12

பித்துப் பிடித்தவள் போல் எவ்வளவு நேரம் அந்த அறை வாயிலில் நின்றோம் என்பது சுமதிக்கே நினை வில்லை. மற்றவர்களுக்குக் கூசுகிற பல விஷயங்கள் சினிமா உலகில் உள்ளவர்களுக்கு மரத்துப் போயிருப்பது தெரிந்தது. மறுபடி மாடிக்கே படியேறிப்போய் டான்ஸ் மாஸ்டரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று மேலே நிமிர்ந்து பார்த்தால் மாடி முகப்புக் கதவும் அடைத்திருந்தது. படியேறிச் சென்று கதவைத் தட்டுவதற்கு அவளுக்குப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. அந்த வீட்டில் எந்தக் கதவுக்குப் பின்னால் என்ன இருக்குமோ என்ற கூச்சம் இன்னும் இருக்கத்தான் செய்தது. ஆனால் படிப்படியாகச் சுமதியின் மனம் பேதலித்துக் குழம்பியது. கூச்சம் போய்ச் சலிப்பு வந்தது.

இவர்களெல்லாம் இப்படி இருக்கிறார்களே என்ற ஆத்திரம் வருவதைவிட இப்படி இருப்பதுதான் வாழ்க் கை போலிருக்கிறது என்ற சலிப்பு மட்டுமே வரத் தொடங்கியிருந்தது. மேரி எவ்வளவோ தந்திரமாகவும் பொறுமையாகவும் தனக்கு வலை விரித்திருந்தாலும், அவள் வலைதான் விரித்திருக்கிறாள் என்ற சுமதிக்குப் புரிந்ததே ஒழிய உறைக்கவில்லை.

'இன்னிக்கு இந்த ஆளை விட்டுடாதே! ஆள் நல்ல 'மூட்லே இருக்கான்' என்று அரைமணி நேரத்திற்கு முன் மேரி தன்னிடம் சொல்லியிருந்தாளே அந்த வாக்கியம் சுமதியின் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது.

அதையும், அது போன்ற வாக்கியங்களையும் சகித்து ஜீரணித்துக் கொள்கிற அளவு தன் மூளை சலவையாகி விட்டதோ என்றுகூட அவள் நினைத்தாள். தொடர்ந்து தவறுகளாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாளடைவில் எது சரி எது தவறு என்ற கூடக் கண்டு பிடிக்கும் உணர்வு போய்விடும். தொடர்ந்து பாவங் களாகவே கண்டுகொண்டிருப்பவர்களுக்குப் புண்ணியத் தைப் பற்றிய உணர்வு மரத்துப் போய்விடும். மேரி தன்னுடைய தந்திரத்தாலும் கெட்டிக்காரத்தனத் தினாலும் சுமதியை மெல்ல மெல்ல அந்த நிலைக்கு ஆக்கிவிட்டிருந்தாள். குழப்பி விட்டிருந்தாள்.

"நிற்கிறீங்களேம்மா. உட்காருங்க” என்று பையன் ஒரு மடக்கு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து பிரித்துப் போட்டான். சுமதி உட்கார்ந்து கொண்டாள்.

அன்று செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செய்தது போல் அருவருப்படைந்து ஒடுகிற சக்தி இப்போது சுமதியிடமே இல்லை. இந்த அளவிற்குத் தன் உணர்வுகள் பதிந்து போய்விட்டனவே என்ற ரோஷம்கூட இப்போது அவளுக்கு வரவில்லை.

சிறிது நேரத்தில் ஒன்றுமே நடக்காததுபோல் சகஜ மாகப் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண் னியபடி மேரி அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சுமதியைக் கண்டதும், "என்னடி நீ இங்கேயா உட்கார்ந்துக்கிட்டிருக்கே: மாடியிலே போய் டான்ஸ் மாஸ்டரைச் சந்திக்கலியா?” என்ற கேட்டபடி ரூபாய் நோட்டுக்களை அப்படியே 'பிளவுஸ்"க்குள் திணித்துக் கொண்டாள் மேரி. -

கையிலிருந்த டம்பப் பையை விட்டு விட்டுப் பிளவுஸ்-க்குள் பணத்தை அவள் திணித்துக்கொண்டது சுமதிக்கு ஒரு வித்தியாசமான பழக்கமாகத் தெரிந்தது.

