அசோகனுடைய சாஸனங்கள்/அக்காலத்துப் பழம்பொருள்கள்

V. அக்காலத்துப் பழம்பொருள்கள்

நமக்கு அகப்பட்டுள்ள பண்டைக்காலச் சாமான்களில் அசோகன் காலத்துக்கு முற்பட்டவை அதிகமில்லை. இந்தியாவின் பழைய சரித்திர ஆராய்ச்சிக்கு இஃது ஒரு பெருங்குறைவே.


இவற்றிலும்
பழமையானவை
இந்தியாவில்
கிடையா

எகிப்து, அஸ்ஸிரியா, கிரீஸ், க்ரீட் முதலிய தேசங்களில் நமக்கு அகப்பட்டுள்ள பண்டைக்காலச் சாமான்களில் அசோகன் காலத்துக்கு முற்பட்டவை அதிகமில்லை. இந்தியாவின் பழைய சரித்திர ஆராய்ச்சிக்கு இஃது ஒருபெருங்குறைவே. எகிப்து, அஸ்ஸிரியா, கிரீஸ், க்ரீட் முதலிய தேசங்களில் கி. மு. 2000 அல்லது 2500 வருஷங்களுக்கு முன்னுள்ள பழம்பொருள்கள் அகப்பட்டிருக்கின்றன. ஆனால் மழை மிகுதியினாலும் இந்தியாவின் சீதோஷ்ண நிலையின் விசேஷத்தாலும் அவ்வளவு புராதனமான பொருள்கள் நம் நாட்டில் அதிகமாக அகப்படவில்லை, அசோகன் காலத்துக்கு முன் வீடுகளும் அரண்மனைகளும் கோயில்களும் எல்லாவித கட்டிடங்களும் மரத்தினாலேயே செய்யப்பட்டன. இவ் விஷயம் நம் நாட்டில் மிகப்புராதனமான பொருள்கள் அகப்படாததற்கு வேறு ஒருகாரணம், அசோகன் காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்புதான் இந்திய ஜனங்கள் கட்டிடங்களுக்குக் கற்களை உபயோகிக்கத் தொடங்கினர். அசோகன் கற்களை மரக்கட்டிடங்களுக்கு உபகரணமாக உபயோகப்படுத்தியிருக்கலாம்.


அசோகனுடைய
வேலைகள்


அசோகனால் கட்டப்பட்ட கட்டிடங்கள் எண்ணிறந்தனவென்ற ஜனங்களின் நம்பிக்கையைக் குறிப்பிட்டு, பாஹியன் என்ற சீனயாத்திரி, மூன்றே மூன்று வருஷங்வருஷங்களிற் கண்களுக்குத் தென்படாத யக்ஷர் கின்னரர் போன்ற தெய்வங்களின் உதவியைக்கொண்டு அரசன் எண்பத்து நாலாயிரம் ஸ்தாபனங்களைக் கட்டுவித்ததாகக் கூறுகிறான். அசோகனால் கட்டப்பட்டவை ஸ்தூபங்கள் மட்டுமல்ல ; காச்மீரத்தின் தலைநகரமாகிய ஸ்ரீநகரும் நேப்பாளத்தின் தலைநகரமாகிய லலிதாபட்டணமும் அசோகனால் ஸ்தாபிக்கப்பட்டதென்று முன்னே சொன்னோம். நாலந்தாவும் இக்காலத்தில் உற்பத்தியாயிற்று.

பாட்னாவின் சமீபம் அசோகன் அரண்மனை இருந்ததென்று 
இவற்றின்
தற்கால
அறிகுறிகள்

சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. 1913 –ல் பம்பாய் நகரத்துக் கோடிஸ்ரீமான்களாகிய டாட்டா வம்சத்தாரின் பண உதவியின் காரணமாக அங்கே புராதன வஸ்து ஆராய்ச்சி தொடங்கப்பட்டது, தலைஸ்தானத்துள்ள ஸபாமண்டபம் ஆஸ்தான மண்டபம் முதலிய கட்டிடங்களின் அடையாளங்கள் பல தரையைத் தோண்டிப் பார்த்ததில் அகப்பட்டன. பாரசீக தேசத்துப் பழைய அரண்மனைகளின் சிற்ப விசேஷங்கள் இங்கும் காணப்படுகின்றன ; ஆதலால் இங்குள்ள வேலைப்பாடு பாரஸீக சிற்பிகளுடையதாயிருக்க வேண்டுமென்று அனுமானிக் கப்படுகிறது.

