ணி நலம்புரிவா னாள்க. ௬௫௧
வருவாய் பெருக்கி வளஞ்செய்வா னாள்க. ௬௫௨
ஊறுறா தாற்று முணர்வோனை யாள்க. ௬௫௩
உறுமூ றொழிக்கு முரவோனை யாள்க. ௬௫௪
வினையினிற் றிரியா மெய்யனை யாள்க. ௬௫௫
இதையிதான் முடிப்பனென் றதையவன் பால்விடல் ௬௫௬
அதன்பி னவனையே யதற்குரிய னாக்குக. ௬௫௭
வினைக்கண் வினைசெயும் வீரனை யையுறேல். ௬௫௮
செயல்செயும் பலரையுந் தினந்தொறு நாடுக. ௬௫௯
செயன்முறை செய்தவன் சிந்தைகண் டாற்றல். ௬௬0


35