அணிலாடு முன்றிலார்
தொகு
குறுந்தொகை- 41. பாலைத்திணை
தொகு
- (பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது)
- காதல ருழைய ராகப் பெரிதுவந்து
- சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
- அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
- மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
- புலப்பில் போலப் புல்லென் (5)
- றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.