1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter- 2 Of Man and parts of the human body

CHAPTER II.

௨-ம் தொகுதி

OF MAN AND PARTS OF THE HUMAN BODY.

மனுஷனும் உடற்கூறு தத்துவத்தினுடையவும்.

Section First முதற்பிரிவு
A Body சரீரம், ஒரு வஸ்து
An Animated Body உயிர்ப் பிராணி, சீவனுள்ள வஸ்து
An Inanimated Body சீவனற்ற வஸ்து
A Man ஒரு மனுஷன்
A Woman ஒரு இஸ்திரி
A Sex ஒரு சாதி, லிங்கம்
A Tribe ஒரு கோத்திரம், சாதி, குலம்
A Nation ஒரு சாதி, ஒரு தேசத்துசனம்
The Fair Sex இஸ்திரி சாதி
The Male Sex புருஷ சாதி
A Child ஒரு குழந்தை, பிள்ளை

An Infant, a Babe பாலகன், சிறு குழந்தை
A Sucking Child சிசு, பாலகன்
A Bachelor விவாகமில்லாதவன்
A Maid, a Girl குமரி
A Boy, a Puny பையன்
A Virgin கன்னி
An Old Maid விவாகமில்லாமல் வயது சென்ற கன்னி
A Youth, Lad இளைஞன்
A Promising youth நல்லவனாவானென்று நம்பிக்கையுண்டாக்கத் தக்கன வாலிபன்
A Young Man வாலிபன்
A Lass,a Young woman குமரி
The Age வயது, பிராயம்
The Childhood சிறுவம்
Nonage சிறு வயது
Minority கொஞ்ச வயது
Virginity, Maiden head கன்னிகை, கன்னிதத்துவம்
Juvenility, Youthfulness வாலிபம், இள வயது
The Flower or Bloom of age எவ்வற்ணம்
Puberty, Maturity விவாகம் பண்ணத் தக்கன வயது, பருவம்
Manhood, Verility ஆண்மை, ஆண்மைத்தனம்
Womanhood, Muliebrity பெண்மை, இஸ்திரிதத்துவம்
Middle Age நடுப் பிறாயம்
Stricken in years வயது சென்ற
The Decay or Decline of age வயதின் குறுமை
The Old age விறுதாப்பியம், விறுத்த வயது
An old Man or Man in years விறுத்த கிழவன்
An old Woman or in years விறுத்த கிழவி
Old Folks பெரிய மனுஷர்
A Tall man உயர்ந்த மனுஷன்

A Middle sized man மட்டதிட்டமானவன்
A Short man குள்ளன்
A Giant ராட்சதன்
A Man of Extraordinary size ராட்சதன், அவலட்சணன்
A well Proportioned or a well made man லட்சணப் பிரமாணமுள்ளவன்
An Amazon, Virago ஆண்மையுள்ள இஸ்திரி
A Dwarf, a Pigmy சித்திரக் குள்ளன்
An Hermaphrodite பொட்டையன்
Section Second. இரண்டாம் பிரிவு
The Body சரீரம், திரேகம்
The Members, Limbs அவையவங்கள்
The Trunk உடல்
The Head தலை
The four parts of the head முன்னந்தலை
The hinder part of the head பின்னந்தலை
The crown of the head உச்சந்தலை
A Nod சிரகம்பம்
A sign of the hand, a Beck கரகம்பம்
The Skull கபாலம், மண்டை
The Forehead நெற்றி
The Face முகம்
The Features முகரூபு
An Eye கண்
The Eyes கண்கள்
The corner of the Eye கண் மூலை, கடைக்கண்
The white of an eye வெள்ளை விழி
The Apple or Sight கண்விழி, கண்மணி
The Socket of an Eye கண்கூடு
The Eye-brows கண் புருவம்
The Eye-lashes கண் மயிர்
The Eye-lids கண் ரெப்பை
The Nose மூக்கு