ஒரு காலத்தில் அசோகனுடைய கட்டிடங்கள் இந்தியாவின் எல்லாப்பாகங்களிலும் மிகுந்திருந்தன. அசோகனுக்குப் பிற்காலத்தில் மகததேசத்துக்கு பிஹார் என்று பெயர் வந்த காரணம் அந்நாடு முழுவதும் பௌத்த விஹாரங்களால் நிறைந்திருந்தமையே எனலாம். ஆனால் தற்காலம் அசோகனால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இவ்வுலகத்திலுள்ள பல மாயைகளைப்போல அழிந்து மறைந்துபோயிருக்கின்றன. அவற்றின் அறிகுறியாய்க் கிடைத்துள்ள புராதன வஸ்துக்களை இங்கு, விவரிப்போம்.

ஸ்தூபம் என்றால் பௌத்த மதத்தைச் சேர்ந்த பெரியோருக்குக் 
ஸ்தூபங்கள்

கல்லினால் கட்டப்படும் சமாதி. இதை, பௌத்தர் பள்ளி யென்றும் கூறலாம். முனிவரின் சாம்பலை ஸ்தூபத்தின் மேற்புறத்தில் அடக்கம் செய்வார்கள், உருவத்தில் ஸ்தூபம் ஒரு பெரும் கோளத்தின் பாதியை உயர்ந்த பீடத்தின் மேல் கவிழ்த்ததுபோலிருக்கும். ஸ்தூபம் கருங்கல்லினாலோ சுட்ட செங்கற்களாலோ கட்டப்பட்டதாயிருக்கலாம். ஸ்தூபத்தின் புறமே விளக்கு மாடங்களும் வேறு அலங்காரங்களும் இருக்கும். மேற்புறத்தில் இங்கிலீஷ் எழுத்து T போன்ற அடையாளமும் அதற்கு மேல் பரந்த ஒரு குடையும் நாட்டப்பட்டிருக்கும். தொண்டர் ஸ்தூபத்தைப் பிரதக்ஷிணம் செய்துவர பிராகாரமும், பிராகாரத்தின் நான்கு புறமும் பெருங்கற்களினால் செய்யப்பட்ட வேலியும் வேலியின் புறமே கோபுரவாசல்களைப்போல மிக்க அலங்காரமாய்ச் செய்யப்பட்ட வாசல்களும் சிதைவுபடாத ஸ்தூபங்களில் காணலாம் இப்படிப்பட்ட ஸ்தூபம் ஒன்று நல்ல ஸ்திதியில் ஸாஞ்சி என்ற ஊரில் இருக்கிறது. இவ்வூர் மத்திய இந்தியாவைச்சேர்ந்த போபால் சம்ஸ்தானத்தில் உள்ளது. அங்கு இரண்டு மூன்று ஸ்தூபங்கள் இருக்கின்றன. அவற்றிற் பிரதானமான ஸ்தூபம் அசோகன் காலத்தது என்று அனுமானிக்கப்படுகிறது. வாசல்கள் பின் கட்டப்பட்டவையாயினும் முதலாவது க்ஷேத்திரம் பூராவும் மரத்தினாற் கட்டப்பட்டிருக்கலாம். பிற்காலத்து அரசர் தமக்கு இயன்றவாறு இதேவேலைகளைக்கற்களில் செய்திருக்கலாம்.

ஸாஞ்சியிலுள்ள பிரதான ஸ்தூபம் ஆதியில் சுமார் 
ஸாஞ்சி ஸ்தூபம்

எழுபத்தெட்டடி உயர்ந்திருந்தது. தற்காலம் அதன்மேலுள்ள அலங்காரங்கள் போய்விட்டன ; ஆதலால் அது ஐம்பத்து நான்கு அடி உயரமிருக்கிறது. இக்கட்டிடத்தின் மிக அழகான வேலைப்பாடு நான்கு திசைகளையும் நோக்கி நிற்கும் வாசல்களாம். இவை முப்பத்து நான்கு அடி உயர்ந்து மிகக் கம்பீரமான தோற்றத்துடன் விளங்குகின்றன. இவ்வாசல்களின் மேல்பாகத்திற் கல்லினாற் பலதோரணங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இலேசான மரக்கட்டையைக் கையாளுவதில் தச்சனுக்கு எவ்வளவு கைலாகவமும் திறமும் நுட்பமும் ஏற்படலாமோ அப்படிப்பட்ட லாகவமும் நுட்பமும் நாம் அங்குள்ள கல்சிற்பங்களில் காண்கிறோம். சில வாசல்கள் பிற்காலத்தவையாயிருந்தாலும் அந்த ஸ்தூபத்தை அசோகன் காலத்துச் சிற்பத்திறமைக்கு மாதிரியாக நாம் வைத்துக் கொள்ளலாம்.[1]

