1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter- 1 Of Heaven and the Elements

A VOCABULARY

CHAPTER I.

௧-ம் தொகுதி

Of Heaven and the Elements.

வானமும் பஞ்சபூதியத்தினுடையவும்.

The Supreme Being. ராபரவஸ்து
The Creator சிருஷ்டிகர்
The Creation சிருஷ்டிப்பு
A Creature, a Created being ஒரு சிருஷ்டி, சீவன்
A Soul ஒரு ஆற்றுமா
An Animal, a Dumb creature மிருகம்
An Intellectual being., A Human being நரசீவன், மனுஷன்
The Universe சர்வ லோகம்
Heaven வானம்
Purgatory உத்தரிப்புஸ்தலம்
Hell நரகம்
The Firmament ஆகாச விரிவு
The Empyreal heaven பரமண்டலம்
The Ethereal heaven ஆகாசமண்டலம்
Sky ஆகாசம், நட்சத்திர மண்டலம்
The Azure sky இருள் வானம்
The starry sky சோதி மண்டலம், சோதிச் சக்கரம்
The starry heaven நட்சத்திர வானம்
Stars நட்சத்திரங்கள்
Luminaries வானசோதிகள், வெளிச்சங்கள்
A fixed star உறுதி நட்சத்திரம், நிலையிலுற்ற நட்சத்திரம்

A wandering star நிலையில்லாத நட்சத்திரம்
An Errant ஒரு கிரகம்
A shooting star, Fiery meteor வானத்திலிருந்து தெரித்து விழுகிற நெருப்பு
The Balancings அம்பரத்தில் தொங்கப்பட்டவைகள்
A Planet ஒரு கிரகம்
Primary planet பிரதான கிரகம்
secondary planet இரண்டாவதான கிரகம்
The Sun சூரியன்
The Moon சந்திரன்
Mercury புதன்
Venus வெள்ளி
Earth பூமி
Mars செவ்வாய்
Jupiter வியாழம்
Saturn சனி
Satellites or Moons சிறு கிரகம்
A Comet வால் நட்சத்திரம்
A Constellation நட்சத்திர இராசி
The Rotation பூமியுருளுதல்
The Revolution வட்டமிட்டோடுதல்
The Occultation பதிவு
The Declination தாழ இறங்குதல், உச்சத்தை விட்டிறங்குதல்
The equation of time சூரியவட்டத்தின் கால வித்தியாசம்
The Conjunction இராசிவட்டத்திற் கிரகங் கூடுதல்
The Motion அசைவு, பிறஸ்தலமாகுதல்
The Milky Way or Galaxy பால் வீதி மண்டலம்
Light வெளிச்சம்
Darkness அந்தகாரம்
Splendour சூரியன் காந்தி, ஒளிவு
The Orbit கிரகத்தின் வட்ட வழி
The Disk சூரியப் பிறவை
The Rays சுடர்
The sun beams சூரியகாந்தி
New Moon அமாவாசை

The Phases of the Moon திதி
The Horned moon நிலாபிறை
The Crescent or moon in her increase வளர்பிறை
The decrescent or moon in her decrease தேய்பிறை
The half moon அஷ்டமி
Full moon பவர்ணமி, பூரண சந்திரன்
An Eclipse கிறணம்
Eclipse of the sun சூரியகிறணம்
Eclipse of the moon சந்திரகிறணம்
The Duration கிறணம் பிடித்திருக்கிற பரியந்தம்
The Emersion சந்திராதித்தர்விம்பங்காணுதல்
The Immersion மறையுதல்
The Elongation நீட்சி, கிறகம், ஒன்றுக்கொன்றிருக்கிற தூரம்
Total Eclipse முழுக் கிறாணம்
Partial Eclipse பாரிசக் கிறாணம்
Annular Eclipse வட்ட கிறாணம்
Sun shine வெய்யல்
Moon shine நிலா வெளிச்சம்
The quarters of heavens வானத்தின் திசைகள்
East கிழக்கு, கீழ்த்திசை
West மேற்கு, மேற்றிசை
South தெற்கு, தென்றிசை
North வடக்கு, வடதிசை
Eastern, Oriental கீழ்த்திசையான, கீழ்ப்புறமான
East-ward கிழக்கே
Western, Occidental மேற்றிசையான, மேற்புறமான
West-ward மேற்கே
Southern, Austral தென்றிசையான, தென்புறமான
South-ward தெற்கே
Northern, Boreal வடதிசையான, வடபுறமான
North-ward வடக்கே
The Cardinal points பிறதான திக்கு, கோணங்கள்
The Equator பூச்சக்கரத்தைச் சுத்திலும் வடக்குக்குந் தெற்குக்குமிருக்கிற நடு மையம்
The Meridian மத்தியான எல்லை
The Zodiac இராசியெல்லை
A Sign இராசி
THE TWELVE SIGNS OF THE ZODIAC பன்னிரண்டு இராசி
Aries மேஷம்
Taurus ரிஷபம்
Gemini மிதுனம்
Cancer கற்கடகம்
Leo சிங்கம்
Virgo கன்னி
Libra துலாம்
Scorpio விருட்சிகம்
Sagitarus தனுசு
Capricornus மகரம்
Aquarius கும்பம்
Pisces மீனம்
A meteor, a Phoenomenon வானத்திற்காணப்பட்ட விசேஷித்த அடையாளம்
The Hemisphere பாதிவானம்
The Atmosphere or Ambient air மெகங்கள் மட்டும் பூமியைச் சுற்றியிருக்கிற அம்பரம்
The Horizon அடி வானம்
The Tropics அபனத்தின் இரண்டு எல்லைகள்
A Region ஒரு திக்கு, திசை
A Climate ஒரு திசை
Hot Climate உஷ்ண தேசம்
A Wholesome climate ஆரோக்கியமான தேசம்
A Sphere ஒரு சக்கரம்
A Globe ஒரு உண்டை
A Circle ஒரு வட்டம்
A Celestial Globe வான உண்டை
A Terrestial Globe பூச்சக்கரம்
A Degree பூச்சக்கரத்தில் (௩௱௬௰ பங்கில் ஒரு பங்கு

