அகப்பேய்ச் சித்தர்
- பக்கம் 212 - 223
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
தொகுஅகம் தன் நெஞ்சப் பேயைத் தானே விளித்துக் கூறும் அறிவுரையாகப் பிறருக்குக் கூறுவது
1
தொகு- நஞ்சுண்ண வேண்டாவே – அகப்பேய் – நாயகன் தாள் பெறவே
- நெஞ்சு மலையாதே –அகப்பேய் – நீ ஒன்றும் சொல்லாதே
2
தொகு- பராபர மானதடி – அகப்பேய் - பரவையாய் வந்ததடி
- தராதலம் ஏழ்புவியும் - அகப்பேய் - தானே படைத்ததடி
3
தொகு- நாத வேதமடி - அகப்பேய் – நன் நடம் கண்டாயோ
- பாதஞ் சத்தியடி - அகப்பேய் – பரவிந்து நாதமடி
4
தொகு- விந்து நாதமடி - அகப்பேய் – மெய்யாக வந்ததடி
- ஐந்து பெரும் பூதம் - அகப்பேய் – அதனிடம் ஆனதடி
5
தொகு- நாலு பாதமடி - அகப்பேய் – நன்னெறி கண்டாயே
- மூல மான தல்லால் - அகப்பேய் – முத்தி அல்லவடி
6
தொகு- வாக்காதி ஐந்தடியோ - அகப்பேய் – வந்த வகாகேளாய்
- ஒக்கம் அதானடி - அகப்பேய் - உண்மையது அல்லவடி
7
தொகு- சத்தா தி ஐந்தடியோ - அகப்பேய் – சாத்திரம் ஆனதடி
- மித்தையும் ஆகுமடி - அகப்பேய் – மெய்யது சொன்னேனே
8
தொகு- வானாதி ஐந்தடியோ - அகப்பேய் – வண்மையாய் வந்ததடி
- தெசநாடி பத்தேடி - அகப்பேய் – திடன் இது கண்டாயே
9
தொகு- காரணம் ஆனதெல்லாம் - அகப்பேய் – கண்டது சொன்னேனே
- மாரணங் கண்டாயே - அகப்பேய் – வந்த விதங்கள் எல்லாம்
10
தொகு- ஆறு தத்துவமும் - அகப்பேய் – ஆமகஞ் சொன்னதடி
- மாறாத மண்டலமும் - அகப்பேய் – வந்தது மூன்றடியே
11
தொகு- பிருதிவி பொன்னிறமே - அகப்பேய் – பேதமை அல்லவடி
- உருவது நீரடியோ - அகப்பேய் – உள்ளது வெள்ளையடி
12
தொகு- தேயு செம்மையடி - அகப்பேய் – திடனது கண்டாயே
- வாயு நீலமடி - அகப்பேய் – வான்பொருள் சொல்வேனே
13
தொகு- வான மஞ்சடியோ - அகப்பேய் – வந்தது நீ கேளாய்
- ஊனமது ஆகாதே - அகப்பேய் – உள்ளது சொன்னேனே
14
தொகு- அகாரம் இத்தனையும் - அகப்பேய் – அங்கென்று எழுந்ததடி
- உகாரங் கூடியடி - அகப்பேய் - உருவாகி வந்ததடி
15
தொகு- மகார மாயையடி - அகப்பேய் – மலமது சொன்னேனே
- சிகார மூலமடி - அகப்பேய் – சிந்தித்துக் கொள்வாயே
16
தொகு- வன்னம் புவனமடி - அகப்பேய் – மந்திர தந்திரமும்
- இன்னமும் சொல்வேனே - அகப்பேய் – இம்மென்று கேட்பாயே
17
தொகு- அத்தி வரை வாடி - அகப்பேய் – ஐம்பத்தோர் அட்சரமும்
- மித்தையாங் கண்டாயே - அகப்பேய் – மெய்யென்று நம்பாதே
18
