பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் தெரியுமா? நான்தான்! 57 அவசியம் ஏற்படுகிறது. உனக்குத் தெரிந்தவர்கள் கட்டுரையைப் படித்துப் பாராட்டாவிட்டால், அதை எழுதியதுதான் என்னத்திற்கு? இதைவீட நெஞ்சைப் பிளக்கும்படியான இன்னொரு நிலைமை ஏற்படக்கூடும். வெளியில் சிநேகிதர்கள் எல்லா ரிடமும் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு வருகிறாய். உனது ஸஹதர்மிணி குதூகலத்துடன் ஓடி வந்து,"இன்று விகட னில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ரொம்ப நன்றாயிருக் கிறது" என்று சொல்கிறாள். உன் நெஞ்சு துடிக்கிறது; 'யார் எழுதின கட்டுரை?" என்று கேட்கிறாய். "வேடிக்கை யான பெயர்! 'முந்திரிக் கொட்டை என்று ஒருவர் எழுதி யிருக்கிறார்!" என்கிறாள். உடனே பரவசமடைந்து போகி றாய். சிரித்துக்கொண்டே, "அதை யார் எழுதினது? சொல் பார்ப்போம்' என்கிறாய். எவ்வளவோ சாடைமாடை யாய்க் குறிப்பிட்டுக் காட்டியும் பிரயோசனமில்லை. கடைசி யாக. 'நான்தான்" என்று தெரிவித்துக்கொள்கிறாய். "ஆமாம்! நீங்கள் எழுதிப் புரட்டலையா?" என்கிறாள் உன் மனைவி. வாழ்க்கையில் இதைவிடச் சோகரஸம் பொருந்திய கட்டம் வேறு என்ன இருக்கமுடியும்! பத்திரிகாசிரியரிடமிருந்து உனக்கு வந்த கடிதத்தை எடுத்துக் காட்டி, நீதான் எழுதியது என்று நிருபித்து விடு கிறாய். பலன் என்ன? அவள் சந்தோஷப்படுகிறாளா? நீ எதிர்பார்த்த பரிசையளிக்கிறாளா? ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக அவள் முகத்தில் கோபம் கொதிக்கிறது. அது துயரமாக மாறுகிறது. கண்ணில் நீர் ததும்புகிறது. கலகல வென்று பொழிகிறது. விம்மி விம்மி அழத் தொடங்குகிறாள். அரை மணி நேரம் அவளைச் சமாதானம் செய்து அழுகை ஒருவாறு நின்ற பிறகு, "முந்திரிக் கொட்டை என்று ஏன் பெயர் வைத்துக்கொண்டீர்கள்?" என்கிறாள். உன்னுடைய தவறு என்னவென்று அப்போதுதான் உனக்குப் புலனாகிறது. அழகான சொந்தப் பெயரைப் போட்டுக்கொள்ளாமல் போனோமே என்று அப்போது பச்சாத்தாபப்படுவதில் என்ன பயன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/54&oldid=1721438" இலிருந்து மீள்விக்கப்பட்டது