அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஞானத் தாமரை வானத்தில் பூத்தது!

7. ஞானத் தாமரை வானில் பூத்தது

ஆங்கிலேயர் வருகையால்; ஆட்சியால், இந்திய நாகரீகம்: கலை, பண்பாடுகள், அரசியல் வரலாறு, ஆன்மீகப் பழக்க வழக்கச் செயல்கள் எல்லாமே மாறிவிட்டன என்பதை, இந்தியாவிற்கே நாரில் வந்து பார்த்த அன்னி பெசண்டுக்கு மாறா வடுவான ஆறாப் புண்ணாகவே அப்போது தென்பட்டது.

வெள்ளையன் வீசி எறிந்த பதவி, பணம், பட்டம், உத்தியோகம், பகட்டுவாழ்வு என்ற எலும்புகள் அனைத்திற்கும் அதனதன் தகுதிக்குரியவர்கள் அடிமைகளாக மாறி உழைத்தார்கள்.

கி.பி. 1885-ம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மனு போடுவதும், பிறகு 'காட் சேவ் தி கிங்’ என்ற தேசிய கீதம் பாடுவதே அரசியல் பணியாகக் கொண்டிருந்தது.

இந்த மிதவாத புத்தி, கோபால கிருஷ்ண கோகலே தலைவராக இருத்தவரை இருந்தது. திலகர் பெருமான் காங்கிரஸ் மகாசபையிலே காலெடுத்து வைத்த பிறகே, அதற்கு தன்மானம் பிறந்தது.

"சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என்ற மராட்டிய சிக்கக் கர்ஜனைக்குப் பிறகே, 'சுதந்திரம்' என்ற வார்த்த கனற்தெறிப்பாக பொறி பறந்தது.


விடுதலைப்போர் என்ற கரடுமுரடான வாகனப் பாதையிலே, காத்தியடிகன் தனது அகிம்சா அறப் போராட்டங்கள் நடத்திச் சிறை தண்டனைகனைப் பெற்று, 'சுதந்தரம்' என்ற உரிமை இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்று என்பதை ஆங்கில தர்பாருக்கே உணரவைத்தார்.

அன்றுவரை காங்கிரஸ் மகாசபை விடுதலை வேண்டும் என்றுதான் வேண்டிக் கொண்டதே தவிரத, 'கொடு' என்று தட்டிக் கேட்கவில்லை.

'இந்தியருக்கு நாட்டை ஆளும் அறிவும்- ஆற்றலும் இல்லை என்ற அடக்குமுறை ஆங்காரக் கூச்சவிட்ட போதுதான், அன்னி பெசண்ட் அம்மையார் இந்தியா வந்தார்!

ஆங்கில ஆட்சியினால் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் சீர்கேடடைந்த இந்தியாவைக் கண்டு, நான் புத்தகங்களில், வரலாறுகளில் படித்த நாடா இது? என்று வியந்து பரிதாபப்பட்டார்.

நாட்டை ஆட்சி செய்வதற்கான எல்லாத் தகுதிகளும் ஆற்றலும் அறிவும் இந்தியருக்கு உண்டு என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர் ஆட்சி நடைபெற்ற நாடு இந்தியா. கிராமப் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.

மக்களாட்சி முறையில் மன்னர்களையும், ஊராட்சி உறுப்பினர்கனையும் பொதுமக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்:

இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த இந்தியர்களுக்கா தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளத் தெரியாது? என்று அன்னி பெசண்ட் ஆங்கில ஆட்சியைப் பார்த்துக் கேட்டார்.

ஆளத் தெரியாது என்றும், அந்த அறிவும் ஆற்றலும் இன்னும் வரவில்லை என்ற ஊமைக் காரணங்களால் சைகை அறிகுறிகளைக் காட்டிப் பேசுவது, இந்தியர்கனை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் மாயை என்றார்!

அன்னி பெசண்ட், ஆங்கிலேயரின் மூடுமந்திர வித்தைகளைப் பொது மக்களிடம் தவிடுபொடியாக்கிக் காட்டிட அவரே நேரடி அரசியலில் ஈடுபட்டார்.

'ஹோம் ரூல்' இயக்கம் என்ற ஓர் இயக்கத்தை உருவாக்கினார்! அதற்கு அவரே தலைவர்! இந்த இயக்கத்துக்கு சுய 'ஆட்சி இயக்கம்' என்ற பெயர் ஏற்பட்டது.

