மலரும் உள்ளம்-1/அணில்

அணிலே, அணிலே, ஓடிவா.
அழகு அணிலே, ஓடிவா.
கொய்யா மரம் ஏறிவா.
குண்டுப் பழம் கொண்டுவா.
பாதிப் பழம் உன்னிடம்;
பாதிப் பழம் என்னிடம்;
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/அணில்&oldid=1724521" இலிருந்து மீள்விக்கப்பட்டது