விடுதலை வீரர்கள் ஐவர்/மருது பாண்டியன்

௨. மருது பாண்டியன்
[தி. கு. நடராசன், எம்.ஏ, பி.டி.,
கந்தசாமிக்கண்டர் கல்லூரி, வேலூர், சேலம்]

விடுதலைப் போரின்கண் விடுதலைப் பெற்றுப்புகழ்

படுதலைக் கொண்டோரைப் பாடுதலைத் தொழிலாக்கி

வரும்படி(க்கு) அழைத்த வானொலியே ! வந்துகவி

தரும்படி கேட்டுவக்கும் தமிழ்நெஞ்சே வணங்குகிறேன்


தலைவர்

தலைகொடுத்துநமக்குவிடுதலை கொடுத்தவர் கவியரங்கில்

தலைமை கொடுப்பவரோ தமிழுக்குக் கல்லக்குடியில்

தலைகொடுத்தவர்! பொதுப்பணியில் தாயகத் தமிழுக்குத்

தலைமை கொடுத்தவர்! தன்துறையில் கொண்டதைக்

கருதிச் செயலாற்றும் “கலைஞர்” எனவுரைக்கும்

பொருளாளர்! அவருக்குப் பொன்னிமகன் வணக்கம்!


தலையாடி இத் தமிழாடி! தாளாடி மாற்றான்

தலையாடிஓட மருதுவோ தமிழில் ஆடியவன்

போராடிப் போர்ஆடிப் புகழாடிக் கொண்டாடி

சீர் ஆடிப் போகாத சிறப்பாடி ஏற்றவன்

மார்கழிக்கும் வேர்வையும் மறம்கொழிக்க, வஞ்சித்தோர்

மார்கழிக்கும் மறவனவன்! மானத்தை மதித்தஊமைத்

துரையுடன் கொண்டிருந்த துணையுடன் வெள்ளைத்

துரைத்தனத்தைத் தூளாக்கிய தோளினத்தைக் கொண்

இத்தரை வேண்டி எதிர்த்தவர் அத்தழையோட இவண்

சித்திரை நெருப்பென் முத்திரை பொறித்தவன் ஆ! நீயா என்று அதிர்ந்தவர் முன்னரங்கில்

பார்நீ இங்கெனப் பாசறைத் தலைவனாய்

ஆடி முடித்தவனே ஆடிக் கடைசியில்

பாடி வரச்சொன்னார் பாட்டைத் தொடங்குகின்றேன்.


பொங்கிவரும் புகழ்வேண்டிப் போராடும் வீரரொடு

செங்காளத்துப் போரினில் சிந்திய குருதியே

சிவப்புக் கங்கையாய்ச் சீறியோட அந்தச்

சிவப்புக் கங்கையேபின் சிவகங்கை யாயிற்று.

ஊர் நிறைந்திருக்கும் உலகத்துக் கோடியெங்கும்

போர் நிறைந்திருக்கும் படியான அவ்வூரில்,


வீர வெறியோடு வெற்றிப் பட்டயத்தை

ஈர ஓலையில் எழுதிவைத்தவர் பலருண்டு

மலைதடவும் இருதோளும் மழைதடவும் இருகரமும்

இலைதடவும் வடிவேலும் கொலைதடவும் கூர்வாளும்

கொம்பென்ற மீசையும் கொடிக்கம்ப நிலையும்

வம்பென்று வந்து வளைத்தவரின் தலைசீவ

கங்கை பின்வருவி சிவகங்கை யாகச்

செங்களம் பட நின்ற சிங்கங்கள் மருதிருவர்!