பொதுமக்கள் பெசண்ட் இயக்கத்துக்குப் பேராதரவு காட்டினார்கள். அப்போதுதான் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலே நடந்த போராட்டத்தினை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார்: அவர் புகழ் வளர்ந்து வரும் நேரமாக இருந்தது.

இந்திய சுதந்திரத்துக்காக, "சட்டி மறுப்பு" ஒத்துழையாமை இயக்கம் போன்ற புதிய போராட்ட அறப்போர் முறைகளைக் காந்தியடிகள் மக்களிடையே அறிமுகப்படுத்தினார்.

இந்தக் கொள்கைகள், அன்னி பெசண்ட் அம்மையாருக்குப் பிடிக்கவில்லை; காந்தியடிகள் போராட்டத்தால் நாடு கொள்ளை, கொலை, புரட்சிக் களங்களாக மாறும் என்பது அம்மையார் கருத்து

இந்த முரண்பாடுகளால், காந்தியண்ணலுக்கும் அன்னி பெசண்டுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனாலும், மக்களால் விரும்பப்பட்ட தலைவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

தேசிய காங்கிரஸ் விடுதலை இயக்கமல்லவா? ஆனால் கருத்துப் பரிமாற்றங்கள், மோதல்கள் முரண்பாடுகள், விருப்பு வெறுப்புகள் தோன்றுவது சர்வ சாதாரணம் தானே!

முதல் உலகப் போர் நடைபெறும்போது, பிரிட்டிஷ் ஆட்சி காங்கிரஸ் கட்சியைக் கேட்காமலே இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தி விட்டது. இதைக் கண்ட மக்கள் கொதித்து எழுந்தார்கள்.

'இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்ற உறுதி மொழியை ஆங்கிலேயர் அரசு தரவேண்டும். தராவிட்டால் போரில் எந்த உதவியையும் செய்ய மாட்டோம்!' என்று, இந்தியத் தலைவர்கள் ஒருமித்தக் குரலில் பேசினார்கள்.


அன்னி பெசண்ட் அம்மையார், இந்தியத் தலைவர்கள் எண்ணத்திற்கு நேர் விரோதமாக இருந்தது "பிரிட்டிஷ் அரசு உறுதி மொழியை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாம் ஆங்கிலப் பேரரசுக்கு உதவிட வேண்டும்" என்று பெசண்ட் குரல் கொடுத்தார். ஆனால், மக்கள் அவர் கருத்தை ஏற்க மறுத்து விட்டார்கள்.

கூறிய கருத்தையே மீண்டும் கூறிக் கூறிப் பெசன்ட் அறிக்கை விடவே, அந்த அம்மையாரை ஆதரித்தவர்கள் யார் யாரோ, அவர்கள் அனைவரும் இப்போது எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். இருந்தும் பெசண்ட் பிடிவாதமாகவே பேசினார்; எழுதினார்;

பெசண்ட் பக்கம் ஆதரவு காட்டியவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால், அன்னி பெசண்ட் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியாவுக்கு கய ஆட்சி தேவை என்பதை மட்டும் பேசிக் கொண்டே இருந்தார்.

காங்கிரஸ் கட்சியிடம் அன்னி பெசண்ட் கருத்து மீது வேறுபாடு இருந்தாலும், அவரைக் காங்கிரஸ் மறக்கவில்லை; மக்களும் மறக்கவில்லை.

கல்கத்தாவில் தடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபைக்கு அன்னி பெசண்டை மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்; மக்களும் மகிழ்ந்தார்கள்.

அதே ஆண்டில் பெசண்ட் கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்கள் தண்டனை பெற்றார்! அவருடைய புகழ் முன்பைவிடப் பன்மடங்கு உயர்ந்தது; போற்றாத தலைவரில்லை; தொண்டர்கள் அவரது புகழ் என்ற பலாச்சுளை மீது மொய்த்துக் கொன்டிருந்தார்கள்.

இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் காங்கிரஸ் கட்சி மிதவாதிகள் கூடாரமாகிப் போன பிறகு அதே விடுதலைக்காக ஐரோப்பிய நாட்டு வீராங்கனை ஒருவர் சிறை சென்றார் என்றால் என்ன சாதாரண விஷயமா இது மக்களும் பத்திரிகைகளும் மனமுவந்து பாராட்டின.

அன்னி சிறையிலே இருந்து மீண்டார்! ஆங்கில அரசு விடுதலை செய்தது: வெளியே வந்ததும் அன்னியின் புகழ் மங்க ஆரம்பித்தது. ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கித்தை அன்னி குறை கூறி விமர்சித்ததே காரணமாக அமைந்தது. அது கூட அவ்வளவு முக்கியமன்று; அந்த இயக்கத்தை எதிர்க்குமாறு தொண்டர்களையே தூண்டிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது! அதனால் அவர் புகழ் தேய்பிறையாக மாறியது.