தொகு- தத்துவம் ஆனதடி - அகப்பேய் – சகலமாய் வந்ததடி
- புத்தியுஞ் சொன்னேனே - அகப்பேய் – பூத வடிவலவோ
19
தொகு- இந்த விதங்களெல்லாம் - அகப்பேய் – எம்இறை அல்லவடி
- அந்த விதம் வேறே - அகப்பேய் – ஆராய்ந்து காணாயோ
20
தொகு- பாவந் தீரவென்றால் - அகப்பேய் – பாவிக்க லாகாதே
- சாவதும் இல்லையடி - அகப்பேய் – சற்குரு பாதமடி
21
தொகு- எத்தனை சொன்னாலும் - அகப்பேய் – என் மனந் தேறாதே
- சித்தும் மசித்தும் விட்டே - அகப்பேய் – சேர்த்து நீ காண் பாயே
22
தொகு- சமய மாறுமடி - அகப்பேய் – தம்மாலே வந்தவடி
- அமைய நின்றவிடம் - அகப்பேய் – ஆராய்ந்து சொல்வாயே
23
தொகு- ஆறாரும் ஆகுமடி - அகப்பேய் – ஆகாது சொன்னேனே
- வேறே உண்டானால் - அகப்பேய் – மெய்யது சொல்வாயே
24
தொகு- உன்னை அறிந்தக்கால் - அகப்பேய் - ஒன்றையும் சேராயே
- உன்னை அறியும் வகை - அகப்பேய் – உள்ளது சொல்வேனே.
25
தொகு- சரியை ஆகாதே - அகப்பேய் – சாலோகங் கண்டாயே
- கிரியை செய்தாலும் - அகப்பேய் – கிட்டுவது ஒன்றுமில்லை
26
தொகு- யோகம் ஆகாதே - அகப்பேய் – உள்ளது கண்டக்கால்
- தேக ஞானமடி - அகப்பேய் – தேடாது சொன்னேனே
27
தொகு- ஐந்தலை நாகமடி – அகப்பேய் – ஆதாயங் கொஞ்சமடி
- இந்த விடந்தீர்க்கும் – அகப்பேய் – எம் இறை கண்டாயே
28
தொகு- இறைவன் என்ற தெல்லாம் – அகப்பேய் – எந்த விதமாகும்
- அறைய நீ கேளாய் – அகப்பேய் – ஆனந்த மானதடி
29
தொகு- கண்டு கொண்டேனே – அகப்பேய் – காதல் கொண்டேனே
- உண்டு கொண்டேனே – அகப்பேய் – உள்ளது சொன்னாயே
30
தொகு- உள்ளது சொன்னாலும் – அகப்பேய் – உன்னாலே காண்பாயே
- கள்ளமுந் நீராதே – அகப்பேய் – கண்டார்க்குக் காமமடி
31
தொகு- அறிந்து நின்றாலும் – அகப்பேய் – அஞ்சார்கள் சொன்னேனே
- புரிந்த வல்வினையும் – அகப்பேய் – போகாதே உன்னை விட்டு
32
தொகு- ஈசன் பாசமடி – அகப்பேய் – இவ்வண்ணங் கண்ட தெல்லாம்
- பாசம் பயின்றதடி – அகப்பேய் – பரமது கண்டாயே
33
தொகு- சாத்திர சூத்திரமும் – அகப்பேய் – சங்கற்பம் ஆனதெல்லாம்
- பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் –பாழ் பலங்கண்டாயே
34
தொகு- ஆறு கண்டாயோ – அகப்பேய் – அந்த வினை தீர
- தேறித் தெளிவதற்கே – அகப்பேய் – தீர்த்தமும் ஆடாயே
35
தொகு- எத்தனை காலமுந்தான் – அகப்பேய் – யோகம் இருந்தாலென்
- முத்தனு மாவாயோ – அகப்பேய் – மோட்சமும் உண்டாமோ
36
தொகு- நாச மாவதற்கே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே
