அசோகனுடைய சாஸனங்கள்/கால அட்டவணை



அனுபந்தம் 1

கால அட்டவணை


கி. மு. ' அசோகன்
ஆண்டு. பட்டாபிஷேக விவரங்கள்.
 . வருஷம்.

277 ... மாஸிடோணியா அரசன் அன்டிகோ
 னஸ் ஆட்சி தொடங்கிற்று.
273 ... அசோகன் இளவரசன் ஆனான்
272 ... எப்பைரஸ் தேசத்து அலக்ஸாந்தரின்
  ஆட்சி தொடங்கிற்று.
269 1 அசோகனுடைய பட்டாபிஷேகம்.
261 9 அசோகன் கலிங்கம் சென்று யுத்தம்
  ஆரம்பித்தான். அவன் பௌத்த
  மதத்தை ஆச்ரயித்து உபாஸகன்
  ஆனான். விரியாவில் இரண்டாம்
  ஆன்டியோக்கஸ் ஆட்சி தொடங்
  கிற்று.
259 11 அசோகன் வேட்டையாடுதலைத் தவிர்
  த்தான். தர்மப் பிரயாணங்கள் ஆரம்ப
  மாயின. தர்மத்தைப் போதிக்கத்
  தூதர் தூரதேசங்களுக்குப் போயி
  னர்.
258 12 கைரீனே தேசத்து மகன், (மகாஸ்)
  எப்பைரஸ் தேசத்து அலக்ஸாந்தர்
  ஆகிய இருவரும் இறந்தனர்.
257 13 முதலாம் உபசாஸனம்
  பிரசுரஞ் செய்யப்பட்டன.
  3-வது சாஸனம்.
  4-வது சாஸனம்.
அனுஸம்யானம் ஐந்து வருஷங்களுக்
 கொருமுறை அவசியம் என்ற சட்.
 டம் உண்டாயிற்று,
பராபரில் ஆஜீவகருக்கு இரண்டு குகை
 கள் செய்யப்பட்டன.
256 14 பதினான்கு சாஸனங்களும் மொத்தத்
 தில் பிரசுரஞ் செய்யப்பட்டன.
தர்மமகாமாத்திரரின் நியமனம்.
முதலாவது கலிங்க சாஸனம் எழுதப்
 பட்டது.
 ணோத்தாரணம் செய்யப்பட்டது.
254 16 இரண்டாவது கலிங்க சாஸனம் எழு
 தப்பட்டது.
250 20 ஆஜீவகருக்குப் பராபரிலுள்ள மூன்றா
 வது குகை குடையப்பட்டது.
249 21 புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசிக்க
 அரசன் தன் பெரிய யாத்திரையை
 ஆரம்பித்தான். ரும்மின்தேயீ ஸ்தம்ப
 மும் கொனாகமன முனிவரின் ஸ்தம்ப
 மும் நாட்டப்பட்டன. நேப்பாளத்
 துக்குப் பிரயாணம், லலிதாபட்ட
 ணம் ஸ்தாபிக்கப்பட்டது.
248 22 பாக்டிரியாவும் பார்த்தியாவும் சுதந்திர
 த்தை அடைந்தன.
247 23 எகிப்து அரசன் ப்டாலமி இறந்தான்
246 24 ஸிரியா தேசத்து அரசன் அன்டியாக்
 கஸ் இறந்தான்
243 27 ஸ்தம்ப சாஸனங்கள் பிரசுரமாயின.
242 28 7-ம் ஸ்தம்ப சாஸனம், மாஸி
 டோணியா தேசத்து அன்டிகோனன்
 இறந்தான்.
240 30 மூன்றாவது பௌத்த மஹா ஸபை
 கூடிற்று.
240-232 30-37 ஸார்நாத் சாஸனமும் இதைச் சேர்ந்த
 மற்றச் சாஸனங்களும் பிரசுரமான
 காலம் (உத்தேசம்).
232 37 அசோகன் மரணம். தசரதன் ஆட்சி
 பாடலிபுரத்தில் ஆரம்பித்தது. நாகார்
 ஜுனி மலையிலுள்ள குகைகள் குடை
 யப்பட்டன.
185 பிருகத்ரதன் என்றகடைசி மௌரிய அர
 சன் புஷ்யமித்திர சுங்கன் என்ற தன்
 சேனாதிபதியின் கையால் இறந்தான்.