மெய்யறம்
௭௧-ம் அதி.–பண்பு செய்தல்.
பாடறிந் தொழுகலே பண்பென மொழிப.
௭0௧
பண்பா லுலக முண்டெனும் பொதுமறை.
௭0௨
மக்களுட் பண்பிலார் மரமெனப் படுவர்.
௭0௩
பெரியார்க் கடங்கி யுரியவை வழங்குக.
௭0௪
சிறியரை யடக்கிச் செய்வன செய்க.
௭0௫
மெல்லியன் மகளிருண் மென்மைபா ராட்டுக.
௭0௬
நண்பருள் ளுவப்புற நண்ணிநின் றொழுகுக.
௭0௭
பகைவருள் ளுட்கமே னகைபுரிந் தொழுகுக.
௭0௮
சலவருட் சாலச் சலஞ்செய் தொழுகுக.
௭0௯
பண்பர சின்பெலா மெண்பதத் தாலாம்.
௭௧0
௭௨-ம் அதி.–பெரிய வரசரைச் சேர்தல்.
பெரிய வரசர் பெரியநா டாள்பவர்;
௭௧௧
சிறிய வரசர்பாற் றிறைநனி கொள்பவர்;
௭௧௨
எவ்வர சர்க்கு மிளையாத் திறத்தினர்;
௭௧௩
திறனெலாம் பெருக்கி யறனெலாஞ் செய்பவர்;
௭௧௪
மறஞ்செயு மரசரின் றிறஞ்சிதைத் தொழிப்பவர்.
௭௧௫
பெரிய வரசர் பெரியார்க் கடுத்தவர்.
௭௧௬
அவரைச் சேர்தலா லரும்பெரு மாக்கமாம்.
௭௧௭
அமைச்சராய்ப் புலவரா யவரவை சேர்க.
௭௧௮
அருினைத் தலைவரா யவர்பாற்சேர்க.
௭௧௯
அவருளங் கொளநடந் தரியவை பெறுக.
௭௨0
38