"டான்ஸ் மாஸ்டரைப் பார்த்துட்டு வந்தாச்சு’ என்றாள் சுமதி. ஒரு நிமிஷம் பொறுத்து, "நாளையிலே யிருந்து டான்ஸ் கிளாஸுக்கு வரச் சொன்னாரு. மாச ஃபீஸ் நூத்தைம்பது ரூபாய்னும் சொன்னாரு” என்றும் சேர்த்துச் சொன்னாள். ' பணத்தைப் பத்திக் கவலைப்படாதே! நான் இருக்கேன். யூ கோ எஹெட்” என்று சொல்லிச் சுமதியின் முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள் மேரி. "கன்னையா துரங் கிட்டாரு. நாளைக் குச் செம்பரம் பாக்கம் ஏரியிலே ஏதோ 'அவுட்டோர் ஷூட்டிங் இருக்காம். அதுக்கு உன்னையும் வரச்சொல்லி எங்கிட்ட முன்பணம் கொடுத்திட்டாரு. அவர் கார்லியே போயி உன்னை ஹாஸ்டல் வாசல்லே 'டிராப் பண்ணிட்டு இப்ப நான் போறேன்” என்று சுமதியிடம் சொல்லிவிட்டு வாசற்பக்கம் நின்ற பையனைக் கைதட்டிக் கூப்பிட்டு மேரி காருக்குச் சொன்னாள்.

கார் ஸ்டார்ட் ஆகிற சத்தம் கேட்ட சுவட்டோடு முகப்பில் கொண்டுவந்து தயாராக நிறுத்தப்பட்டது.

இருவரும் காரில் ஏறி அமர்ந்ததுமே பிளவுஸில் கையை விட்டுப் பணத்தை எடுத்த மேரி மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைச் சுமதியிடம் கொடுத்தாள்.

"உங்கிட்டவே இருக்கட்டுமே! நான்தான் உனக்கு நிறையத் தரணுமே” என்று அதை வாங்கிக்கொள்ளத் தயங்கினாள் சுமதி. *

"நோ நோ! அதெல்லாம் அப்புறம் தா. வாங்கிக் கறேன். இப்ப இதை ரெஃப்யூஸ் பண்ணாதே. முதல் முதலா நீ சம்பாதிக்கிற பணம் இது” என்று சிரித்தபடியே சுமதியின் கைகளில் திணிக்காத குறையாக அதை வைத்து அழுத்தினாள் மேரி. சுமதி வாங்கிக் கொண் டாள். மறுக்கும் சக்தியும், தடுக்கும் சக்தியும் இப்போது அவளை அறவே கைவிட்டிருந்தன. எதையும் அவளால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. எதற்கும் அவளால் முடியாது என்ற மறுக்க முடியவில்லை. அவள் மேரியின் கைப்பாவை போலாகி இருந்தாள். அவள் கொடுத்த பணத்தை எங்கே வைத்துக் கொள்வதென்று சுமதி திணறியபோது மேரியே அதை மறுபடி வாங்கி, “நமக்கு இதுதான் பத்திரமான இடம்டி!” என்று அதைச் சுமதியின் பிளவுசுக்குள் திணித்து விட்டாள். அதையும் சுமதியால் தடுக்க முடியவில்லை. தடுக்க முடியாததோடு அதற்கு இசைகிறேன் என்பதன் அடையாளமாக, “ஏதோ அவுட்டோர் ஷாட்டிங்ணியே. நாளை எத்தனை மணிக்கு, எங்கே வரணும்? இப்பவே அதைச் சொல்லிடு” என்று மேரியை அவளே வினாவவும் செய்தாள்.

"எங்கேயும் வரவேண்டாம். நீ பாட்டுக்கு ஹாஸ்டல் காம்பவுண்டுக்கு வெளியிலே வந்து பஸ் ஸ்டாப்பிலேயோ டாக்ஸி ஸ்டாண்டிலேயோ காலை எட்டரை மணிக்கு நில்லு. இதே வண்டி வந்து உன்னைப் பிக்-அப் பண்ணிக்கும்” என்றாள் மேரி.

“எட்டரை மணிக்கு அவ்வளவு காலங்கார்த்தாலே எனக்கு வார்டனிட்டப் பெர்மிஷன் கிடைக்கிறது கஷ்டமாச்சேடி. ?”

“நாளைக்கு ஒரு நாள் மட்டும் எப்படியாவது "மானேஜ் பண்ணிக்கோ சுமதி! அதுக்கப்புறம் பெர்ம னென்ட்டா உனக்கு நான் ஒரு வழி சொல்லித் தரேன். யாரிட்டவும் பெர்மிஷனே இல்லாம நீ வெளியே வரலாம்.”

அது என்ன வழி என்று அறிந்து கொள்ளச் சுமதிக்கு ஆவலாக இருந்தும் அப்போது மேரியை உடனே அதைச் சொல்லும்படி அவள் வற்புறுத்தவில்லை.