- பாசம் போனாலும் – அகப்பேய் – பசுக்களும் போகாவே
37
தொகு- நாணம் ஏதுக்கடி – அகப்பேய் – நல்வினை தீர்ந்தக்கால்
- காண வேணுமென்றால் – அகப்பேய் – காணக் கிடையாதே
38
தொகு- சும்மா இருந்து விடாய் – அகப்பேய் – சூத்திரஞ் சொன்னேனே
- சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே
39
தொகு- உன்றனைக் காணாதே – அகப்பேய் – ஊனுள் நுழைந்தாயே
- என்றனைக் காணாதே – அகப்பேய் – இடத்தில் வந்தாயே
40
தொகு- வானம் ஓடிவரில் – அகப்பேய் – வந்தும் பிறப்பாயே
- தேனை உண்ணாமல்– அகப்பேய் – தெருவோடு அலைந்தாயே
41
தொகு- சைவ மானதடி – அகப்பேய் – தானாய் நின்றதடி
- சைவம் இல்லையாகில் – அகப்பேய் – சலம் வரும் கண்டாயே
42
தொகு- ஆசை அற்றவிடம் – அகப்பேய் – ஆசாரங் கண்டாயே
- ஈசன் பாசமடி – அகப்பேய் – எங்ஙனஞ் சென்றாலும்
43
தொகு- ஆணவ மூலமடி – அகப்பேய் – அகாரமாய் வந்ததடி
- கோணும் உகாரமடி – அகப்பேய் – கூடப் பிறந்ததுவே
44
தொகு- ஒன்றும் இல்லையடி – அகப்பேய் – உள்ளபடி யாச்சே
- நன்றிலை தீதிலையே – அகப்பேய் – நாணமும் இல்லையடி
45
தொகு- சும்மா இருந்தவிடம் – அகப்பேய் – சுட்டது சொன்னேனே
- எம்மாயம் இதறியேன் – அகப்பேய் – என்னையும் காணேனே
46
தொகு- கலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – கண்டார் நகையாரோ
- நிலைகள் ஏதுக்கடி – அகப்பேய் – நீயார் சொல்வாயே
47
தொகு- இந்து அமிர்தமடி – அகப்பேய் – இரவி விடமோடி
- இந்து வெள்ளையடி – அகப்பேய் – இரவி சிவப்பாமே
48
தொகு- ஆணல பெண்ணலவே – அகப்பேய் – அக்கினி கண்டாயே
- தாணுவும் இப்படியே – அகப்பேய் – சற்குரு கண்டாயே
49
தொகு- என்ன படித்தாலும் – அகப்பேய் – எம்முரை யாகாதே
- சொன்னது கேட்டாயே – அகப்பேய் – சும்மா இருந்துவிடு
50
தொகு- காடும் மலையுமடி – அகப்பேய் – கடுந்தவம் ஆனால் என்
- வீடும் வெளியாமோ – அகப்பேய் –மெய்யாக வேண்டாவோ
51
தொகு- பரத்தில் சென்றாலும் – அகப்பேய் – பாரிலே மீளுமடி
- பரத்துக்கு அடுத்த இடம் – அகப்பேய் – பாழது கண்டாயே
52
தொகு- பஞ்ச முகமேது – அகப்பேய் – பஞ்சு படுத்தாலே
- குஞ்சித பாதமடி – அகப்பேய் – குருபாதங் கண்டாயே
53
தொகு- பங்கம் இல்லையடி – அகப்பேய் – பாதம் இருந்தவிடம்
- கங்கையில் வந்ததெல்லாம் – அகப்பேய் – கண்டு தெளிவாயே
54
தொகு- தானற நின்றவிடம் – அகப்பேய் – சைவங் கண்டாயே