அடிகட்டிப் பின்னர் முடிகொண்ட கோபுரம்போல்

கொடிகட்டி ஆண்டார்கள் குருதிக்கும் நிலத்திற்கும்

கூட்டுறவை வைத்துக் கொண்டிருக்கும் உரிமையில்

நாட்டுறவை நெஞ்சில் நாட்டிவைத்த மாவீரன்

‘எங்களப்பன்’ என்ற இனிமையின் பான்மையில்

கங்கைச் சீமையில் தங்கிப் பாராண்டநாள்

தென்பாண்டித் திருநாட்டின் தீரன் ஊமைத்துரை

முன்பாண்ட இடம்விட்டு முள்ளாண்ட காடுறைந்து

மண்ணாசை கொண்டு மனத்தாசை வைத்த

பொன்னாசைக் காரர்பின் போராசை கொண்டிங்கு மண்ணளக்க வந்தவரை விண்ணளக்க வைப்பேன்

என்னாசை இவ்வாசை என ஆசை பேசினார்க்குத்

துணையெனத் திரண்டான் தோளிரண்டில் வீரக்

கணையத்து வைரத்தைக் கட்டிவைத்து மூண்டெழுந்தான்

துரைவந்த இடம் நோக்கித் தூளாக்க ஊமைத்

துரைவந்தான் மருதோடு துணைவந்தான் எனும்படி

வேளைவந்த தென்று வேலை வேலையிலிட்டு

வாளைச் சுழற்றுமிடம் ஆளை மாய்த்திட்டான்

பழமான இதயமும் பழம்மான நெஞ்சம்

வளமாகப் பெற்றவன் வளமான உற்றவன்

வெள்ளை மருதென்றாலே வெள்ளையர்கள் கொண்ட

உள்ளம் தடுமாறும் உடம்பெங்கும் நடுநடுங்கும்

படி,சிவ கங்கைப் படியேறித் துணிவோடு

நடிக்க வந்தவரின் நாடகத்தை முடித்திட்டான்

மணிரத்தம் கொள்வார்முன் மனரத்தம் இழப்புதாஎன

பெண்,ரத்தம் தரவந்த பெண்ரத் தினம்வேலு

நாச்சியாரின் பார்வை நாற்றுக்கு விளைவாகிப்

பேச்சிழந்தும் வாளால் பேறிழக்க மறந்தானா?

முத்து வடுகநாதன் முழக்கமிட்ட மறக்களத்தில்

சத்தமிட்ட ஈட்டியால் முத்தமிட்டான் பகையை!

இரும்பிடர்த் தலையார்போல் வருமிடர்க் களைந்தவன்

கிருட்டின தேவனை விரட்டியவன் போன்றவன்

குருதி குளித்திருக்கும் கொடுவாள் கண்டு


மருது சிவந்தான்! மங்கையவளும் சிவந்தான்!

கார்வண்ணன் தான் ஆனாலும் கட்டழகன் அவளுக்கு!

போர்வண்ணன் இமயமலைப் புயவண்ணன்! எதிர்த்த

கொங்கரை விரட்டிய கோமகன் போன்றுசிவ

கங்கையைக் காத்தவன்! தம்கையை நம்பியவன்

காளையார் கோயிலைத் தாக்கிய காளையரைக் காளையார் பாரென்று கண்டதுண்ட மாக்கிக்

காசால் அடித்தவனைக் கசையால் அடித்துஅவனைப்

பேசாச் சிற்பமாக்கிப் பேய்ச்சிரிப்பு சிரித்திருந்தரன்!

விரிந்த காட்டுக்குள் வேங்கையென வாழ்ந்தவன்

சரிந்தவரை எண்ணிச் சரித்திரம் அடுக்கியவன்,

கொடியவர் துரத்தும்பூங் கொடியவள் வேலுவைத்தன்

பிடிக்குள் அடக்கிப்டகைப் பிடிக்குள் படுத்தாமல்

குண்டுக்கு வடுகநாதன் குறியான போது

திண்டுக்கல் லுக்குத்தீரன் கொண்டு வந்தான்

அம்புபாய்ந்த நெஞ்சுக்குள் அன்புபாய பகைக்

கும்பலை ஒழித்தான் கொடிமுல்லை சிரித்தாள்!


