பொருளதிகாரம் - களவியல்
௱௪௯
௯௮.முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்த
னன்னய முரைத்த னகைநனி யுறாஅ
வந்நிலை யறிதன் மெலிவுவிளக் குறுத்த
றன்னிலை யுரைத்த றெளிவகப் படுத்தலென்
றின்னவை நிகழு மென்மனார் புலவர்.
என்—னின், இஃது இயற்கைப் புணர்ச்சிக் குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று.
தனியினால் தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன் தனது பெருமையும் அறிவும் நீக்கி வேட்கைமீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைமகள்மாட்டு நிற்கும் அச்சமும் நாணும் மடனும் நீக்குதலும் 1வேண்மென்றே. அவை நீக்குதற்பொருட்டு இவையெல்லாம் நிகழுமென்பது. உலகத்துள்ளா ரிலக்கணமெல்லாம் உரைக்கின்றா ராகலின், இவ்வாசிரியர் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மை யாகவும்,
“சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி” [தொல்.களவியல்-௰௧]
என ஓதுதலின், இவையெல்லாம் நிகழ்தலின்றிச் சிறுபான்மை வேட்கைமிகுதியாற் புணர்ச்சி கடிதின் முடியவும் பெறுமெனவுங் கொள்க.
முன்னிலையாக்கல் என்பது—காமக்குறிப்புண்மை அறிந்த தலைமகன் வேட்கையாற் சாரநினைத்தவழித் தலைமகளும் வேட்கைக் குறிப்புடையா ளாயினும் குலத்தின் வழிவந்த இயற்கையன்மையான் நாணமும் அச்சமும் மீதூர அக்குறிப்பில்லாதாரைப் போல் நின்றவழி அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதல்.
“ஒள்ளிழை மகளிரொ டோரையு மாடாய்
வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புரியாய்
விரிபூங் கான லொருசிறை நின்றோ
யாரை யோநிற் றொழுதனம் வினவுதுங்
கண்டார் தண்டா நலத்தை தெண்டிரைப்
பெருங்கடற் பரப்பி னமர்ந்துறை யணங்கோ
விருங்கழி மருங்கி னிலைபெற் றனையோ
சொல்லினி மடந்தை யென்றனெ ன[த]னெதிர்
முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன
பல்லித ழுண்கணும் பரந்தவாற் பனியே.” [நற்றிணை-௱௫௫]
சொல்வழிப் படுத்த லாவது—தான் சொல்லுகின்ற சொல்லின்வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல்.
“சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின்
றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ
கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப்
புலிவிளை யாடிய புகர்முக வேழத்தின்
றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்
(பிரதி)—1. ‘வேண்டுமென்றே’. 2.‘மீதூர நின்றார்’. 3. ‘கைமிக்குற்றாத லெளிதோ’.