பர்ஹுத் என்ற ஊரிலுள்ள ஸ்தூபமும் அசோகன் 
பர்ஹுத்
ஸ்தூபம்

காலத்ததே. இது ஸாஞ்சிக்குச் சுமார் இருநூறு மைல் கிழக்கே உள்ளது. ஸ்தூபம் சுட்டசெங்கற்களினால் செய்யப்பட்டது ; ஆயினும் புறமுள்ள கல்வேலியின் கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மிக அருமையானவை. வேலியிலுள்ள கற்களெல்லாம் அக்காலத்து நடை உடை பாவனைகளை விளக்கும் சிற்பங்களால் நிறைந்திருக்கின்றன. ஜாதகக் கதைகள் என்பவை கெளதம புத்தருக்கு அவருடைய முன் ஜன்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களைக் கூறும் கதைகளென்று பௌத்தர்களால் கருதப்படுகின்றன. அவைகளிற் பல குரங்கு, யானை, முதலை, மான், காகம், கோழி முதலிய பிராணிகளைப் பற்றிய ஈஸாப்பின் கதைகள் போன்றவை. பர்ஹுத் ஸ்தூபத்தின் வேலிக்கற்களிலுள்ள சிற்பங்கள் பல ஜாதகக் கதைகளையும் புத்தரின் வாழ்நாட்களில் நடந்த சம்பவங்களையும் விளக்கச் செதுக்கப்பட்ட சித்திரங்களாம். அச் சிற்பங்களின் கீழ், “மிகஜாதகம்”, “நாக(யானை)ஜாதகம்,” “ஷட்தந்தி ஜாதகம்” “ஹம்ஸ ஜாதகம்,” “கின்னர ஜாதகம,” “குக்குட ஜாதகம்,” “மகாதேவ ஜாதகம்,” “ஜனகராஜ ஜாதகம்” என்று சிற்பத்தின் விஷயம் கல்லில் வெட்டப்பட்டிருக்கின்றது. இக் கல்வெட்டுகள் இந்தியாவின் வேறு பல பாகங்களிற் காணப்பட்ட சித்திரங்களின் கருத்தை விளக்க மிகவும் உபயோகப்பட்டன.

காசியின் அருகில் உள்ள ஸார்நாதத்தில் 1905 
ஸார்நாத்
ஸ்தூபம்

வருஷத்தில் புராதன வஸ்து ஆராய்ச்சி தொடங்கியபோது அங்குப் புதைந்து கிடந்த ஸ்தூபம் தெரியவந்தது. அந்த ஸ்தூபம் ஸாஞ்சி ஸ்தூபத்தை விடப் பெரியது; செங்கல்லினாற் கட்டப்பட்டது.

புத்த கயையில் அசோகனால் கட்டப்பட்ட ஸ்தூபம் 
கயை ஸ்தூபம்

பல நாள் வரையில் இருந்தது. அந்த ஸ்தூபத்தின் புறவேலியிலுள்ள கற்கள் மட்டும் இப்போது அங்குக் காணப்படுகின்றன. அசோகனுடைய கட்டிடங்களின் அவசிஷ்டங்களுடன் அதற்குப் பிற்காலத்து வேலைப்பாட்டின் பாகங்களும் கலந்து கிடக்கின்றன.

அசோகன் காலத்திற் புத்தருக்கு விக்ரகங்கள் கிடையா.ஆனால் புத்தருடையவும் அவருடைய தர்மத் 
ஸ்தூபங்களில்
உண்டான
மாறுதல்கள்

