பக்கம் பேச்சு:சிறுவர் பாட்டு.pdf/4

@Tnse anita cbe:! காப்புரிமைக் குறியீடு இடணும். எழுத்துரு வடிவம், வரிகள் அமைவு முழுமையாக ஒத்துவரவில்லை அதனால் பச்சை வேண்டாமென்று கருதுகிறேன். உங்கள் எண்ணமறிந்து மஞ்சளாக்கவே வினவுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 13:36, 16 சனவரி 2021 (UTC)Reply

நன்றி, ஆனால் தொகுப்பு போட்டிகளில் பலர் பச்சையாக்கின பக்கங்களில் ஏகப்பட்ட தவறுகள் உள்ளனவே.... அதை எவ்வாறு சரி செய்வது.... முயன்று தவறி கற்றல் என்பதின்படி பச்சையாக்குவதையும் செய்யலாம் என்பதே எனது கருத்து... இல்லை பச்சையாக்கும் பணிக்காக ஏதேனும் தகுதிகள் உள்ளனவா.... தற்போது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நான் சில பக்கங்களை மட்டுமே பச்சையாக்கியுள்ளேன். அதுவும் பயிற்சிக்கு எடுத்துக்கொண்ட புத்தகத்தை பச்சையாக்கினேன்.... அவ்வளவே..... எனவே பச்சையாக்கின சில பக்கங்களில் உள்ள தவறினை எளிதாக சரிசெய்து விடலாம்... ஆனால் போட்டிகளில் பச்சையாக்கின பல நூறு பக்கங்களில் அநேக தவறுகள் உள்ளன. அவற்றை நாங்கள் குழுவாக சரிசெய்து வருகிறோம்.... ஒரு சிறிய தவறுகாக இப்பணியை செய்ய வேண்டாம் என கூறுவது எங்களின் ஆர்வத்தையும் பங்களிப்பையும் குறைக்கிறது.....--Tnse anita cbe (பேச்சு) 06:20, 18 சனவரி 2021 (UTC)Reply
உரையாடத் தொடங்கியமைக்கு நன்றி. ஒலிப்பதிவாக எனது பின்னூட்டத்தை, இங்குதர நுட்பவசதி இல்லாமையால், கீழகண்டவை சற்று பெரிதாகவுள்ளது. பொறுத்தருள்க.
// அதை எவ்வாறு சரி செய்வது. // எது சரியாக இருக்கும் பச்சைப்பக்கங்கள், எது சரியாக இல்லா பச்சைப்பக்கங்கள் என அறிவதில் நமக்குத் தடையுள்ளது. அதனால் தான் இத்தகைய உரையாடல் தேவை எனக் கருதுகிறேன். போட்டி என்று நீங்கள் கூறுவது இதனை (விக்கிமூலம்:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 2) என்றே எண்ணுகிறேன். வங்க மொழியில் அப்போட்டி காலத்தில் பச்சையாக்கினால் மதிப்பெண் கிடையாது என்று முடிவெடுத்து, தவறாகத் தோன்றுவதைத் தடுத்துள்ளனர். நமக்கும் அது முன்பே தெரிந்திருந்தால், நடைமுறைப் படுத்தியிருக்கலாம். உங்கள் பின்னூட்டத்தினை, இந்தப் பக்கத்தில் பிற மொழியினரும் அறியத் தாருங்கள். இந்திய அளவில், உலக அளவில் உள்ள விக்கிமூல டெலிகிராம் குழுக்களில் இணைந்து கொள்ளுங்கள். அது நாம் மேம்பட்டு சிறக்க, இன்னும் உதவும்.
// ஏதேனும் தகுதிகள் // en:Help:Contents போன்ற வழிகாட்டல் பக்கமானது 40-க்கும் மேற்பட்ட d:Q914807#sitelinks-wikisource மொழிகளில் இருக்கிறது. அதுபோல நமக்கும் இருந்தால்,சிறப்பாக இருக்கும். நாமும் சிறப்பாகச் செயற்படலாம்.
// ஒரு சிறிய தவறுகாக இப்பணியை செய்ய வேண்டாம் என கூறுவது // யாரிடமும் இதுவரை நான் சொன்னதில்லை. ஒவ்வொரு நபரிடம் இருந்தும், ஏதாவது ஒரு நுட்பத்தினை அல்லது வழிமுறையைக் கற்று, இத்தளம் சிறக்க முயற்சிக்கிறேன். நீங்கள் உருவாக்கிய இந்த பக்கத்தினால் ஊக்கம் அடைந்து, முழுமையாக இருநூல்களை(நூல்1, நூல்2) உருவாக்க, நுட்ப வழியில் துணைபுரிந்தேன். மஞ்சள் ஆக்குவதில் மட்டும் நம் உழைப்பை செலுத்தினால், நிறைய மின்னூல்களை உருவாக்கலாம் என்று பாலாஜியிடம் பேசிய போது புரிந்து கொண்டேன். அதனையே உங்களிடம் சொல்ல முயன்றேன். நுட்பமான உழைப்பே, நம்மை பிற மொழிகளோடு ஒப்பிட்டு பேச ஏதுவாக்கும். முடிந்தவரை ஒரு நூலிற்கு தேவையான குறியீடுகளை, நாமே இட்டு ஒரு பங்களிப்பாளருக்குக் கொடுத்தால், விரைந்து ஒரு நூலினை உருவாக்க இயலுமா என முயன்றுள்ளேன். விக்கிமூலம்:ஆலமரத்தடி#குறைவான_நேரத்தில்_ஒரு_மின்னூலை_உருவாக்க_ஒரு_சோதனை கண்டு, அதன் உரையாற்பக்கத்தில் கருத்திடக் கோருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 03:08, 19 சனவரி 2021 (UTC)Reply
Return to "சிறுவர் பாட்டு.pdf/4" page.