மெய்யறம்
௬௭-ம் அதி.–ஒற் றாளுதல்.
ஒற்றுவினை ஞர்பகை சுற்றமறைந் தறிவது;
௬௬௧
கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தறிவது;
௬௬௨
உறுப்பெலாஞ் சிதைப்பினு முகாஅமை வல்லது.
௬௬௩
உலகெலா நிகழ்பவை யொற்றினா லறிக.
௬௬௪
ஒற்றுரை சான்ற நூல் கொற்றவன் கண்களே.
௬௬௫
ஒற்றிலார் கொற்றமும் வெற்றியு மிழப்பர்.
௬௬௬
ஒற்றுரைத் ததனைவே ரொற்றினா லொற்றுக.
௬௬௭
ஒற்றுமூன் றொத்திடி னுண்மையென் றறிக.
௬௬௮
ஒற்றொற் றயிரா துணரா தாள்க.
௬௬௯
ஒற்றிற் கயலா ருணர்ந்திடா தீக.
௬௭0
௬௮-ம் அதி.–உரைநூ லாளுதல்.
உரைநூல் புரைதவிர் புகழ்சால் நூல்கள்.
௬௭௧
அழியாப் பொருள்களை யறைபவே புகழ்பெறும்.
௬௭௨
அவைமெய்ப் பொருளே யதிற்சே ரறனே.
௬௭௩
பொருளிலா தறனிலை புணர்விலா தொழிவிலை.
௬௭௪
ஆதலா லவையு மழியாப் பொருள்களே.
௬௭௫
அவ்வைம் பொருளிலு மடங்காப் பொருளில்லை;
௬௭௬
புதுநூ லுடனே புகழ்பெற லரிது;
௬௭௭
ஆதலா லுரைநூ லவைசொலுந் தொன்னூல்.
௬௭௮
அவைபல மொழியிலு மமைந்துள மறைகள்;
௬௭௯
இனியநந் தமிழி னிலக்கிய மிலக்கணம்.
௬௮0
36