அண்டார்க்டிக் பெருங்கடல்/ஆராய்ச்சியின் முடிவுகள்

7. ஆராய்ச்சியின் முடிவுகள்

நில இயல்நூல் ஆண்டில் அண்டார்க்டிக்கில் பன்னிரண்டு நாடுகளால் ஆராய்ச்சி, விரிவாக மேற்கொள்ளப்பட்டது. அ வ் வாராய் ச்சியி ன் முடிவுகள் யாவை என்பதை இனி இறுதியாகக் காண்போம்,

உலகம் வெப்பமடைதல்

வானிலை நூலார், இந்த நூற்றாண்டிலிருந்து உலகம் வெப்பமடைந்து கொண்டு வருகிறது என்று நம்புகிறார்கள். அண்டார்க்டிக்கில் திரட் டிய செய்திகள் அவர்களுடைய நம்பிக்கையை உறுதி செய்கின்றன.

டாக்டர் எச். ஈ. லேண்ட்ஸ்பர்க் எ ன் பார் அமெரிக்க வானிலை நிலையத்தின் இயக்குநர். அவர் கூறுவதாவது : அண்டார்க்டிக்கில் திரட் டிய வெப்பநிலைச் செய்திகள் ஒரு புதுக்கொள் கைக்கு இடமளிக்கிறது. அக்கொள்கை உலகம் வெப்பமடைந்து கொண்டு வ ரு கிற து என்ப தாகும்.

அ வ ர் கூற்றுப்படி உலகம் வெப்பமடை வதற்கு இரு கொள்கைகள் கூறப்படுகின்றன. ஒன்று மாற்றம் மனிதனால் ஏற்படுவது ஆகும். நிலக்கரியும் எண்ணெயும் எரிக்கப்படுகின்றன. அவ்வாறு எரிப்பதால் உண்டாகும் கரிக்காற்று ஒரு படலமாக அமைந்து நிலவுலகினால் வெளி விடப்படும் வெப்பத்தைத் தடுக்கிறது. மற்றொன்று : கதிரவன் கதிர்வீச்சு அதிக மாக உள்ளதால், வெப்பமும் உயர்ந்துள்ளது.

தென் முனையில் வெப்பம்

டாக்டர் ஹெர்பீடு காயின்கஸ் ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த வானிலை நூலார். அவர் அண்டார்க்டிக் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவர் கூறுவதாவது :

தென் முனைக்கு டிசம்பர் மாதம் நடுக்கோடையாகும், அப்பொழுது அது அதிக அளவு கதிரவன் வெப்பத்தைப் பெறுகிறது. இவ்வாறு உலகில் வேறு எந்த இடமும் வெப்பத்தைப் பெறவில்லை.

கிட்டத்தட்ட 90 பங்கு அளவுக்கு அண்டார்க்டிக் கதிரவன் வெப்பத்தைப் பெறுகிறது. ஆனால், அவ்வெப்பம் பிரதிபலித்தல் மூலம் மீண்டும் இழக்கப்படுகிறது.

பனிக்கட்டியின் மேலடுக்கு நேர்த்தியான மணல் துளிகள் நிறைந்தது. அன்றியும், மிகக் கடினமானது. ஆகவே, வெப்பம் உறிஞ்சப்படுதல் மெதுவாகவே நடைபெறுகிறது.

பனிக்கட்டியின் மேலடுக்குக் கடினமாக இருப்பதால், நடப்பதால் அதன் மீது அடிச்சுவடுகள் விழா. அவ்வாறு விழுந்தாலும், பல வாரங் களுக்கு அவை அப்படியே இருக்கும்; மறையா. இந்நிகழ்ச்சி அண்டார்க்டிக்கில் ஆவியாதல் குறைந்த அளவுக்கு நடைபெறுவதைக் காட்டுகிறது. 


மிகக் குளிர்ந்த இடம்

அண்டார்க்டிக்கில் வாஸ்தோக் என்னுமிடத்தில் சோவியத்து நிலையம் உள்ளது. இதன் தலைவர் வேசிலி சிடோரோவ். இவர் கூறுவதாவது :

சோவியத்து அண்டார்க்டிக் ஆ ர ா ய் ச் சியாளர்கள் உலகில் மிகக் குளிர்ந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த இடம் மேற்கூறிய வாஸ்தோக் ஆகும். இங்கு எஃகுக் குழாய்களை சம்மட்டியால் அடித்துக் கண்ணாடிகளை உடைப் பதுபோல் உடைக்கலாம். இங்கு 1958 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ப தி வா ன மிகக் குறைந்த வெப்பநிலை-87.4°C (-126°F).

இங்குத் திரவ உணவைச் சமைக்கவே ஐந்து மணி ஆகும் என்று சிடோரோவ் கூறுகிறார்

உலக வானிலையை உருவாக்குவதில் குளிர்ந்த கண்டமான அண்டார்க்டிக் சிறந்த இடத்தைப் பெறுகிறது என்பதைப் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை காட்டுகிறது.

விண் கதிர்கள்

பல பயணங்கள் அண்டார்க்டிக்குக்கு மேற். கொள்ளப்பட்டன , ஆராய்ச்சிகள் .ெ ச ய் ய ப் பட்டன. பலூன்கள் வாயிலாகவும் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. விமானம் ஒன்று நிலநடுக் கோட்டைச் சுற்றிப் பறந்து வந்தது. விண்கதிர் களின் வழிகளில் திரிபுகள் அல்லது மாற்றங்கள் காணப்படுகின்றன என்று மேற்கூறிய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகின்றது. விண்கதிர்களுக்கு நிலநடுக்கோடு 45° அளவுக்கு மேற்காகச் சாய்ந்து உள்ளது என்பதும் தெரிய வந்தது.

பனிக்கட்டி

அண்டார்க்டிக்கில் 14,000 அடி ஆழம் வரை பனிக்கட்டி இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் உலகிலுள்ள பனி, பனிக்கட்டி ஆகியவற்றின் மதிப்பீடு மாறியுள்ளது. அ ம் மதிப்பீட்டின்படி பனிக்கட்டி 40 பங்கு அளவுக்கு அதிகமாகியுள்ளது. பனிக்கட்டியின் பரிமாணம் கிட்டத்தட்ட 32; இலட்சம் கன மைல்களாக இருந்தது. 45 இலட்சம் கன மைல்களாக மாறியுள்ளது. திருத்தப்பட்ட இம்மதிப்பீடு உலகின் வெப்பம், நீர் ஆகிய இரண்டின் சமநிலையைத் திறம்பட ஆராய உதவும்.

நிலத்தொகுதி அல்ல

அண்டார்க்டிக் கண்டத்தின் பரப்பு 60 இலட்சம் சதுர மைல்கள். அது ஒரு நிலத்தொகுதி அல்ல; தீவுகளும் மலைத்தொடர்களும் அடங்கிய ஒரு தொகுதி. இத்தொகுதி பனி உறைக்குக்கீழ் புதைந்துள்ளது.