- ஊனற நின்றவர்க்கே – அகப்பேய் – ஊனமொன்று இல்லையடி
55
தொகு- சைவம் ஆருக்கடி – அகப்பேய் – தன்னை அறிந்தவர்க்கே
- சைவ மானவிடம் – அகப்பேய் – சற்குரு பாதமடி
56
தொகு- பிறவி தீரவென்றால் – அகப்பேய் – பேதகம் பண்ணாதே
- துறவி யானவர்கள் – அகப்பேய் – சும்மா இருப்பார்கள்
57
தொகு- ஆரலைந்தா லும் – அகப்பேய் – நீயலையா தேயடி
- ஊரலைந்தா லும் – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே
58
தொகு- தேனாறு பாயுமடி – அகப்பேய் – திருவடி கண்டவர்க்கே
- ஊனாறு மில்லையடி – அகப்பேய் – ஒன்றையும் நாடாதே
59
தொகு- வெள்ளை கறுப்பாமோ – அகப்பேய் – வெள்ளியுஞ் செம்பாமோ
- உள்ளது உண்டோடி – அகப்பேய் – உன் ஆணை கண்டாயே
60
தொகு- அறிவுள் மன்னுமடி – அகப்பேய் – ஆதாரம் இல்லையடி
- அறிவு பாசமடி – அகப்பேய் – அருளது கண்டாயே
61
தொகு- வாசியி லேறியபடி – அகப்பேய் – வான் பொருள் தேடாயோ
- வாசியில் ஏறினாலும் – அகப்பேய் – வாராது சொன்னேனே
62
தொகு- தூராதி தூரமடி – அகப்பேய் – தூரமும் இல்லையடிப்
- பாராமற் பாரடியோ – அகப்பேய் – பாழ்வினைத் தீரவென்றால்
63
தொகு- உண்டாக்கிக் கொண்டதல்ல – அகப்பேய் – உள்ளது சொன்னேனே
- கண்டார்கள் சொல்வாரோ – அகப்பேய் – கற்பனை அற்றதடி
64
தொகு- நாலு மறை காணா – அகப்பேய் – நாதனை யார் காண்பார்
- நாலு மறை முடிவில் – அகப்பேய் – நற்குரு பாதமடி
65
தொகு- மூலம் இல்லையடி – அகப்பேய் – முப்பொருள் இல்லையடி
- மூலம் உண்டானால் – அகப்பேய் – முத்தியும் உண்டாமே
66
தொகு- இந்திர சாலமடி – அகப்பேய் – எண்பத் தொருபதமும்
- மந்திரம் இப்படியே – அகப்பேய் – வாயைத் திறவாதே
67
தொகு- பாழக வேணுமென்றால் – அகப்பேய் – பார்த்ததை நம்பாதே
- கேளாமற் சொன்னேனே – அகப்பேய் – கேள்வியும் இல்லையடி
68
தொகு- சாதி பேதமில்லை – அகப்பேய் – தானாகி நின்றவர்க்கே
- ஓதி உணர்ந்தாலும் – அகப்பேய் – ஒன்றுந்தான் இல்லையடி
69
தொகு- சூழ வானமடி – அகப்பேய் – சுற்றி மரக்காவில்
- வேழம் உண்டகனி – அகப்பேய் – மெய்யது கண்டாயே
70
தொகு- நானும் இல்லையடி – அகப்பேய் – நாதனும் இல்லையடி
- தானும் இல்லையடி – அகப்பேய் – சற்குரு இல்லையடி
71
தொகு- மந்திரம் இல்லையடி – அகப்பேய் – வாதனை இல்லையடி
- தந்திரம் இல்லையடி – அகப்பேய் – சமயம் அழிந்ததடி
72
தொகு- பூசை பாசமடி – அகப்பேய் – போதமே கொட்டமடி
- ஈசன் மாயையடி – அகப்பேய் – எல்லாமும் இப்படியே
73