காந்தியடிகள் பலகோடி மக்களின் பாசமிகுத் தலைவர் அல்லவா? அவரை எதிர்த்ததால், மீண்டும் அன்னி இழந்த செல்வாக்கை இறுதிவரைப் பெற முடியாமலேயே போய்விட்டார்-பாவம்!

அதற்காக அன்னி பெசண்ட் சளைத்துவிடவில்லை: தொடர்ந்து எனது பணி காந்தியடிகளை எதிர்த்துக் கொண்டிருப்பதே, என்ற சூழ்நிலையில் அவர் எதிர்த்துக் கொண்டே இருந்தார்!

அன்னி பெசண்ட் நடத்தி வந்த 'க்திய இந்தியா தி காமன்வீல்' என்ற ஏடுகளிலும் காந்தியின் கொள்கைகளை எதிர்த்தே எழுதி வந்தார்.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற கொள்கையிலே மட்டும் தொடர்ந்து வலியுறுத்தியும்-வற்புறுத்தியும் எழுதிக் கொண்டே வந்தார்.

இங்கிலாந்து நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும் போது எல்லாம் அது சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவார்! வாதாடுவார்! தயக்கமே காட்டமாட்டார்!

என்றாவது ஒரு நாள் இந்தியா சுதந்திரம் பெறும் என்று அன்னி பெசண்ட் உறுதியாக நம்பினார்; என்றாலும், அந்த காந்தி எதிர்ப்பு சம்பவத்திற்குப் பிறகு, அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அரசியல் பற்றுக் குறைந்தது! இப்போது பிரும்மஞான சபை பணிகளிலே தீவிரமாகக் கவனம் செலுத்தினார்: இடைவிடாத உழைப்பு; அவற்றிலே எதிர்ப்பு: மீண்டும் களைப்பு! மறுபடியும் சிலிர்ப்பு!

இவ்வாறு மாறிமாறித் தொண்டாற்றும்நிலை ஆரம்ப முதல் அன்று வரை இருந்து கொண்டே வந்ததால் அவர் மூப்பு தொடர்ந்து பணியாற்றத் தடையிட்டது.

தனது வாழ் நாளின் இறுதிக் காலத்தைக் காசியிலே கழித்து, அங்கேயே மாண்டு போகலாம் என்ற ஆசை அவருக்கு இருந்தது. நினைப்பதெல்லாம் நடந்தா விடுகின்றது?

அவர் உருவாக்கிய பல்கலைக்கழக வளாகத்திலேயே அவர் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அந்தப் புகழாவது மாணவர்கள் இடையே நாள்தோறும் இணைக்கப்பட்டிருக்கக் கூடும்! அதுவும் நடைபெறவில்லை!

இறுதிக் காலத்தில் அவரது உடல் நிலை காசிக்குப் போக முடியாமல் போய்விட்டது. அதனால், அவர் 1913-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபதாம் தேதியன்று வான வெளியிலே ஞானமாகக் கலந்து விட்டார்.

அன்னி பெசண்ட் மறைவைக்கேட்ட மக்கள் கண்ணர் சிந்தினார்கள். பரிதாபமாக அழுகுரல் எழுப்பியது பிரும்மஞான சபை!

இங்கிலாந்து நாட்டிலே பிறந்து, இங்கிலாந்திலேயே வளர்ந்து, இங்கிலாந்திலே வாழ்ந்து இறுதி நாற்பதாண்டுகளாக இந்திய மக்களுக்காகப் போராடி, இந்திய மக்கள் விடுதலைக்காக, பிறந்த நாட்டு மண்ணின் வெள்ளைக்கார ஆட்சியை இந்தியாவிலே எதிர்த்து, சிறைத் தண்டனைகளை அனுபவித்து, பெண்ணுரிமைப் போர்களை நடத்தி பெண்களுக்காக மாதர் சங்கம் ஒன்றை முதன் முதலில் நிறுவிய மூதாட்டிப் பெருமகள் அன்னி பெசன்ட் அம்மையார்!

தன்னலம் விரும்பும் அரசியல் துறையில் எந்தவித விருப்பும் வெறுப்புமற்ற நிலையில் அன்னி பெசண்ட் வாழ்ந்தது அரசியல்வாதிகளுக்கு ஒரு மனப்பாடமாக இருக்கின்றது.