The Latitude பூச்சக்கரத்தின் தெற்கு வடக்குச்சுற்றளவு
The Longitude பூச்சக்கரத்தின் கிழக்கு மேற்குச் சுற்றளவு
The Poles of the world பூச்சக்கரத்தின் முனைகள்
Arctic Pole வடமுனை
Antarctic Pole தென்முனை
The Polar Circle முனைச் சக்கரம்
Zenith மேலுச்சம்
Nadir கீழுச்சம்
Zone ஒரு சக்கர புறம்
The Torrid zone உஷடண சக்கர புறம்
The two temperate zones இரண்டு சாந்த சக்கர புறங்கள்
The two Frigid zones இரண்டு குளிர் சக்கர புறங்கள்
THE ELEMENTS பஞ்சபூதியம்
Water நீர்
Fire அக்கினி
Earth பூமி
Air ஆவி
THE FOUR PARTS OF THE WORLD பூச்சக்கரத்தின் நாலுபுறமான பங்குகள்
Europe ஐரோப்பா
Asia ஆசியா
Africa ஆப்பிரிக்கா
America அமேரிக்கா
The Spring ஊத்து
Hill Spring சுனை
Well Spring கயம், கிணத்தூற்று
The Stream நீரோட்டம், ஓடை
The channel or canal நீர்க்கால், வாய்க்கால்
The mouth or entrance வாய்
The bed of river ஆற்றுக்கால்
A Brook மடு
An abyss, abysm or bottomless pit பாதாளம், கெடிலம்

A Whirl pool சுழல் தண்ணீர், நீர்ச்சுழி
A Bubble நீர்க்குமிளி
An Inundation, Over flowing வெள்ளம், பெருக்கு
A Flood, a Deluge சலப்பிரளையம்
A Dike வாய்க்கால்
A sluice கலிங்கு, மதவு
A Gullet கலிங்குகால்
A Cascade, a waterfall செங்குத்தான, இடத்திலிருந்து நீர் பாயுதல்
A Fountain ஊற்று
A Tank, a pond குளம், ஏரி
A Pool குட்டை, மடு
A Dam அணை
A Floodgate முகற்றுவாரம், மதவு
A River ஆறு
A Rivulet ஏரி
The Sea கடல்
A Rolling sea அலை துரிதமான கடல்
Rough sea மும்மரமான கடல்
Great or turbulous sea கொந்தளிக்கிற கடல்
The Mediterranean sea பூச்சக்கரத்து; (௩) திசைகளுக்கு நடுசமுத்திரம்
The Ocean நடுசமுத்திரம்
Waves, Billows அலை
Tide of flood or flow ஏற்றம்
Tide of Ebb or Ebb வற்றம்
Flux and Reflux ஏற்றம் வற்றம்
A Gulph குடாவு, கடல்கிளை, பாதாளம்
A Bay குடாக்கடல்
The Shoal கடலின் திட்டு
A Lake தடாகம்
A Creek கடற்கால், சின்னக்குடா
Roads கடல்வழி
Offing கரைகிட்டான சமுத்திரம்
A Strait கணவாய், கடற்கால்

