அரசியல்.
௬௯-ம் அதி.–அமைச் சாளுதல்.
அமைச்சர சிற்கினி தமைவன சொல்வது;
௬௮௧
அரசுசொல் வனவு மமைத்துத் தருவது;
௬௮௨
அரசின் செயற்கெலாஞ் சிரசென நிற்பது;
௬௮௩
அரசின் குடிக்கெலா மன்னையா நிற்பது;
௬௮௪
அரசுயிர்த் துணையா வறனெலாஞ் செய்வது.
௬௮௫
அதனல மரசிய லனைத்துநன் காளுதல்;
௬௮௬
நூலிய லுலகிய னுண்ணறி வுடைமை;
௬௮௭
காமமும் வெகுளியுங் கைக்கொளா தமைதல்.
௬௮௮
அமைச்சுபட் டியைப்போ லமைந்தறம் புரிக.
௬௮௯
அரசுவிக் கிரமனி னன்புகொண் டாள்க.
௬௯0
௭0-ம் அதி.–அறிந்து சொல்லல்.
நாநல மழியா நலமென மொழிப.
௬௯௧
ஆக்கமுங் கேடு மதின்வரு மென்ப.
௬௯௨
அறனும் பொருளு மதின்வரு மன்ற.
௬௯௩
அகிலநிற் பதுமஃ தமைதலா னன்றே.
௬௯௪
சொல்லு மியலெலா மொல்லும் வகைசொலல்.
௬௯௫
அவையறம் பொருடர வமைத்துச் சொல்லல்;
௬௯௬
கேட்போர்க் கின்பங் கிளைக்கச் சொல்லல்;
௬௯௭
சுருங்கத் தொகுத்து விளங்கச் சொல்லல்;
௬௯௮
வரிசைப் படுத்தி மனங்கொளச் சொல்லல்;
௬௯௯
மறுக்கா விதத்து மாணுறச் சொல்லல்.
௭00
37