The tip of the Nose மூக்கு முனை
The Nostrils நாசி
The Bridge of the nose மூக்குத் தண்டு
The Mouth வாய்
The Lips உதடுகள்
The Upper Lip மேலுதடு
The Under Lip கீழுதடு
A tooth ஒரு பல்லு
Teeth பல்கள்
The Fore teeth முன்னம்பல்கள்
The Eye teeth நாய்ப்பல்கள்
The Jaws or Grinders கடைவாய்ப் பல்கள்
The Incisors முன்பல்கள்
Young teeth இளம்பல்கள்
A Gag tooth பரும்பல், நீக்குப்பல்
A Snag tooth சிங்கப்பல்
The Socket of a tooth தொறுக்கை
A Loose tooth அசைகிற பல்
An Artificial tooth கட்டப்பட்ட பல்
The Gums ஈறு
The chop, jaws or jaw bone தாடை
The tongue நாவு
The Palate மேல்வாய்
The Cheek கன்னம்
A Dimple கன்னப் பள்ளம்
The Chin முகக் கட்டை
The Beard தாடி
Whiskers, Mustaches மீசை
The Temples நெற்றி
An Ear காது
Ears காதுகள்
The Drum of an Ear, tympanum செவியின் குழாய்
The tip or gristle of an Ear காது மடல்
Hair மயிர்

A Lock of Hair, a teft of Hair கொத்து மயிர், குடுமயிர்
A Weft of Hair பின்னல் மயிர்
The Neck கழுத்து
The Nape of the Neck பிடரி
The throat தொண்டை
Adam's Apple தொண்டைக்கணு
The Bosom மார்பு, மடி
Breast மார்பு, முலை
Bubbies,Paps முலைகள்
The Nipple முலைக் காம்பு
The Chest மார்பு
The Belly வயறு
The Lower Belly கீழ் வயறு
The Womb, Venter கெற்பம்
The Paunch தொப்பை
The Naval தொப்புள்
The Waist அரை
The side, Flanks பாரிசம், பக்கம்
The Groin அந்தரங்கமான இடம்
The Hip, Haunch இடுப்பு
The thighs துடைகள்
The Hollow of the thigh துடையின் கீல்
The Nuckle Bone ராந்து
The Back side பின்புறம்
The Breach, Buttocks புட்டம்
The Arse ஆசனம்
The Fundament பவன வாய்
The Knee முழங்கால்
The Ham கீழ்த் துடை
The Knee-pan, Whirl bone முழங்கால் சில்லு
The Leg கால்
The Lap மடி
The Calf of the Leg கெண்டைச் சதை
The small of the Leg கீழ்க் கால்

The Shin காலெலும்பு
Foot பாதம்
Feet பாதங்கள், பாதம்
The Instep பாத அடி
The Ancle கணுக்கால்
The Heel குதிக்கால்
The sole of the foot உள்ளங்கால்
A Toe கால்விரல்
A Great toe கால் பெருவிரல்
The Arm புசம், கை
The Elbow முழங்கை
The Armpit அக்கிள்
The Shoulder தோள்
The Shoulder or Blade தோள்பட்டை
The Hand கை
The Right Hand வலது கை
The Left Hand இடது கை
The Palm of the Hand உள்ளங் கை
The hollow of the hand கைப்பள்ளம்
The back of the hand புறங்கை
The Fist கைப்பிடி
The Wrist கணுக்கை
The Fingers விரல்கள்
The Fore finger முன் விரல்
The thumb பெரு விரல்
The Middle finger நடு விரல்
The Ring or Fourth finger அணிவிரல்
The Little finger சுண்டு விரல்
The Nails நிகம்
The Joints மூட்டுகள்
The Knuckles விரல் கணுக்கள்
The Back முதுகு
The Backbone முதுகெலும்பு
The Ribs விலாவெலும்பு
The Loins இடுப்பு
The Genitals காணாதஸ்தலம்

