மலரும் உள்ளம்-1/நிச்சயம்.

வண்ணச் சோலை தன்னிலே
வளரும் செடிகள் நிச்சயம்.
வளரும் செடிகள் மீதிலே,
மலர்கள் உண்டு நிச்சயம்.

மலர்கள் தம்மைத் தேடியே
வண்டு வருதல் நிச்சயம்
வண்டு தேனை வாரியே
கொண்டு போதல் நிச்சயம்.

கொண்டு சென்ற தேனையே
கூட்டில் சேர்த்தல் நிச்சயம்.
கூடு தன்னை மாந்தர்கள்
குலைத்து விடுதல் நிச்சயம்.

அழகு மிக்க கூட்டினை
அழித்து, நல்ல தேனையே
அடைய வேண்டின் அழியுமே,
ஆயிரம் உயிர், நிச்சயம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/நிச்சயம்.&oldid=1724782" இலிருந்து மீள்விக்கப்பட்டது