பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்.

௭௩-ம் அதி.–அவர்பா லொழுகல்.

அகலா தணுகா தனற்காய்வார் போல்க. ௭௨௧
அன்பொடு மெய்யொடு மடங்கிநின் றொழுகுக. ௭௨௨
அவர்முன் செவிச்சொ லயனகை பொருந்தேல். ௭௨௩
அவர்சொலி னலாலொன் றறிந்திட விரும்பேல். ௭௨௪
அவர்க்கா வனவு மமையங்கண் டியம்புக. ௭௨௫
அவர்விழை பவற்றை யகத்தினும் விழையேல். ௭௨௬
அவரை யுறாவகை யாங்கணு மொழுகுக. ௭௨௭
இளைய ரினத்தின ரெனநினைந் திகழேல். ௭௨௮
பழையவ ரெனினும் பண்பிலா தனசெயேல். ௭௨௯
தனக்குவேண் டுவவவர் சாற்றெனிற் சாற்றுக. ௭௩0

௭௪-ம் அதி.–குறிப்புணர் வுடைமை.

குறிப்புணர் விரண்டு கூறா கும்மே. ௭௩௧
குறிப்பி னுணர்த்தலே குறிப்பி னுணர்தலே. ௭௩௨
குறிப்பி னுணர்த்தல் கூறா துணர்த்தல். ௭௩௩
குறிப்பி னுணர்தல் கூறா துணர்தல். ௭௩௪
இவையர சமைச்சிற் கின்றியமை யாதவை. ௭௩௫
அகதினி லுள்ளது முகத்தினிற் றெரியும். ௭௩௬
மொழியான் மறைப்பினு முகமதைக் காட்டும். ௭௩௭
முதுவர் குறிப்பினான் மொழிகுவ ரறிகுவர்; ௭௩௮
முகங்கண் களினான் மொழிகுவ ரறிகுவர்; ௭௩௯
முன்சொல் குறிப்பினு மொழிகுவ ரறிகுவர். ௭௪0


39