தினுடையவும், அறிகுறியாகச் சில அடையாளங்கள் இருந்தன. தொண்டர் இந்த அடையாளங்களை வணங்கி வந்தனர். அவற்றில் முக்கியமானது போதி விருக்ஷம். மிருகங்களாலும் மனிதர்களாலும் தெய்வங்களாலும் விருக்ஷங்கள் வணங்கப்படுவதை ஸாஞ்சி, பர்ஹுத் இங்குள்ள சிற்பங்களில் நாம் மிகுதியாய்ப் பார்க்கலாம். சக்கரங்களும் வெகுவாக கற்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை புத்தர் தர்மத்தை உலகத்திற்குப் போதிக்கத் தொடங்கியதின் அறிகுறி. இரண்டு காலடியிணைகள் சித்திரிக்கப்பட்டு அவற்றைச் சுற்றி நிற்கும் பலர் இவற்றைப் போற்றி வணங்கும் சிற்பத்தையும் சில இடங்களிற் காணலாம். இதுவும் புத்தரின் சின்னமே. மஹாயான பௌத்தமதம் இந்தியாவிற் பிரபலமானதும் ஸ்தூபங்கள் புத்தரின் கோயில்களாய் மாறின. புத்தருக்குப் பலவிதப் பிரதிமைகள் ஏற்பட்டன. ஸ்தூபத்தின் புறக்கல்லின் நடுவில் புத்தருடைய உருவம் செதுக்கப்பட்டு நமது இந்துக் கோயில்களில் நடப்பதுபோல அதன் முன் பூஜை அபிஷேகம் தூபதீபங்கள் முதலிய சடங்குகளும் நடக்கத் தொடங்கின. ஸ்தூபத்தையே மற்றொரு பெரிய அறையின் ஓரத்தில் கட்டி முழுவதும் ஒரு பௌத்தக் கோயிலாய் மாற்றப்பட்டது. இப்படிப்பட்ட கோயில்களே சைத்தியம் அல்லது பள்ளி எனப்படும்.

அசோகனால் குடையப்பட்ட குகைகளைப்பற்றி 
குகைகள்

அதிகமாய்ச் சொல்லவேண்டியதில்லை. மிக உறுதியான கருங்கல்லில் பல துறவிகள் சேர்ந்து வாசம் செய்யும்படி விசாலமான அறைகள் மலையோரங்களில் குடையப்பட்டிருக்கின்றன. உட்புறம் மிக நன்றாய் இழைக்கப்பட்டிருக்கிறது.

அசோகனால் நாட்டப்பட்ட ஸ்தம்பங்கள், அவனுடைய அரசாட்சிக்கு மிக உயர்ந்த ஞாபகச் சின்னங்களென்று சொல்லலாம், அசோகன் காலத்துக்கு முன்னமே இப்படிப்பட்ட ஸ்தம்பங்கள்
ஸ்தம்பங்கள்
இருந்தனவென்று சாஸனங்களிலிருந்து தெரியவருகிறது.[2] அசோகன் காலத்துக்குப் பின்னும் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தம்பங்கள் பல உள்ளன. நூறு வருஷங்களுக்கு முன் கூட இப்போதிருப்பதிலும் பல அதிகமாயிருந்தன. இத்தகைய தூண்களின் பெருமையைச் சாதாரண ஜனங்கள் உணராமல் அவை தாறுமாறாய் உபயோகிக்கப்பட்டன. ஸ்தம்பங்களின் துண்டுகள் சாலைகளில் பரப்பும் சரளை அடித்துச் சமப்படுத்த றோலர்களாகவும் கரும்பாலையில் உரல்களாகவும் உபயோகப்படுத்தப்பட்டன.

இப்போது காணப்படும் அசோக ஸ்தம்பங்கள் பன்னிரண்டு. அவற்றில் பத்து ஸ்தம்பங்களில் அசோகனுடைய லிகிதம் காணப்படுகிறது. இரண்டில் ஒரு லிகிதமுமில்லையாயினும் ஸ்தம்பங்கள் அசோகன் காலத்தவையே. ஹிந்துஸ்தானப் பிரதேசத்துக்கு வெளியில் எங்கும் அசோகனுடைய ஸ்தம்பங்கள் கிடைத்தில.



அசோக ஸ்தம்பங்களின் விவரணம் அங்கு காணப்படும் லிகிதங்கள்,

1. டில்லி - தோப்ரா ஸ்தம்பம்..  ஸ்தம்பசாஸனங்கள் 1-7
2. டில்லி - மீரத் ஸ்தம்பம். 1-6
3. பிரயாகை ஸ்தம்பம்.  ஸார்நாத் சாஸனத்தின்
 பகுதி.ராணிகாருவாகியின்
 லிகிதம், ஸ்தம்பசாஸனங்
 கள்1-9
4. ஸார்சாத் ஸ்தம்பம்.  ஸார்நாத் சாஸனம்.
5. ஸாஞ்சி ஸ்தம்பம்.  ௸ சாஸனத்தின் பகுதி
6. ரும்பின் தேயி ஸ்தம்பம்.  ஸ்மாரக லிகிதம் ஒன்று.
7. நிக்லீவா ஸ்தம்பம். ௸ மற்றொன்று.
8. லௌரியா நந்தன்கர் ஸ்தம்பம்.  ஸ்தம்ப சாஸனங்கள் 1-6
9. லௌரியா அரராஜ் ஸ்தம்பம்.
10. ராம்பூர்வா ஸ்தம்பம், லிகிதமுள்ளது
11. ராம்பூர்வா ஸ்தம்பம், லிகிதமில்லாதது.
12. பக்ஹிரா ஸ்தம்பம் லிகிதமில்லாதது.

