அண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் கண்டத்தில் ஓர் ஆராய்ச்சியாளர்

5. அண்டார்க்டிக் கண்டத்தில் ஓர் ஆராய்ச்சியாளர்

பள்ளிச் சாரணர்

1928 ஆம் ஆண்டு பால் சைப்பிள் அமெரிக்கப் பள்ளிச் சாரணராக இருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 9. இருப்பினும் அஞ்சா நெஞ்சத்துடன் அவர் பள்ளிச் சாரணர் சார்பில் பயர்டு என்பார் குழுவினருடன் தென் முனைக்குச்சென்று திரும்பினார். பயர்டு தென் முனைக்குச் சென்ற ஆண்டு 1928 ஆகும்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் உலகிலுள்ள இளைஞர்கள் எல்லாம் சைப்பிளைப் போற்றத் தொடங்கினார்கள். ஏன் பொருமை கூடப் பட்டார்கள். ஆனல், இந்நிகழ்ச்சி சைப்பிளேப் பெரிய ஆராய்ச்சி யாளராக மாற்றிற்று.

பெரிய விஞ்ஞானி

அண்டார்க்டிக் பயணம் பள்ளிச் சாரணராக இருந்த சைப்பிளை ஒரு பெரிய விஞ்ஞானியாக மாற்றிற்று. இவர் தென்முனை ஆராய்ச்சியில் சிறந்த வல்லுநர்.

அண்டார்க்டிக் பயணம்

டாக்டர் சைப்பிள் அண்டார்க்டிக்கிற்கு ஐந்து தடவைகள் சென்றிருக்கீறார். அங்கு அவர் நான்கு மாரிக்காலங்களைக் கழித்திருக்கிறார். முதன் முதலில் அவர் நியூயார்க்கிலிருந்து அண்டார்க்டிக்கிற்குச் சென்றார். அவர் தம் குழு வினருடன் செல்ல 100 நாட்கள் ஆயிற்று. கப்பல் பயணம் முடிந்த பின், குழுவினர் நடந்து சென்றனர். முன்னே நாய்கள் வழிகாட்டிச் சென்றன.

கடைசியாக, அவர் விமான மூலம் சென்றார், அவ்வாறு செல்வதற்கு 40 மணி நேரம் ஆயிற்று. ஒரு தனி விமானத்தில் நேராகத் தென் முனையை அடைந்தார்.

அவரது அண்மைப் பயணங்கள் தென்முனையில் ஆராய்ச்சி செய்ய, அவருக்குத் துணை செய்தன. நில நூலும், தட்ப வெப்ப நிலை நூலும் மனிதனோடு நெருங்கிய தொடர்பு உடையவை. ஆகவே, அத்துறைகளில் அவர் ஆராய்ச்சிகள் நடத்தினர்.

அவர் கூறுவதாவது: “ -70° C வெப்ப நிலை களுக்குக் கீழ் நான் மாதக்கணக்கில் (தென் முனை யில்) வாழ்ந்திருக்கிறேன். இந்த நிலைமைகளில் மூச்சு, நீராவியின் ஒலிபோல் வெளிவரும்'.

அவர் தென்முனை அல்லது அண்டார்க்டிக் வாழ்க்கை பற்றியும் கூறினார். 'அங்கு மக்கள் என்போர் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளே. அவர்களைத் தவிர வேறு யாரையும் நாம் அங்குப் பார்க்க இயலாது.”

நில அமைப்பு நூல் ஆராய்ச்சி, பனிக்கட்டி யில் நில நடுக்க ஒலிப்பு அளவீடுகள் எடுத்தல், வானிலை நிலைமைகளை உற்று நோக்கல் முதலிய ஆராய்ச்சிப் பணிகளை விஞ்ஞானிகள் செய்வார்கள்

குளிர்ந்த காற்று, நீர் இருந்த போதிலும், பயிர்களும் விலங்குகளும் வெப்ப மண்டலங்களைக் காட்டிலும் துருவப் பகுதியில் மிக விரைவாகப் பெருகுகின்றன.

பறவைகள் கோடையில் அங்கு வருகின்றன. பென்குயின் பறவை வகைகள் பதினெட்டிற்கு மேல் உள்ளன. அவை கூட்டமாக வாழ்கின்றன. பனிக்கட்டியில் முட்டையிட்ட போதிலும், அவை விரைவாகப் பெருகுகின்றன.

மேற் கூறிய செய்திகள் அனைத்தும் டாக்டர் சைப்பிள் கூறியவை ஆகும். 1961 ஆம் ஆண்டு டாக்டர் சைப்பிள், இந்தியாவில் ஆறு வாரம் தங்கிச் சுற்றிப் பார்ப்பதற்காகப் புது டெல்லி வந்தார். அப்பொழுது,மேற்கூறிய செய்திகளைப் பத்திரிகை நிருபர்களுக்கு அல்லது செய்தியாளர் களுக்குக் கூறினர். உலகின் கடைக் கோடிகளை வட, தென் முனைகளை-ஆராய்வது மனித நன்மைக்கே ஆகும் என்றும் அவர் கூறினார்.