The Yard நீர்த்தாரை
The testicles புடுக்கு
A Skeleton எலும்புக் கூண்டு
Section Third. மூன்றாம் பிரிவு.
Ocular கண்ணின்
Auricular காதின்
Nassal மூக்கின்
Labial உதடின்
Palatine மேல் வாயின்
Dental பல்லின்
Gutteral குரவளையின்
Manual கரத்தின்
Pedal காலின்
Section Fourth. நாலாம் பிரிவு.
The Inward or Intestine Parts உள்ளிஸ்தானங்கள்
The Noble parts பிறதான உள்ளிஸ்தானங்கள்
The Brain மூளை
The Heart இறுதயம்
The Liver இீரல்.இது அச்சுப்பக்கத்தில் இ சுழித்து வந்ததுள்ளது. எக்காலக்கட்டத்தில் ஈ என மாறியது?
The Ventricle of the Heart இறுதயத்தின் கெவி
The Lungs, Lights நுரையீரல்
The Spleen மண்ணீரல்
The Uvula உண்ணாக்கு
The tonsils கண்டஸ்தலம்
The Kidneys குண்டிக்காய்
The Midriff சவ்வு
The Wind-pipe குரவளை
The treachean artery குரவளை, நரம்பு
The Weasand-pipe குரவளை
The Stomach இரைப்பை, வயறு
The Gullet, throat தொண்டை
The Pit of the Stomach குலை
The Visceral parts குடல்புறம்
The Entrails, Intestines குடல்கள்
The Bowels, Guts குடல்கள்

The Bladder ஊத்தாம்பிள்ளை
The Blood ரெத்தம்
The Humour சயித்தியம்
A Gland கட்டிச் சதையான ஸ்தானம்
The Chyle ஆகாரஞ் சீரணமான பால்
The Phlegm சிலேட்டுமம்
The Choler, Bile பித்தம்
The Gall பிச்சு
The Sperm இந்திரியம், விந்து
The Milk பால்
The Urine மூத்திரம்
The Excrement, Dejecture or turd மலம், பீ
The Sweat வேர்வை
The Snot சளி
The Snivel சளி
The Spittle உமிநீர்
A Tear கண்ணீர்
The Ear wax குறும்பி
The Dandriff கரப்பான்
Hair மயிர்
Flesh சதை, இறச்சி
The Proud flesh அழுகின் சதை
The Skin தோல்
The Pores மயிர்க்கால்
A Muscle குத்துசதையான ஸ்தானம்
A Tendon குளைச்சு நரம்பு
A Membrane, Film மெல்லிய தோல்
A Gristle எலும்பு முழி
The Fibres கோது நரம்பு
A Nerve, Sinew நரம்பு
An Artery தாதுபாற்கிற நரம்பு
A Vein ரெத்த நரம்பு
A Blood vessel உதிரஸத்தானம்
The Optic or visual nerve நேத்திர நரம்பு
The Cephalic vein சிரசின் நரம்பு

The Basilical vein கரத்தின் நரம்பு
The Mesaraic vein ஈரல் நரம்பு
The Vitals சரீரத்தில் உயிர்நிலையான இஸத்தானங்கள்
The Vital spirit உயிர்சத்துவம், உயிராகாரம்
The Animal spirit சரீர ஆகாரம், சரீரதத்துவம்
A Bone எலும்பு
A Marrow bone ஊனெலும்பு, மூளையெலும்பு
Marrow ஊன், மூளை
Section Fifth. அஞ்சாம் பிரிவு.
BLEMISHES OF THE BODY. சரீரத்தின் பழுதூனங்கள்
A Wrinkle திரங்கல், திரை
A Pimple, a Red pimple முகப் பரு
A Wheal சின்னப் பரு
A Blister கொப்பிளம்
Freckles வெய்யல் காங்கையின் மச்சம்
Pock holes வயிகுரியன் அடையாளம்
A Gland சதைக் கட்டி
A Mole, Spot, Speck மச்சம்
A Blain கொப்பிளம், பரு
A Boil, felon பரு
A Wen சரீரத்திலுண்டாயிருக்கிற கட்டி
A Wringworm, tetter வட்டத் தேம்பல்
A Wart மறு
Sinew, shrunk ஒட்டு நரம்பு
A Polypus நாசியில் படருகிற வீக்கம்
The Itch சொறி
Pearl in the eye கண்ணில் பூ
The Scurf பொடுகு, சிராய் பொடுகு
The Scab சொறி
Blearedness, Blear-eyes பீளை கண், நீரிடுகிற கண்
A Cataract, a Web in the eye பித்தகாசம்
A Hunch, Hunch-back A Crump shouldered கூன்