அதனால்......

சீமையில் பொருள்பெறாத சீமையர்கள் மீண்டுமந்த

ஊமையின் தோழர்க்கே சீமையினைத் தந்துப்

பின்போனார்! வெள்ளைமருதோ பேருவகை உந்தப்

பின்போனான்! மண்கொள்ளப் பின்போனான் அவன்பின்

சின்னமருது வீரத்தின் சின்னம் மருதென்பான்[னே

இன்னல் களைதற்கு இணைக்கரம் போலெழுந்தான்!


அவனோ ......

அறத்தின்பால் வைத்திருந்த அன்பால், பொருட்பால்

சிறப்பால்... குன்றின்பால் சேர்ந்த முருகன்பால்

காமத்துப் பால்கொண்ட காரணத்தின் பால்முப்பால்

பாமணக்கும் தமிழின்பால் பாசமுற்ற தின்பால்

குன்றைக் குடித்தவனைக் கோயிலில் குடியேற்றக்

குன்றக் குடியினில் கோயிலைக்கட் டுவித்தான்

தேனாட்சித் தமிழும் மீன்ஆட்சி அரசும்

கோனாட்சி செய்திருந்த மீனாட்சி ஆலயத்தில்

இராத் திரிக்கு விளக்கேற்றி இருஆட்கித் தீபத்தின் இரா திரிக்கு உணவாக ஆவியூர் அளித்திட்டான்

பதிப்பித்துக் கொண்டபற் றிலேதிருக் கானத்தைப்

புதுப்பித்தான் புதுப்பித்தால் பெருந்தேர் உருட்டினான்

வீரக் கொடுவாள் விளையாடிச் சிவப்பேறிய

ஈரக் கையினால் வாரிக் கொடுத்துவந்த

மருதப்பன் நாடெங்கும் மக்களப்பன் ஆனவன்

ஒரு நாள் பசியால் ஒட்டிய வயிறோடு

களைப்பால் தடுமாறி களையப்பிய முகம்வாடி

மலைப்பால் சாய்ந்தான் மலைபோல் விழுந்தான்.

கீழே விழுபவனை ஓர்கிழவி ஏழையெனக்

கூழைக் கொடுத்தாள் கூழைக் குடித்தவனோ

“தாயே பெயரென்ன? “எனத்தடுமாறிக் கேட்டானவள்

“தாயம்மாள்” என்றாள்! “தாய்அம்மாள் நீயே;