A port, Harbour or Haven குடாக்கடல், கரை, துறை
A Sea port Town கரை, துறைப் பட்டணம்
The Shore கடற்கரை
Bank கரை மேடு
Beach சமுத்திரக் கரை
A Mole குடாக்கடல், அணை
A Coast கரை துறை, கரை துறை தேசம்
A Shallow, a Ford நிலைப்பு, பரவுதண்ணீர்
The Surfs மூன்றலை
A Wharf or Quay சரக்கு ஏற்றவும் இறக்கவுமான கரை மேடு
The Brink ஆத்துக்கரை, ஏரிக்கரை
A Continent தீவில்லாத பூமி
An Inland Country நாடு, நாட்டுப்புறம்
A Firm or Mainland தீவில்லாத தேசப்புறம்
A mediterraneous country நடுதேசப்புறம்
An Isle தீவு
An Island தீவான தேசம்
A peninsula ஒரு பங்கு குறைய மற்றதெல்லாந் தண்ணீராற் சூழ்ந்திருக்கப்பட்டபூமி
Isthmus மேற்சொன்ன பங்கின் பெயர்
A promontory கடல் முனை
A Cape, a Headland கடல் முனை தேசம்
A Cluster of Islands ஒன்றுக்கொன்றுகிட்டான தீவுகள்
A Rock கற்பாறை, கல்மலை
A Hill ஒரு மலை
A Ridge of Hills ஒரு வரிசையாயிருக்கிற அநேக மலைகள்
A Track of Hills ஒன்றோடொன்றாயிருக்கிற மலைகளின் வரிசை
A Hillock குன்று, கல் மேடு
A Mount, Mountain பறுவதம், மலை
A chain or Range of mountains ஒன்றின் பின்னொன்றாயிருக்கிற மலைகளின் வரிசை
A Tapering Mountain சிகரங்கூரான மலை

A Topping Mountain மகாவுயரமான பறுவதம்
A Land ஒரு நாடு, ஒரு தேசம்
A Track of Land சில தூரம் போகிற நாடு
A Moor Land சதுப்பு நிலமான நாடு
A Marsh, Fen, Bog சதுப்பு நிலம்
A Quagmire அதிர்த்தலுள்ள சதுப்பு நிலம்
A Pit ஒரு பள்ளம், குழி
A Salt pit or pan உப்பளம்
A Slough பள்ளச் சேறு, உளைக் குட்டை
Mud சேறு
Slime, Mire உளை
The Clay களிமண்
A Cause Way மேடான வழி, மேடாக்கப்பட்ட வழி
A Cliff செங்குத்தான கல்மலை
A Precipice செங்குத்தான கல் மலை
The Peak, Ridge or Summit சிகரம், குவடு
The foot of Mountain மலையடி
A Cloud மேகம்
A Rainy cloud மப்பு
Rain மழை
A Shower மழையிறக்கம், கன மழை
A Drizzling Rain தூறல்
A Sluicy rain, a storm of rain பலத்த மழை
A Peal of rain, a Heavy rain கன மழை
A Storm, Tempest பிசல், பெருங்காற்று
A Stress of weather பிசல்
A Hurricane பெருங்காற்று
Monsoon மழைக்காலம், திட்டகாலத்துக் காற்று மழை
Snow உறைந்த மழை
Hail, Hailstone ஆலங்கட்டிமழை
The Frost மகாக் குளிர், நீருரைகிற குளிர்
Hoary Frost ஆலங்கட்டி
Fog or Mist மூடுபனி

Ice உறைந்த நீர்
Dew பனி
The Damp, Mildew கருக்சாயிருக்கும் பனி
A Blast பயிர் தீச்சுங்காற்று
The Rime உறைந்த பனி
A Vapour நீராவி
An Exhalation ஆவிப் பறியுதல்
A Drop ஒரு துளி
A Flash of water தண்ணீர் தெறித்தல்
Thunder குமுறல்
Thunder-bolt இடி
Thunder Clap இடி முழக்கம்
The Peals of Thunder இடி முழக்கம்
An Eruption வெடிப்பரியுதல்
An Explosion நெருப்பெரியுதல்
Lightning மின்னல்
A Flash of Lightning மின்னல் கொடி
The Rain-bow பச்சைவில்லு, இந்திர தனுசு
Wind காத்து
The Trade wind திட்டகாலத்தின் கடற்காத்து
The Whirl vind சுழற்காத்து
A Gentle wind குளுங்காத்து
A Breeze கடற்காத்து
A Gale of wind வீசியடிக்கிற காத்து
A Puff of wind காத்து வீச்சு
A Flaw of wind காத்து மோதுதல்
A Zephyr மேற்காத்து
The East-wind கீழ்க்காத்து
The West-wind மேற்காத்து
The South-wind தென்காத்து, தென்றல்
The North-wind வடகாத்து, வாடை
A Flame, Blaze சுவாலை
Heat அனல், காங்கை
Warmth காங்கை
A Spark of fire தீப்பொறி
A Smoke புகைச்சல்
A Fuming trail புகைக்கால்

Soot ஒட்டடை
Wood மரம்
A Log or Billet of wood ஒரு துண்டு கட்டை
A Faggott விறகு கட்டு
Brushwood, Bavin செத்தை, சரகு
Chips, Splinter சிராய்
Coals, Charcoal கரி
Pit Coal கற்கரி
Sea Coal கடற்கரி
Small Coal பொடிக் கரி
Live Coal தணல்
A Firebrand கொள்ளி
Beats, Turf புல்லு, செத்தை
Cinders தணற் பூர்ந்த சாம்பல்
Ashes சாம்பல்
Embers தணற் சாம்பல்
Fuel, Firewood விறகு
Conflagration அக்கினிப் பிரளையம்