1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas/Chapter- 6 Of Food and drink

CHAPTER VI.

௬-ம் தொகுதி

OF FOOD AND DRINK.

பொசிப்பு தாகத்தினுடையவும்.

Section First முதற்பிரிவு
Hunger பசி
Thirst தாகம்
Appetite, Stomach பசி தீபனம்

Nourishment. Nutriment ஆகாரம்
Food, Meat, Victuals போசனம், பொசிப்பு, தீனி
Provision தின்பண்டங்கள்
A Meal அசனம், சாப்பாடு
A Breakfast கால போசனம்
A Tiffin மத்தியான போசனம்
A Dinner பகல் அசனம்
A Luncheon அந்தியசனம்
A Collation அசனம்
A Supper இராப் போசனம்
A Feast, a Banquet விருந்து
An Entertainment விருந்து, உல்லாசம்
A Function விருந்து
Bread ஒரு றொட்டி
A Loaf ஒரு றொட்டி
Loaves றொட்டிகள்
A Loaf of Bread ஒரு றொட்டி
White Loaf வெள்ளை றொட்டி
A Penny Loaf துட்டு றொட்டி
Brown Loaf கறுப்பு றொட்டி
New Loaf புது றொட்டி
Stale Loaf பழ றொட்டி
Chips, Chippings றொட்டித் துணுக்கை
The Crust றொட்டித் தோல்
The Upper crust றொட்டியின் மேல் தோல்
The Under crust றொட்டியின் அடித் தோல்
The Crum றொட்டிச் சதை
The Kissing crust இரண்டு றொட்டிகள் கூடியிருக்கிற தோல்
Flour மாவு
Dough பிசைந்த மா
Paste பிசைந்த மா, மாவின் பசை
To Knead a Dough மாப் பிசைகிறது
Bran தவுடு
Grits நொய்
Rolong கோதுமை நொய்

A Toast சுட்ட றொட்டி வகிர்
A Slice ஒரு றொட்டி வகிர்
A Bit, a Piece ஒரு துண்டு, துணுக்கை
A Morsel, a Mouthful ஒரு வாய்ப் போசனம்
A Mess பந்தி போசனம்
Eatables தின்பண்டங்கள், தீனி
Meat இறைச்சி
Boiled meat வேதித்த இறைச்சி
Roasted meat சுட்ட இறைச்சி
Beef மாட்டிறைச்சி
Mutton ஆட்டிறைச்சி
Lamb ஆட்டுக் குட்டி
Pork பன்றியிறைச்சி
Pickled pork பிளிப்புட்ட பன்றியிறைச்சி
Pickles ஊறுகாய்
Brine உப்புத் தண்ணீர்
Venison காட்டு மிறுகங்களின் இறைச்சி
Poultry தீனிக்கான பட்சிகள்
Fowls குருவி, பட்சி, கோழி
Game வேட்டையாடிப் பிடித்த மிறுகம், பட்சி
A Joint of meat துணித்த இறைச்சி
A Surloin of beef மாட்டினிடுப்பிறைச்சி
A Buttock of beef மாட்டின் குண்டியிறைச்சி
A Loin of veal கன்றினிடுப்பிறைச்சி
A Fillet of veal கன்றின் துடையிறைச்சி
Pancreas, Sweet Bread கன்றின் குலைக்கண்டச் சதை
Beef steaks மாட்டிறைச்சிக் கண்டங்கள்
A Calf's head கன்றின் தலை
A Sheep's head ஆட்டின் தலை
A Sheep's trotter ஆட்டுக் கால்
Calf's Pluck கன்றின் ஈரல்
A Shoulder of mutton ஆட்டின் முன்னந் துடை
A Leg of mutton ஆட்டின் பின்னந் துடை
A Breast of mutton ஆட்டின் மாரிறைச்சி
A Neck of mutton ஆட்டின் கழுத்திறைச்சி
A Rack of mutton ஆட்டின் கழுத்திறைச்சி அறுத்தது

