பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

145

                  பொருளதிகாரம் - களவியல்

- கூச.

குறிப்பே குறித்தது கொள்ளு மாயி
               னாங்கவை நிகழு மென்மனார் புலவர்.

    என்--னின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.
    
  ஒருவர் குறிப்பு ஒருவர் குறித்ததனைக் கொள்ளுமாயின், அவ்விடத்துக் கண்ணினான் வருங் குறிப்புரை நிகழும் என்றவாறு.
  
எனவே, குறிப்பைக் கொள்ளாத வழி அக்குறிப்புரை நிகழாது என் றவாறாம். இதனாற்சொல்லியது கண்டகாலத்தே வேட்கை முந்துற்றவழியே இக்கண்ணினான் வருங் குறிப்பு நிகழ்வது: அல்லாதவழி நிகழாது என்றவாறு. இனிக் குறிப்பு நிகழுமாறும் அதன் வேறுபாடும் மெய்ப்பாட்டியலுள் கூறுப. ஈண்டும் சில உதாரணம் காட்டுதும்.

 'நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் -
        யாப்பினா ளட்டிய நீர்.”

(குறள்-தகங) 993-- - எனவும், - - -

 'அசையியற் குண்டாண்டோ ரேஎரியா னோக்கப்
        பசையினள் பைய நகும்.”

(குறள். நசுஅ) 698

  எனவும் வரும். பிறவு மன்ன. தலைமகன் குறிப்புத் தலைமகள் அறிந்தவழியும் கூற்று நிகழாது, பெண்மையான்,

கூடு.

95

'பெருமையு முரனு மாடூஉ மேன.

   என்-னின், இது தலை மகற்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. . 
   பெருமை யானது.- பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது அறிவு.

இவை யிரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு.

- இதனானே மேற் சொல்லப்பட்ட தலைமகனது வேட்கைக்குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினையாது, வரைந்து எய்துமென்பது பெறுதும்;

சென்ற விடத்தார். செலவிடா தீதொரீஇ
  நன்றின்பா லுய்ப்ப தறிவு.”

(குறள்-ச22) 422

என்பவாகலின். தலைமகன் இவ்வாறு கூறியதற்குச் செய்யுள்:

"வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணரைம்பான்
   மான்வென்ற மடநோக்கின் மயிலியலாற் றளர் பொல்கி
   யாய்சிலம் பரியார்ப்ப வவிரொளி யிழையிமைப்பக்
   கொடியென மின்னென வணங்கென யாதொன் றுந்
   தெரிகவ்வா விடையின் கட் கண்டவர் பொருங்கோட
   வளமைசா லுயர்சிறப்பி னுந்தைதொல் வியனக
   ரிளமையா னெறிபந்தோ டிகத்தந்தாய் கேளினி; --
   
   பூந்தண்டார்ப் புலர் சாந்திற் றென்னவ னுயர் கூடற் .
   றேம்பாய வவிழ் நீலத் தவர்வென்ற வமருண்கண்
   ணேந்து கோட் டெழில்யானை யொன்னாதார்க்கவன்வேலிற்
   சேந்துநீ யினையையா லொத்ததோ சின்மொழி;


  1. யெண்ண தார்க் (பி-ம்). - - 19