பக்கம் பேச்சு:Acrylic-article-tamil-ariviyal-kalangium-1-page19.JPG

  • இது அறிவியல் களஞ்சியத்திற்கான முதற்பதிவுச் சோதனை. மின்னூல் அல்லாமல், மின்வருடலும் செய்யாமல், எனது படமி வழியே எடுத்தப்படத்தை முதலில் பொதுவகத்தில் பதிவேற்றினேன். பொதுஉரிமத்தில் இந்த பக்கம் உள்ளது என்பதை அங்கு தெரிவிக்கா விட்டால், OTRS செயற்திட்டத்தால் நீக்கிவிடுவர். பிறகு இப்படத்தை எனது கணக்கினுள் உள்ள கூகுள் கோப்புச் சேமிப்பகத்திற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து கூகுள் எழுத்துணரி மூலம், எழுத்தாவணமாக மாற்றினேன். இது மெய்ப்புப் பார்க்கப்பட வேண்டும். இணைய இணைப்பில்லா நிலையில் செயற்பட வல்ல(கூகுள் தொழிற்நுட்பம் அல்லாத) எழுத்துணரி இருப்பதாக ,திரு. தமிழ்ப்பரிதிமாரி, உதவி இயக்குனர், தமிழ் இணையக் கல்விக் கழகம் தெரிவித்துள்ளார். இது போன்ற பல பிற நுட்பங்களைக் கொண்டு, இது ஆராயப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். கணித்தமிழ்ப் பேரவையை இத்திட்டத்தினை வளப்படுத்த பயன்படுத்தக் கோர உள்ளேன். --தகவலுழவன்உரையாடல் 07:53, 20 அக்டோபர் 2015 (UTC)Reply
  • மூர்த்தியுடன் உரையாடிய போது, படத்தின் அளவைக் குறைத்தால், குறைந்த அலைக்கற்றையில் செயற்படும் இணைய இணைப்பில், தொகுத்தலுக்காகப் பக்கம் விரைவாகத் தோன்றும் என்பதை அறிந்து, அதன்படி, இன்று பட அளவை, பொதுவகத்தில் குறைத்தேன்.--தகவலுழவன்உரையாடல் 14:22, 21 அக்டோபர் 2015 (UTC)Reply
Return to "Acrylic-article-tamil-ariviyal-kalangium-1-page19.JPG" page.