பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்.

௮௯-ம் அதி.–படை யமைத்தல்.

பகைத்திற னழிக்கும் வகைத்தே ரியற்றுக. ௮௮௧
பகைக்குழுச் சிதைக்கும் வயக்களி றீட்டுக. ௮௮௨
குறித்த நெறிசெலுங் குதிரைகள் கொள்ளுக. ௮௮௩
இறத்தலி னின்புறூஉ மறத்தினர்க் கூட்டுக. ௮௮௪
தேர்மா பரியாள் சேனையா வகுக்க. ௮௮௫
அறைப்படுத் தேகுதற் காஞ்சில வியற்றுக. ௮௮௬
கடல்செலும் பலவகைக் கலங்களு மியற்றுக. ௮௮௭
விண்செலும் பலவகை விமானமு மியற்றுக. ௮௮௮
அவையாள் படைபடைக் கலமொடு வழங்குக. ௮௮௯
வரிசைத் தலைவரா வுரியரை யுயர்த்துக. ௮௯0

௯0-ம் அதி.–படை யளித்தல்.

படைதன் னுயிரெனப் பார்த்துமன் னோம்புக. ௮௯௧
தினம்படை நோக்கித் திறன்மிகுந் திடச்செயல். ௮௯௨
அவரவர் திறனறிந் தளிக்க வேதனம். ௮௯௩
படையுவப் புறச்சீர் பரிசிலும் வழங்குக. ௮௯௪
அமரிற் படுபவர் தமர்தமை யோம்புக. ௮௯௫
படைகளின் கடன்தாம் பகைகொளல் கொலப்படல்; ௮௯௬
கூற்றையு மெதிர்த்திடு மாற்றலொடு செல்லல்; ௮௯௭
இழைத்த திகவாஅ திறந்துபுகழ் கொள்ளல்; ௮௯௮
தலைவரின் சொல்லெலா நிலையுறப் பணிதல்; ௮௯௯
தலைவரைத் தமதுநற் றாயினும் பேணுதல். ௯00


47