எல்லா ஸ்தம்பங்களும் வேலைப்பாட்டில் ஒன்று போலிருத்தலால் அவற்றைப் பொதுவாய் விவரிக்கலாம். ஸ்தம்பத்திற்கு அடியில் சதுரமான பீடமும், மேலே விசித்ரமாய்க் கண்டாமணி போன்ற சிகரமும், சிகரத்தின்மேல் வட்டமாகவோ சதுரமாகவோ உள்ள ஓரடி கனமுடைய தட்டும், அத்தட்டின்மேல் ஒன்று அல்லது, இரண்டு, மூன்று, அல்லது நான்கு சிங்கங்களுடைய பிரதிமை ஸ்தம்பத்தின் மகுடமாகவும் இருக்கின்றன. சில ஸ்தம்பங்களில் மகுடம் விருஷபம் அல்லது கருடன் பிரதிமையா யிருக்கின்றது. இவற்றின் உயரம் 40 அல் லது50 அடி.

அதிகமாய்க் கெடாமலும் சுவஸ்தானத்திலும் இருக்கும் அசோக 
இவற்றின்
சிற்பத்திறமை

ஸ்தம்பங்கள் இரண்டு மூன்றே, மறுபக்கத்தில் காணப்படும் லௌரியா நந்தன்கர் ஸ்தம்பம் மிக அழகானது. அதன் சிகரம் ஔரங்கஸீப் காலத்திற்குண்டு பட்டு கொஞ்சம் சிதைவுபட் டிருக்
10 <---! The image size --->px

லௌரியா நந்தன்கர் ஸ்தம்பம்

சிதைவுப்பட்டிருக்கின்றது ; ஆயினும் ஸ்தம்பத்தின் அழகு கெடவில்லை. பக்ஹிரா ஸ்தம்பம் இதைவிடப் பெரிதாயினும் வேலைப் பாட்டில் இதுவே சிறந்தது. இதன் உயரம் 40 அடி. சிகரம் மட்டும் சுமார் 7 அடி. மத்திய பாகம் உருக்கோ வெண்கலமோ என்று மயங்கும்படி இழைக்கப்பட்டிருக்கிறது, சிகரத்தின் மேலுள்ள தட்டு வட்டவடிவம். அதன் விளிம்பில் அன்னங்கள் தம் இரையைக் கொத்தித் தின்னுவதைக் காட்டும் சித்திரம் வெகு அழகாய்ச் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்தம்பம் சன்னார் மலையிலுள்ள கருங்கல்லினால் ஆக்கப்பட்டது அங்கிருந்து எப்படி இதை வெட்டி வேறாக்கினார்கள் ? எந்தக் கல் தச்சர் இதைச் செதுக்கி இழைத்தனர்? எந்தச் சிற்பிகள் இதன் சிகரத்தைச் சித்திரித்தனர் ? இக் கேள்விகளுக்குச் சரியான விடை நாம் இங்குச் சொல்ல முடியாது. ஆனால் இப்பணிசெய்தோர் யாவருக்கும் கைமுடுகு உரியதென்று நாம் சொல்லலாம்.

ஸமீபத்திற் கிடைத்துள்ள ஸார்நாத் ஸ்தம்பத்தின் சிகரம் மிகவும் சிரேஷ்டமான வேலைப்பாடு அமைந்தது. அதன் படத்தை 70-ம் பக்கத்தில் காணலாம். ஸ்தம் த்தின் மகுடம் நான்கு சிங்கங்கள் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு தர்ம சக்கரத்தைத் தமது முதுகில் சுமந்து கொண்டிருப்பதுபோல் உள்ளது. சிங்கங்கள் ஜீவனுள்ளன போலவும் மிகக் கம்பீரமாகவும் இருக்கின்றன.