தொகு- சொல்ல லாகாதே – அகப்பேய் – சொன்னாலுந் தோடமடி
- இல்லை இல்லையடி – அகப்பேய் – ஏகாந்தங் கண்டாய்
74
தொகு- தத்துவத் தெய்வமடி – அகப்பேய் – சதாசிவ மானதடி
- மற்றுள்ள தெய்வமெல்லாம் – அகப்பேய் – மாயை வடிவாமே
75
தொகு- வார்த்தை அல்லவடி – அகப்பேய் – வாச மகோசரத்தை
- ஏற்ற தல்லவடி – அகப்பேய் – என்னுடன் வந்ததல்ல
76
தொகு- சாத்திரம் இல்லையடி – அகப்பேய் – சலனங் கடந்ததடி
- பார்த்திடல் ஆகாதே – அகப்பேய் – பாவனைக் கெட்டாதே
77
தொகு- என்ன புடித்தால் என் – அகப்பேய் – ஏது தான் செய்தால் என்
- சொன்ன விதங்களெலாம் – அகப்பேய் – சுட்டது கண்டாயே
78
தொகு- தன்னை அறியவேணும் – அகப்பேய் – சாராமற் சாரவேணும்
- பின்னை அறிவதெலாம் – அகப்பேய் – பேயறி வாகுமடி
79
தொகு- பிச்சை எடுத்தாலும் – அகப்பேய் – பிறவி தொலையாதே
- இச்சை அற்றவிடம் – அகப்பேய் – எம்இறை கண்டாயே
80
தொகு- கோலம் ஆகாதே – அகப்பேய் – குதர்க்கம் ஆகாதே
- சாலம் ஆகாதே – அகப்பேய் – சஞ்சலம் ஆகாதே
81
தொகு- ஒப்பனை அல்லவடி – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே
- அப்புடன் உப்பெனவே – அகப்பேய் – ஆராய்ந்து இருப்பாயே
82
தொகு- மோட்சம் வேண்டார்கள் – அகப்பேய் – முத்தியும் வேண்டார்கள்
- தீட்சை வேண்டார்கள் – அகப்பேய் – சின்மய மானவர்கள்
83
தொகு- பாலன் பிசாசமடி – அகப்பேய் – பார்த்தக்கால் பித்தனடி
- கால மூன்றுமல்ல – அகப்பேய் – காரியம் அல்லவடி
84
தொகு- கண்டதும் இல்லையடி – அகப்பேய் – கண்டவர் உண்டானால்
- உண்டது வேண்டடியோ – அகப்பேய் – உன் ஆணை சொன்னேனே
85
தொகு- அஞ்சையும் உண்ணாதே – அகப்பேய் – ஆசையுடன் வேண்டாதே
- நெஞ்சையும் விட்டு விடு – அகப்பேய் – நிட்டையில் சாராதே
86
தொகு- நாதாந்த உண்மையிலே – அகப்பேய் – நாடாதே சொன்னேனே
- மீதான சூதானம் – அகப்பேய் – மெய்யென்று நம்பாதே
87
தொகு- ஒன்றோடு ஒன்று கூடில் – அகப்பேய் – ஒன்றுங் கெடுங்காணே
- நின்ற பரசிவமும் – அகப்பேய் – நில்லாது கண்டாயே
88
தொகு- தோன்றும் வினைகளெலாம் – அகப்பேய் – சூனியங் கண்டாயே
- தோன்றாமல் தோன்றிவிடும் – அகப்பேய் – சுத்த வெளிதனிலே
89
தொகு- பொய்யென்று சொல்லாதே – அகப்பேய் – போக்கு வரத்துதானே
- மெய்யென்று சொன்னக்கால் – அகப்பேய் – வீடு பெறலாமே
90
தொகு- வேதம் ஓதாதே – அகப்பேய் – மெய் கண்டோம் என்னாதே
- பாதம் நம்பாதே – அகப்பேய் – பாவித்துப் பாராதே