A Flat nose சப்பை மூக்கு
A Hawk nose கூர் மூக்கு, கிளி மூக்கு
An Impediment in speech திக்கு நாக்கு
A Slow tongue தெத்து வாய், திக்கு வாய்
A Stammerer தெத்துவாயன், திக்குவாயன்
A Hobbler குந்துகாலன்
A Wry mouth கோணவாயன்
A Crop ear'd காதறுப்புண்டவன், காதறுப்புண்டவள்
A Bandy legged தொட்டிக்காலன், தொட்டிக்காலி
The Blind குருடன், அந்தகன்-குருடி அந்தகி
A purblind, Short sighted சாளேசரக் கண்ணன், சாளேசரக் கண்ணி
Blindness குருடு
The Deaf செவிடன்
Deafness செவிடு
Baldness மொட்டை
The Bald-pate மொட்டைத் தலையன்
The Halter நொண்டி
Lameness, maim அங்கவீனம், முடம்
Cramp foot கால் பிடிப்புள்ளவன், கால் பிடிப்புள்ளவள்
The Left-handed இடங்கை வாட்டானவன், இடங்கை வாட்டானவள்
The Mope-eyed ஒற்றைக் கண்ணன், ஒற்றைக் கண்ணி
The Goggle-eyed முண்டைக் கண்ணன், பருமுழியன், முண்டைக் கண்ணி, பருமுழிச்சி
The Squint-eyed ஓரக் கண்ணன், ஓரக் கண்ணி
A Cripple முடவன், முடவி
Section Sixth. ஆறாம் பிரிவு.
THE PROPERTIES & ACCIDENTS OF THE BODY. சரீரத்தனுடைய, லட்சணங்களும் மாறு லட்சணங்களும்
Health ஆரோக்கியம்
The Constitution சரீரக்குணம், சரீரக்கட்டளை
A Tender state of health நொற்ப சரீரம்
A Delicate constitution நேத்தியான சரீரம்

A good case or plight of the body சரீர சுகம்
The Linement முகதாது, நாடி உரூப ரேகை
A Complexion திரேக குணம், மேனி, முக வர்ணம்
Redness சிகப்பு
A Paleness மக்கல், இரத்தஞ்செற்ற வர்ணம்
The air, Look முகப் பார்வை, உரூபு
The Majestic air ஈராசீகரப் பார்வை
The Main முக நாடி
A Good-looking man அழகன், சௌந்திரியமுள்ளவன்
An Ill-looking man அவலட்சணமானவன்
Beauty, Handsomeness அழகு, வடிவு, சௌந்தரம்
A Fair or Beautiful one அரம்பை, சௌந்தரியமுள்ள ஸ்திரி
The Gracefulness அந்தம், இலக்கணம், நேத்தி
Ugliness, Deformity அந்தக்கெடு, அவலட்சணம்
Mis-shapen அந்தக்கேடான, அவலட்சணமான
The Carriage நடை, நடத்தை
The Countenance முகம், முகப் பார்வை
An Aspect பார்வை, உரூபு
The Gait நடை
Gesture, Action கை நாட்டகம், சரீர அசைவு
Liveliness, Sprightliness சுறுசுறுப்பு, திடன்
Gaiety வாலிப சந்தோஷம்
Good Humour நற்குணம், சந்தோஷ குணம்
Charms, Agreeableness மயக்கிவிக்கும் அழகு, சோகரியம்
Shape மேனி, உருபு
Size or Pitch பருவம், உயர்த்தி
The Voice குரல்
The Speech பேச்சு
Silence மௌனம்
Taciturnity மௌனம்
The Motion அசைவு
The Rest ஆறுதலான நித்திரை இளைப்பாறுதல்
Restlessness சௌக்கியவின்மை
Ease சௌக்கியம், சாவகாசம்