அசோகன் காலத்துச் சிற்பங்களின் குணாகுணங்களை 
இந்தச் சிற்பத்
தைப் பற்றிய
மதிப்பு

வித்வான்கள் பல்விதமாக நிதானிக்கிறார்கள். பெர்ஸியா தேசத்து அரசர்களும் தம் நாட்டில் ஸ்தம்பங்களை நாட்டினர். அவற்றை அசோகனுடைய ஸ்தம்பங்களுக்குப் பலவிதத்திலும் ஒப்பிடலாம்.

அசோகன் அரண்மனையும் மற்றக் கட்டிடங்களும் இந்திய சிற்பிகளின் வேலையல்லவென்றும் கட்டிடங்களின் வேலைப்பாட்டில் இந்தியாவுக்கு அந்நியமான தேசங்களுக்குரிய அலங்காரங்கள் காணப்படுவது இதற்குச் சான்று என்றும் அபிப்பிராயங்கள் புராதன வஸ்துசாஸ்திரிகள் கூறுகின்றனர். நாம் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், ஸ்தம்பங்களிலும் கட்டிடங்களிலுமுள்ள அலங்காரங்கள் இந்தியாவுக்கு அந்நியமானவை யென்று ஸர்வ ஸம்மதமாய் நிரூபிக்கப்படவில்லை. எல்லாத் தேசங்களுக்கும் இயற்கையான ஸங்கீதமும் இலக்கியமும் இருப்பதுபோலச் சிற்பமும் இயற்கையாகவே ஏற்படுகிறது. அடுத்தது காட்டும் பளிங்குபோல சிற்பங்களும் அந்தந்த நாட்டாரின் வாழ்வையும் மனோபாவங்களையும் பிரதிபலிக்கச்செய்கின்றன. இந்தியாவுக்குமட்டும் இப்படிப்பட்ட சுயமான சிற்பம் இல்லையென்று சொல்ல முடியுமா?

இந்தியா கவர்ன்மெண்டின் புராதனவஸ்து பரிசோதகரில் முக்கியராகிய டாக்டர் மார்ஷல் துரையும் அசோகன் காலத்துச் சிற்பம் அந்நிய மனிதரின் வேலையென்று மதிக்கின்றார் ; ஆனாலும் சிற்பங்களின் வேலைப்பாட்டை அதிகமாக மெச்சி எழுதுகிறார். அவர் ஸார்நாத் ஸ்தம்பத்தைப் பற்றி எழுதியிருப்பது பின் வருமாறு : “ பூர்வ காலத்து வேலைகளுள் இவ்வளவு உயர்ந்த மனோதர்மமும் சிற்பத் திறமையும் காணப்படும் வேலை வேறு எத்தேசத்தும் கிடையாது என்று நான் சொல்லத் துணிகின்றேன்.” இந்த மதிப்பு ஸார்நாத் ஸ்தம்பத்தின் சிகரத்துக்குமட்டுமன்று, பொதுவாக எல்லா அசோக ஸ்தம்பங்களுக்கும் அமையுமென்பது நமது துணிபு. அசோகன் காலத்துக்குமுற்பட்ட சிற்பம் அதிகமாக அகப்பட்டில; ஆயினும் நாம் முதலாவதாக இந்தியாவின் சிற்பத்தை நோக்கும் போது அது குழந்தைப் பருவத்ததாயிராமல் ஆரம்பத்திலேயே பூர்ண யௌவனத்துடன் காணப்படுகிறது. இதிலிருந்து நம் நாட்டில் சிற்பத்தின் அபிவிர்த்தி வெகு காலத்துக்கு முன்னமே தொடங்கிவிட்டதென்றும் அசோகன் காலத்துக்குமுன் மரவேலையில் அடைந்த திறமை, கடைசியாகக் கல்வேலைக்கு உபயோகப்படுத்தப்பட்டதென்றும், இப்படிப்பட்ட சாதனத்தின் வேறுபாட்டினால் சிற்பத்தின் மேன்மை அதிகக் குறைவுபடவில்லை யென்றும் இந்திய சிற்ப அபிமானிகள் கூறுகின்றனர்.

குறிப்புகள்

தொகு
  1. 🞸 ஸ்ரீ. ரிஸ் டேவிட்ஸ (Rhys Davids) என்பவரால் எழுதப்பட்ட “பௌத்த காலத்து இந்தியா” (Buddhist India) என்ற புஸ்தகத்தில் இக்காலத்துச் சிற்பங்களின் படங்கள் பல இருக்கின்றன.
  2. முதல் உபசாஸனம் ரூபநாத் பாடம், 7-ம் ஸ்தம்பசாஸனம்.