சுமதியின் அதிர்ஷ்டம் அவள் ஹாஸ்டல் வாசல் பஸ் ஸ்டாப் அருகே காரிலிருந்து இறங்கவும், விமலா யூனிவர்ஸிடி லைப்ரரியிலிருந்து பஸ்சில் திரும்பி வந்து இறங்கவும் சரியாக இருந்தது. இருவரும் சேர்ந்தே ஹாஸ்டலுக்குள் சென்றார்கள். அறைக்குள் சென்றதும் லாரி மாற்றும்போது பிளவுவிலிருந்து முந்நூறு ரூபாயை வெளியே எடுத்தாள் சுமதி. விமலா பார்த்திருக்கமாட் டாள் என்ற நினைப்பில் ரூபாய் நோட்டுக்களை எடுத்த சுமதி பக்கத்திலேயே நின்று தன்னைப் போல் லாரி மாற்றிக் கொண்டிருந்த விமலா அதை பார்த்ததும் சுமதி அர்த்தமின்றிச் சிரித்துக் கொண்டாள். மழுப்பலான ஒரு சிரிப்பாயிருந்தது அது.

“என்னடி சுமதி! போன இடத்திலே இத்தனை பெரிய வரும்படியா? விமலா சாதாரணமாகத்தான் இப்படிக் கேட்டாள். குத்தலாகவோ வேறு உள்ளர்த்தம் வைத்தோ அவள் சுமதியை இப்படிக் கேட்கவில்லை. முதல் நாள்சுடப் பணப் பற்றாக்குறை பற்றி வருத்தப் பட்டுக் கொண்ட சுமதியிடம் திடீரென்று மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைப் பார்த்தவுடன் சுபாவமாகக் கேட்பதற்கு வாயில் வந்த வார்த்தைகளைச் சிறிதும் தணிக்கை செய்து பேசத் தோன்றாமல் அப்படியே மனதில் தோன்றியபடி கேட்டிருந்தாள் விமலா,

சுமதிக்கு அந்தக் கேள்வி என்னவோ போலிருந்தது. இத்தனை பெரிய வரும்படியா? என்ற அவள் வார்த்தை கள் மிகவும் குத்தலாக அவளுக்குத் தோன்றின. ஆனால் அதற்காக விமலாவிடம் அவள் எரிந்து விழவில்லை. பொறுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையிலும் விமலாவிடம் சொல்லி அவ ளையும் அழைத்துக் கொண்டு வெளியே போவது போல் தான் வெளியேற முடிந்திருந்தது. முதல்நாள் சொல்லியி ருந்தபடி சரியாக எட்டேகால் மணிக்கு ஹாஸ்டல் வாசலில் இருந்த பஸ் ஸ்டாண்டிற்குக் கார் வந்துவிட்டது. கல்லூரிக்கு அன்று விடுமுறை நாள்தான். மாலையில் நேரங்கழித்து திரும்பினால்கூடப் பரவாயில்லை. ஆனால் சொல்லியிருந்தபடி காரில் மேரி வரவில்லை. நேரேயே தயாரிப்பாளரோடு போய் விட்டதாக டிரைவர் கூறினான். -

பூந்தமல்லி ஹைரோடில் ஒரு பெரிய ஹோட்டல் வாசலில் டிரைவர் காரை நிறுத்தி, "கொஞ்சம் இருங் கம்மா! அவுட்டோருக்கான டிஃபன், காபி எல்லாத் துக்கும் இங்கேதான் சொல்லியிருக்காங்க. டிக்கியிலே ஏத்திக்கிட்டு வந்துடறேன்” என்றான்.

சுமதி காரிலேயே உட்கார்ந்திருந்தாள். அரை மணி தாமதாமாயிற்று. எல்லாம் ஏற்றி முடிந்ததும் கார் மறுபடி புறப்பட்டது.

படப்பிடிப்பிற்குக் குறிப்பிட்டிருந்த லொகேஷனுக் குப் போனதும் முதலிலேயே போய்த் தயாரிப்பாளர், மேரி மற்ற நடிகர் நடிகைகள், எல்லாரும் அங்கே தயாராகக் காத்திருப்பதைப் பார்த்தாள் சுமதி.

"ரொம்பப் பெரிய வி.ஐ.பி. நட்சத்திரம்தான் கால் ஷட்லே கடைசியா வந்து சேரும். இன்னிக்கு நம்ம சுமதி தான் லேட்டா வந்திருக்கு. அதனாலே அவதான் வி.ஐ.பி” என்று தமாஷ் பண்ணினார் தயாரிப்பாளர்.