Mutton Chops ஆட்டிறைச்சிக் கண்டம்
A Loin of mutton ஆட்டினிடுப்பிறச்சி
Pork's Griskins சுட்ட பன்றி முதுகு தண்டெலும்பு
Tripe குடல்கள்
A Chine முதுகு தண்டெலும்பு
Chitterlings குடல்கள்
Forced Meat Balls சம்பாரங்கள் போட்ட பொரியற் கறியுண்டை
Minced Meat சமைத்த பொடிக் கறி
Sausages சம்பாரங்கள் போட்ட பன்றினிறைச்சி
Stewed Meat மெதுவாய் அவித்த இறைச்சி
Baked Meat சுட்ட இறைச்சி
Brawn ஆண் பன்றினிறைச்சி
Ham or Gammon பன்றித் துடை
Salted Pork உப்புப் போட்ட பன்றி
Salted Meat உப்புக் கண்டம்
Bacon உப்புக் கண்டம்
A Flitch of Bacon உப்பு பன்றியின் ஒரு பக்கம்
Mustard கடுகு
Soup புஷடியாணம், கஞ்சி
Pottage ஆணம், சாறு
Porridge ஆணம், கஞ்சி
Peas porridge பயற்றாணம்
First course முதலாம் பரிமாறுதல்
Broth ஆணம்
Jelly broth உறைந்த ஆணம்
A Ragout ருசிகரமுள்ள கறி
Neat's Tongue மாட்டு நாக்கு
Gravy இறைச்சியின் சாரம்
A Spoonful ஒரு கரண்டி கொண்ட
A Sauce சாறு, ருசிகரிக்கிற சாறு
A Drudging box சுட்ட இறைச்சி மேல் தெளிக்கிற மாவின் பறணை
Mushrooms காளான்
Second course இரண்டாம் பரிமாறுதல்
A Fowl ஒரு கோழி

A Pullet விடைகோழி
A Capon சலவிட்டசாவல்
A Wing, a Pinion ரெக்கை
A Leg கால்
The Carcass துண்டம்
Stuffing சம்பாரம் நிறைப்புதல்
The Rump குண்டி
The Gizard கோழியிரைக் குடல்
A Fish மீன்
Fried Fish பொரிச்ச மீன்
Boiled Fish அவித்த மீன்
Section Second. இரண்டாம் பிரிவு.
A Sallad சல்லாது
Salt உப்பு
Oil எண்ணை
Sweet Oil சீர்மையெண்ணை
Mustard Oil கடுகெண்ணை
Vinegar காடி
Anchovies மீனுக்கு வாற்கிற சாறு
Spices சம்பார வற்கங்கள்
Pepper முளகு
Ginger இஞ்சி
Nutmeg சாதிக்காய்
Mace சாபத்திரி
Cubebs வால் முளகு
Cloves கிறாம்பு
Cinnamon லவங்கம்
Cardamom ஏலரிசி
Anise சோம்பு
Ginger Bread சுக்கு பிஸ்கோத்து
Wafers அவல் றேக்கு
Cakes தோசை, அப்பளம்
Ginger Breadnuts சுக்கு பிஸ்கோத்து
Sugar சக்கரை
Sugar Candy கற்கண்டு
Fruits பழங்கள்

A Pye பழங்களாவது இரைச்சியாவது கலந்து செய்த தோசை
A Muffin சின்ன றோட்டி
Scrapings மீதியான தீனி
A Biscuit பிஸ்கோத்து
Sweet-meats தித்திப்பு
Sugar Plumbs தீலிதாட்சிப் பழத் தித்திப்பு
Cheese சின்னுக்கட்டி
Butter வெண்ணை
Ghee நெய்
Suet மிறுகத்தின் கொழுப்பு
Milk பால்
Cream பாலேடு
Curds தயிர்
Butter Milk மோர்
Eggs முட்டைகள்
The Shell முட்டைத் தோல்
The White, Glaire வெள்ளைக் கரு
The Yolk அம்புலி
Fried Eggs பொரித்த முட்டை
Poached Eggs வேவித்த முட்டை
Buttered Eggs வெண்ணை பொட்ட முட்டைகள்
Section Third. மூன்றாம் பிரிவு.
The Drink பானம்
A Strong drink மதுபானம்
A Liquor சாராயம்
Tea தேயிலை
Coffee காப்பிக் கொட்டை
Sherbet, Lemonade சக்கரையும் எலுமிச்சஞ்சாறும் கலந்த பானம்
Punch சாராயுடனே சக்கரையும் எலுமிச்சஞ்சாறுங் கலந்த பானம்
Wine தீவிதாட்சிப் பழ இரசம்
Madeira மதேறா சாராயம்
Claret கிளார்ட்டு, சிகப்புச் சாராயம்
The Flavour ருசி, வாசனை
Beer பீர் சாராயம்

Brandy பிறாந்தி சாராயம்
Arrack அறாக்கு சாராயம், நாட்டுச் சாராயம்