பொருளதிகாரம் - களவியல்
௱௫௩
தலைப்பாடாமாறு , என்னை யெனின், நன்று கடாயினாய். மெய்யுறுபுணர்ச்சியினைப் பால் கூட்டும் நெறிவழிப்பட்டுப் பெற்றார்க்கு மெய்தொட்டுப் பயிறல் முதல் அறு துறையே இன்றியமையாத் துறையாக, ஏனைய இரண்டும் இடர்தலைப்பாட்டிற்கும் சேர்ந்த துறையாகலின், பொதுப்பட இரண்டற்கும் நடுவே வைத்துச் செப்ப மாக்கினாரென்க. நுகர்ச்சியும் தேற்றமும் எனப் பிரித்துக்கூட்டுக.
தீராத் தேற்ற மாவது–இயற்கைப்புணர்ச்சியுடன் முடியாத தெளிவு.
“வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்” [குறள் - ௲௱௫]
இஃது இயற்கைப் புணர்ச்சித் துறையன்று; இடந்தலைப்பாட்டின் கண் தலைமகன் கூறியது: நுகர்ச்சி பெற்றது.
“கண்டுகேட் டுண்டுயிர்த் துற்தறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே யுள” [குறள் - ௬௱௧]
என்பதோ எனின், இயற்கைப்புணர்ச்சிக்கண் நுகர்ச்சி யுற்றமை கூறிற்று என்க.
“எம்மணங் கினவே மகிழ்ந முன்றி
னனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களத்தொறுஞ்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
வெக்கர் நண்ணய லெம்மூர் வியன் றுறை
கேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.” [குறும் - ௫௩]
இஃது இயற்கைப்புணர்ச்சிப் பின்றை சொற்ற தீராத்தேற்ற வுரை. “இன்னிசை யுரு மொடு” என்னும் அகப்பாட்டுள்,
“நின்மார் படைதலி னினிதாகின்றே
நும்மில் புலம்பா னுள்ளுதொறு நலியும்” [அகம். ௫௮ ]
என்றது இடந்தலைப்பாட்டில் நேர்ந்த தேற்றம்.
“பேருச் சிறப்பின்” எட்டு என்றல்
பேரும் சிறப்பின ஆறு என்றலை எடுத்தோத்தாற் காட்டி நின்றது.
இதுவரை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும். மேல் ‘வாயில்பெட்பினும்’ என்னுமளவும் பாங்கற்கூட்டம்; மேல் தொடர்பவை தோழியிற் கூட்டம்.
க௮ - ம். சூத்திர வுரையில் ‘நன்னயமுரைத்தல்’ என்பதன் கீழுள்ள ‘சேரன் மட்வன்னம்’ என்ற செய்யுளின் இறுதியடியிலிருந்து ௯௯-ம் சூத்திரவுரையில் ‘பெற்றவழி மகிழ்ச்சியும்’ என்பதன் கீழுள்ள ‘நீங்கிற்றெறூஉம்’ என்னும் செய்யுள் வரையும் காணும் பகுதி எட்டுப் பிரதியிற் காணப்பெறவில்லை; காலஞ்சென்ற த.மு.சொர்னம்பிள்ளை யவர்களுடைய கடிதப் பிரதியில் மாத்திரம் இருந்தது; நச்சினார்க் கினியரது உரையினின்றும் எடுத்துச் சேர்கப்பட்டுளது எனக் கருதுதற்கு இடமுண்டு. இதன்பின்னர் ‘ஒடுங்கீரோதி’ என்பதிலிருந்து ௱-ம் சூத்திரவரை முடியவுள்ள பகுதியில் பெரும்பாலும் ஏட்டுப் பிரதியிற் பலவாறாகப் பிறழ்ந்து காணப்படுகின்றது. இது பொருட்டொடர்புநோக் யொருவாறு செப்பஞ் செய்யப் பெற்றுவது.
20