வாழக் கூழ்கொடுத்து வாழ வைத்தாய்

ஏழையா நீ? என்நெஞ்சே ஏழையம்மா” என்று

பாமூரில் காத்தஉன் பழுத்த அன்பிற்குக்

கூழுர்என இவ்வூரினிக் குறிக்கட்டும் எனச்சொல்லி

எழுதிக் கொடுத்துவிட்டு ஈரத்தால் போனவனை

வழுத்தி வைத்திருக்க வையத்தில் வாழுகின்றான்

‘மருது’எனும் பெயரால்! மதுரைக்கும், கொச்சையாய்

மருதைஎன வழங்கும் மதுரச்சொல் லால்பின்னே

கமுதிக் கோட்டைக்குள் கால்வைத்த பகைவரை

அமைதிக் கோட்டைக்கு அழைத்துப் போனான்

திருப்பூ வனத்தை விரும்பியவரைச் சாவூரெனும்

திருப்பூருக் கனுப்பிவிட்டுத் தீவாளைமுத்த மிட்டுச்

சாமியென ஊரவர் சாற்றும்படி சிவகங்கைப்

பூமியில் வீற்றிருந்தான். பொழுதுகள் மாறிப்

பெருவயல் எங்கும்ஒளி பெய்கின்ற காலையில்

சிறுவயலைத் தாக்கினர் சீறும்வய வேங்கை கத்திமுத்த மிடக்காத் திருந்தவேளை யென்று

ஒத்திகை யாட்டத்தை ஒக்கலில் முடித்துடன்

மரவியல் களங்கண்டான் மனவயல் பிளவுண்டு

சிறுவயல் தீ நாக்கின் சிறைவால் ஆனதைக்

கண்களால் கண்டன் காணாது கண்டவனோ

புண்ணாக்கி நெஞ்சைப் புரையோடும் புண்ணாக்கித்

தொண்டை மானின் தொண்டை எண்ணிச்

சண்டைக் காடானதென் பாண்டிமண் டலத்தைக்

கண்ணீரால் அவித்துக் கைகளில்முறுக் கேற்றிக்

கொண்டிருந்தான் எட்டப்பன் கூலிகளை நினைத்துக்

காளையார் கோயிலுக்குள் காளையவன் பறந்து

வானைப் பாய்ச்சியங்கு ஆளை மாய்த்திட்டான்

உடையண்ணத் தேவரின் உடைமாற்றி விட்டங்குப்

படைகொண்ட வெள்ளையரோ பணத்தாசைக் காட்டிய

மேலூரில் மருது வாளால் சந்தித்து   [தை

மேலூர்க்கே அனுப்பி வேடிக்கை காட்டினான்

வளரித்தடி கொண்டுவளைத்த போதுஉயிர் மீண்ட

கிளர்ச்சித் தீயனார் களம்போன மங்கலம்

படைகொண்டான் சங்கரப்பதிப் பாடி வீட்டை

இடைவந்த சாதி ஈனர்கள் கும்பினிக்குக்

காட்டிக் கொடுத்திருந்த கள்ளத் தனம்கண்டு

ஈட்டியால் சந்தித்தார் இருவரும் ஆனால்

வெள்ளை மருதுவோ வெள்ளையன் குண்டுக்கு

உள்ளம் கொடுத்து உடல்சாயும் நேரம்

கட்டபொம்மன் பின்னவனும் கட்டிவைத்த வனப்பைக

கொட்டி வைத்திருக்கும் குமரப்பன் சின்னவனும்

கல்லும் மண்ணும் கண்டிரங்கக் கலங்கிச்

சொல்லும் கண்ணீரின் சோகத் திரைவிளிம்பில்

சார்த்திக் கொண்டு சாமகானம் பாடுகையில் நேர்த்தியான நேரமென நெடுவிலங்கு பூட்டினர்

கன்னித் தமிழ்ரத்தம் காய்ந்ததோ என்றே

எண்ணி கழுந்திருந்த இளையவனைக் கண்டவர்கள்

வெள்ளிக் காசுக்கு வெள்ளிப்பல் காட்டியவர்கள்

எள்ளி நகையாடி. ஏளனப்பண் பாடினர்

திருப்பத்தூர் நடுவே தீரன் சின்னவனை

விருப்பத்தூர் அனுப்ப விரைவுடன் தூக்குக்

கயிற்றில் தொங்கவிட்டுக் காற்றில் மிதக்கவிட்டார்

வயிற்றில் தீவளர்த்து வந்தனைச் சுதந்திரத்தின்

களங்காணத் துடித்த காளையினை நம்மவரே

களப்பலி யாக்கிக் களிப்படைந்தார்! அவனோ

“முள்ளால் கீறியவையும் சொல்லால் கூறியவையும்

எள்ளால் இறைத்தவையும் இருக்கட்டும்” என்றதைக்

கேட்டிருந்த தமிழ்நெஞ்சே வேங்கையைத் தூக்கில்

போட்டிருந்த தமிழ்மண்ணே போர்வாள் முனையிலே

மண்ணை மதித்துப்பின் விண்ணை மிதித்தவனை

எண்ணத்தில் வைத்திடுவாய் என்றிடுவேன் முடிப்பேன்!