அண்டார்க்டிக் பெருங்கடல்/அமைப்பு

1. அமைப்பு
இருப்பிடம்
உலகின் தென் கோடியைத் தென் முனை என்று கூறுகிறோம். இம்முனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே அண்டார்க்டிக் கடல் ஆகும். ஐம்பெருங் கடல்களில் இது மிகக் குறைந்த ஆழமுள்ளது.
இதற்குத் தென் கடல் என்னும் பெயரும் உண்டு. பசிபிக் கடல், அட்லாண்டிக் கடல், இந்தியக் கடல் ஆகிய மூன்றின் பகுதியாக அமைந்துள்ள கடல் இது. இதைத் தனிக் கடல் என்று கூறுவதற்கில்லை. இதிலிருந்து கிளம்பும் பெரிய நீரோட்டங்களாக மேற்கூறிய கடல்களைக் கருதலாம். இதற்குக் கரைகள் இல்லை.
கண்டம் முதலியவை
இதன் மையத்திலுள்ள கண்டம் அண்டார்க்டிக் கண்டம். இதில் தீவுகளும் மலைத் தொடர்களும் உள்ளன. இதன் முக்கிய துணைக் கடல்கள் வெடல் கடலும் ராஸ் கடலும் ஆகும். மற்றக் கடல்களைக் காட்டிலும் குறைவாக ஆராயப்பட்ட கடல் இது. இதன் பரப்பு 80 இலட்சம் சதுர மைல்.
படிவுகள்
இதன் அடியில் படிவுகள் படிந்துள்ளன. அவை முதன்மையாகச் சேறு ஆகும். இச்சேறு நிலப்பகுதியிலிருந்து பனி ஆறுகளால் கொண்டு வரப்படுகிறது.
வெப்ப நிலை
ஆர்க்டிக் கடலைவிட இது மிகக் குளிர்ந்த கடல்; ஆழமான கடல். இதிலிருந்து பெரிய பனிப் பாறைகள் வெப்பத் துணைக் கடல்களுக் குச் செல்கின்றன.
இதன் மேற்பரப்பு வெப்ப நிலைகள் ஆண்டு தோறும் 40° F என்னும் அளவில் உள்ளன. அவை அடிக்கடி 28° F அளவுக்கும் வரும். அடிப் பகுதிகளின் வெப்ப நிலைகள் 31° F என்னும் அள வில் இருக்கும்.
பனிக்கட்டி
இது பெரும்பாலும் அடர்ந்த பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. மாரிக் காலத்தில் முழுக் கட லும் உறைந்து ஒரே பனி வெளியாகக் காட்சி அளிக்கும். பார்ப்பதற்கு எங்கும் பனிக்கட்டி தான் தென்படும். கோடையில் பனிக்கட்டி உருகும்; நீர் மீண்டும் தலைகாட்டும்.
இக்கடல் அனுப்பும் பனிப்பாறைகள் ஆர்க்டிக் கடலின் பனிப்பாறைகளைக் காட்டிலும் மிகப் பெரியவை. ஆகவே, அவை மிக மெதுவாக உருகும்.
உப்பு
மற்றக் கடல்களைக் காட்டிலும் இதற்கு உப் புத் தன்மை குறைவு என்றே சொல்ல வேண்டும். நீர் ஆவியாதல் குறைந்த அளவுக்கு நடைபெறுவ தாலும், கோடையில் பனிப் பாறைகள் உருகுவ தால் வரும் நீரினாலும் இதன் உப்புத் தன்மை அதாவது கரிக்கும் தன்மை குறைவாகவே உள்ளது.
வாயுக்கள்
இதில் கரைந்துள்ள வளிகள் அல்லது வாயுக்கள் நைட்ரஜன் என்னும் உப்பு வாயுவும்; ஆக்சிஜன் என்னும் உயிர்க் காற்றும் ஆகும். இவ்வளிகள் கரைந்திருக்கும் அளவு அதிகமாக உள்ளது.
அடர்த்தி
இக்கடல் நீரில் குறைந்த வெப்ப நிலைகள் நிலவுகின்றன. ஆகவே, நீரின் அடர்த்தி அதிக மாகும்.
ஓட்டங்களும் அலை எழுச்சிகளும்
இதில் செறிவான குளிர்ந்த நீரோட்டம் ஒடுகின்றது. இதற்கு அண்டார்க்டிக் மிதப்பு நீரோட் டம் என்று பெயர். இது நன்னம்பிக்கை முனை யில் அகுலாஸ் நீரோட்டம் என்னும் பெயரைப் பெறுகிறது.
இதிலிருந்து அலை எழுச்சிகள் தொடங்கி, மற்றப் பெருங்கடல்களில் தலைகாட்டுகின்றன.
உயிர்கள்
இக்கடல் உறைந்த போதிலும், அதில் உயிர் கள் வாழ்கின்றன. மேற்பரப்பில் முதன்மையாக டையாட்டம் என்னும் ஓரணு உயிர்கள் உள் ளன. மற்றும், கீழ்நிலைத் தாவரங்களும் காணப் படுகின்றன.
இதன் ஆழமற்ற பகுதியில் கடற் பஞ்சு போன்ற முதுகு எலும்பு இல்லாத உயிர்கள் வாழ் கின்றன. கடற் பூண்டுகள் அதிகம். க ட ல் நாய்கள், நீர் யானை முதலிய விலங்குகளும் உண்டு.
இக்கடலில் மீன்கள் அதிகம். அவை பொருள் வளத்தை அளிக்க வல்லவை.
பலவகைத் திமிங்கிலங்களும் காணப்படு கின்றன. அவற்றில் நீலத் திமிங்கிலம் என்பது 100 அடி நீளமும் 100 டன் எடையும் இருக்கும். இது அண்டார்க்டிக் விலங்குகளிலேயே மிகப் பெரியது.
வாணிப வழிகள்
மற்றக் கடல்கள் போன்று இதில் வாணிப வழிகள் இல்லை. இங்கு முக்கியமாகத் திமிங்கில வேட்டைக் கப்பல்களும் ஆராய்ச்சிக் கப்பல் களுமே வரும். விமானங்களும் இறங்கும். எதிர் காலத்தில் வாணிப வழிகள் அமையலாம்.