அந்தி இளங்கீரனார்
அந்தி இளங்கீரனார்
தொகுஅகநானூறு- 71. பாலைத்திணை.
தொகு- (பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது)
- நிறைந்தோர்த் தேரு நெஞ்சமொடு குறைந்தோர்
- பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉ
- நயனின் மாக்கள் போல வண்டினஞ்
- சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
- மையின் மானின மருளப் பையென (5)
- வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப
- வையறி வகற்றுங் கையறு படரோ
- டகலிரு வான மம்மஞ் சீனப்
- பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை
- காதலற் பிரிந்த புலம்பி னோதக (10)
- ஆரஞ ருறுந ரருநிறஞ் சுட்டிக்
- கூரெஃ கெறிஞரி னலைத்த லானா
- தெள்ளற வியற்றிய நிழல்காண் மண்டிலத்
- துள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி
- மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந் (15)
- திதுகொல் வாழி தோழி யென்னுயிர்
- விலங்குவெங் கடுவளி யெடுப்பத்
- துளங்குமரப் புள்ளிற் றுறக்கும் பொழுதே.