"நீங்க சொன்னாலும் சொல்லலேன்னாலும் அவ நிச்சயமா ஒரு நாள் வி.ஐ.பி. ஆகப்போறவதான் புரொட் யூலர் சார்” என்று மேரி சேர்ந்து கொண்டு சொன்னாள். இன்னும் சாதாரணமாக வருகிற வெயில் வெளிச்சம் கூட வரவில்லை. வானம் மந்தாரம் போட்டு மூடியி ருந்தது. அந்த இடம் வேறு மரக்கூட்டங்கள் அடர்ந்த தோட்டம் போல இருந்தது. "முதல்லே ஜமுக்காளத்தை விரிங்க. டிஃபன் சூடு ஆறிப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டுடலாம். மத்ததை அப்புறம் கவனிக்கலாம்” என்று தயாரிப்பாளர் உத்தரவு போட்டார்.


புல் தரையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டது. முக்கிய மானவர்கள் எல்லாம் வந்து உட்கார்ந்தார்கள். எங்கேயோ பராக்குப் பார்த்தாற்போல் நின்ற சுமதியைப் போய்க் கை யைப் பிடித்து இழுத்து வந்து தயாரிப்பாளருக்கும் தனக்கும் நடுவே உட்கார்த்திக் கொண்டாள் மேரி.

"டேய்! நம்ம எதிர்கால ஹீரோயினுக்குக் கூட ஒரு வடை வை” என்பதுபோல் இடையிடையே சுமதியை விசேஷமாகக் கவனித்து உபசரித்துக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர்.

ஜமுக்காளத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடையே பஞ்சவர்ணக்கிளி போல் தனித்துத் தெரிந்தாள் சுமதி. ஒரே அரட்டையும் சிரிப்புமாக இருந்தது. தொழிலாளிகளும் உப நடிகர், நடிகைகளும் சற்று விலகி ஒரு மரத் தடியில் தனியே சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார் கள். அவர்களில் சில பெண்கள் அடிக்கடி தன் பக்கம் கையை நீட்டிப் பேசும் போதெல்லாம் சுமதிக்கு என்னவோ ஓர் உணர்வு மனத்தில் குறுகுறுத்தது. தயாரிப் பாளர் அத்தனை பெரிய கூட்டத்தில் தன்னை மட்டும் விசேஷமாகக் கவனித்தது பலருக்கும் பிடிக்கவில்லை என்று சுமதிக்கே கூட ஜாடைமாடையாகத் தெரிந்தது. வந்த காரியமாகிய அவுட்டோர் ஷல்ட்டிங் பற்றிப் பதி னொரு மணிவரை யாருமே கவலைப்படவில்லை. டிபன் சாப்பிட்டு முடிந்ததும் பத்துப் பன்னிரண்டு நாலைந்து ரக சிகரெட் பெட்டிகள், வெற்றிலை - அசோகா, சுண் ணாம்பு என்று அடுத்த அயிட்டங்கள் பிரித்து வைக்கப் பட்டன.

"மேரி! இந்தா நீயும் பிடி" என்ற தயாரிப்பாளர் உற்சாகமாகக் கூறியபடி மேரியிடம் சிகரெட்டையும் தீப்பெட்டியையும் நீட்டியபோது மேரி கூட ஒரு சிக ரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு புகையைக் இழுத்து ஊதி விட்டாள். தயாரிப்பாளர் வேடிக்கையாக ஒரு தடவை மேரியின் முகத்துக்குக் குறிவைத்துப் புகை யை ஊதினார். அடுத்த தடவை சுமதியின் முகத்துக்குக் குறிவைத்துப் புகையை ஊதினார். சுமதி சிரித்தாள்.

'இப்போ உனக்கு என்ன வேஷம்னாப் பிரபல குந்தளகுமாரி ஏரியிலே விழறதா ஒரு காட்சி. அவளுக்கு உடம்புக்கு சுகமில்லை. அதுனாலே லாங்ஷாட்டிலே உனக்கு "டுப்” போட்டு அவ காட்சியை எடுத்துடலாம்னு இருக்கேன்.”

சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. டுப் போட்டு எடுக் கிறது என்றால் என்ன என்பதைத் தயாரிப்பாளரும், மேரி யும் அவளுக்கு விளக்கிச் சொல்லத் தொடங்கினார்கள். சுமதிக்கும் மெல்ல மெல்ல அது புரியத் தொடங்கியது. பன்னிரண்டு மணியளவில் வெயிலும் அங்கே ஓரளவு வந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/12&oldid=1146910" இலிருந்து மீள்விக்கப்பட்டது