அதியன் விண்ணத்தனார்


அதியன் விண்ணத்தனார்

தொகு

அகநானூறு- 301. பாலைத்திணை

தொகு
(பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது)


வறனுறு செய்தியின் வாடுபு வருந்திப்
படர்மிகப் பிரிந்தோ ருள்ளுபு நினைதல்
சிறுநனி யான்றிக வென்றி தோழி
நல்குந ரொழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை யின்றி யோம்பா துண்டு (5)
நீர்வாழ் முதலை யாவித் தன்ன
ஆரை வேய்ந்த வறைவாய்ச் சகடத்
தூரிஃ தென்னாஅர் தீதிலா வாழ்க்கைச்
சுரமுதல் வருத்த மரமுதல் வீட்டிப்
பாடின் றென்கிணை கறங்கக் காண்வரக் (10)
குவியிண ரெருக்கின் றதர்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்கழல் விளக்கத்துக்
களரி யாவிரைக் கிளர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வரச் (15)
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பக்
கார்வான் முழக்கி னீர்மிசைத் தெவுட்டுந்
தேரை யொலியின் மாணச் சீரமைத்துச்
சில்லரி கறங்குஞ் சிறுபல் லியத்தொடு (20)
பல்லூர் பெயர்வன ராடி யொல்லெனத்
தலைப்புணர்த் தசைத்த பஃறொகைக் கலப்பையர்
இரும்பே ரொக்கற் கோடிய ரிறந்த
புன்றலை மன்றங் காணின் வழிநாள்
அழுங்கன் மூதூர்க் கின்னா தாகும் (25)
அதுவே மருவின மாலை யதனாற்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே.
"https://ta.wikisource.org/w/index.php?title=அதியன்_விண்ணத்தனார்&oldid=13095" இலிருந்து மீள்விக்கப்பட்டது