A Grimace, a Wry face முகக் கோணல், முகமாறு விதம்
A Laughter, Laugh நகைப்பு, சிரிப்பு
A Smile குறுஞ்சிரிப்பு
A Sour or Angry look கடுகடுப்பான முகம்
A Gesticulation கோரணி
Weeping அழை, அழுகை
A Sigh பெருமூச்சு
A Groan தவிப்பு, கூக்குரல்
Mouths வாய்க் கோணுதல்
Crossness மூலக் குணம்
Drowsiness நித்திரை மயக்கம்
A Watching, a Setting up நித்திரையிளமை
A Slumber, Sleep உறக்கம், தூக்கம்
A Snoaring குறட்டை
A Yawning கொட்டாவி
Twinkling கண்ணிமை
To Seel the Eyes கண் சிமட்டுகிறது
To Close the Eyes கண் மூடுகிறது
A Dream, Vision சொர்ப்பனம்
Breath சுவாசம், மூச்சு
Breathing சுவாசமிடுதல்
Sneezing தும்மல்
Hiccup விக்கல்
Respiration சுவாசம் வாங்குதல்
Perspiration வேர்வை பிறக்குதல்
A Belch ஏப்பம்
A Fizzle or Foist குசு
Section Seventh. ஏழாம் பிரிவு.
SENSATIONS. உணர்வும், அறிவும்
The five natural Senses பஞ்சவிந்திரியம் ஐந்து கருவிகள்
The Internal sense உட்கருவிகள்
The External sense பிறக்கருவிகள்
The Sight கண் பார்வை
The Hearing கேழ்க்குதல்
The Smelling மோர்ப்பம்
The Tasting உருசி பார்க்குதல்

The Feeling உணர்த்தி
The Objects கண் தோற்றம்
Light வெளிச்சம்
Darkness அந்தகாரம்
The Shade, shadow நிழல்
A Sound சத்தம், ஒலி, ஓசை
A Noise சந்தடி, இரைச்சல்
A Smell, scent வாசனை
A Sweet smell சுகந்தம், பரிமள வாசனை
A Bad small, a stink நாற்றம், துற்கந்தம்
A Taste, savour, Relish உருசி, உருசிகரம்
Tasteless, insipid உருசியற்ற, சாரமற்ற
An Aversion அரோசிகரம்
Sweet தித்திப்பு, இனிப்பு
Delicious இன்பமான
Bitter கசப்பு, கைப்பு
Bitterish கசப்பான
Sour, acid, acitosity புளிப்பு, புளித்த
Poignant கார் துவர்ப்பு, கார் துவர்ப்பான
Salt உப்பு
Saline, salinous, brackish உப்பு கரிக்கிற
Pungent கார் துவர்ப்பு
Acrid, astringent, tart துவர்ப்பு, துவர்
Acrimony உறைப்பு, கரகரப்பு
Sweet acid இன்புளிப்பு
Salsoacid உப்புளிப்பு
Fastidious, nauseous வெறுப்பான
Queasiness ஓக்காளம்
Squeamishness எத்தையும் அரோசிக்கிற குணம், யாவை
Luscious to the taste வாய்க்கின்பமாய்
Fragrant to the smell பரிமள வாசனையாய்
Melodious to the ear செவிக்கு வினோதமாய்
Pleasing to the eye கண்ணுக்கலங்கரிப்பாய்
Gratifying to the body சரீரத்துக்குணர்வாய்
Delightfulness இதமிப்பு, இதமியம், சோகரியம்

Feelings உணர்த்தி, சொரணை, மனவுருக்கம்
Tetillation, ticklishness அக்கிள் கூச்சம், சங்கோசம்
The teeth on edge பல்லுக் கூச்சம்
Prurience, Itching தினவு
An Extasy அநத்த தியானம்
A Transport விவசம்
A Rapture பரவசம்
To be wrapt up in an extasy பரவசமாகிறது
A Transport of delight மகா சந்தோஷம், பரவசம்
A Transport of sorrow மகா துக்கம், மனக் கொந்தளிப்பு
A Transport of anger ஆக்குறோசம்
Pleasure விருப்பம், சந்தோஷம்
Joy சந்தோஷம்
Pain விதனம்
Sorrow விசாரம்
Cold குளிர்
Heat காங்கை
Hunger பசி
Thirst தாகம்
Loathing வெறுப்பு, தெகட்டு, ஒக்களிப்பு
Surfeit மந்தம்
To appease one's hunger பசி ஆற்றுகிறது
To satiate one's self திருத்தியடைகிறது
To quench one's thirst தாக்கத்தை தீர்க்கிறது
To nauseate one's stomach குமட்டுகிறது, தெகட்டுகிறது
To Surfeit one's self மந்தப்பட சாப்பிடுகிறது