மூதறிஞி, மூதாட்டி, ஞானப் பெருமாட்டி, அறிவுச் சீமாட்டி, சுதந்தரப் பிராட்டியாக வாழ்ந்த அன்னி பெசண்ட் மறைவு இந்திய மக்களின் இதயத்தைத் துளைத்துவிட்டது.

1938-ம் ஆம் ஆண்டு இறந்த விடுதலை வீராங்கனை அன்னி பெசன்ட், மேலும் ஓர் பதினான்கு ஆண்டு காலம் வாழ்ந்திருப்பாரானால் ஆங்கிலேயரையே எதிர்த்து ஓர் ஆங்கிலப் பெண் கேட்ட சுதந்திரம் கிடைத்திருப்பதைக் கண்ணாலே கண்டிருக்கலாம்! பாவம் அண்ணி துரதிருஷ்டசாலி!

காந்தியடிகளைப் போல், அன்னி பெசண்டைப் போல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யைப் போல விரல்விட்டு எண்ண்க்கூடிய தன்னலமற்ற தியாகிகளின் உழைப்பும், உரமும்தான்; இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது என்பதை மட்டும் எவராலும் மறக்கவோ, மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அன்னிபெசன்ட்: காலம் இந்தியாவுக்குத் தந்த ஒரு கடமைக் கொடை!

அன்னி பெசண்ட் அம்மையார்: இந்திய புண்ணிய பூமிக்கு ஆன்மீகம் தந்த ஞான சிம்மாசனம்!

அன்னி பெசண்ட் அம்மைப் பெருமாட்டி: இந்தியாவுக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அறப்போர் தத்துவம் தந்த போராளி!

அன்னி பெசண்ட் பிராட்டி: உலக மனித நேயத் தத்துவத்துக்கு பண்பு வழங்கிய அன்புருவம்!

காலம் பொன் போன்றது என்ற பழமொழிக்கு மதிப்பளித்துப் பொதுவாழ்வுக் கடமையாற்றிய பெண்ணுலக வித்தகர்!

அன்னை தெரசாவைப்போல அயல்நாட்டிலே பிறந்தவர்! அன்னைக்கு முன்பு வாழ்ந்து மறைந்த அன்னை!

அயல்நாட்டார். அவர் எவராலும்-எவ்வித லாபமும் இல்லாமல், மக்கள் தொண்டே இறைவன் தொண்டென பணியாற்றி மறைந்த மேதைகளாகத் திகழ்வது ஒரு பெரும் வியப்பாக உள்ளது.

அன்னி பெசண்ட் மதத்தை எதிர்த்தார். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ், வால்டேர், ரூசோ போன்றவர் களைப் போல!

அன்னிபெசண்ட் நிற பேதங்களை விரோதமாகக் கருதவில்லை; எல்லோரும் மனிதர்களே என்று எழுதினார்- பேசினார்!

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் உலகச் சமுதாய உருவாக்கத் தத்துவத்தின்படி இத்தியாவிலே வாழ்ந்து காட்டியவர்.

உலக மக்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வளமாக வாழவேண்டும் என்ற பரந்த நோக்குடையவர் ஆன்னிபெசன்ட்;

அன்னிபெசண்ட் பழகுவதிலே இனிமையாளர்: எல்லாரையும் தேசிக்கும் பண்பாளர்! -

பிறர்மணம் புண்படும்படியாக, அவர் யாரையும் பேசமாட்டார்.

"வாழ்க வசவாளர்" என்ற தத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்த்தவர் அன்னி பெசண்ட்.

வாழ்க்கையில் உதவி என்று வந்தவர்களை தன்னிடம் இல்லாமற் போனாலும், இயன்றதைச் செய்துவிட்டு, மற்றவரைப் பார்க்க வழிகாட்டிவிடும் பண்புடையவர்!

சொல் தவறாதவர்; புகழை விரும்பாதவர்; பெருந்தன்மை மிகுந்தவர்; ஒழுக்கம் ஓம்பும்; சீலர்! குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிடும் குழந்தை மனம் கொண்ட குணாளர்:

தினசரி கடமைகளை எதத நெருக்கடிகள் வந்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு கடமைகளைச் செய்பவர்!

ஊன் உடலே கோயில் உள்ளமே இறைவன் என்ற திருமூலர் என்னப்படி உடலைப் பேணுவதிலே வல்வராகவே வாழ்தார்

அன்னி உலகம் போற்றும் நாவலர்! சிறந்த சிந்தனையாளர்! ஏற்றமிக்க எழுத்தாளர்! உணர்ச்சிகளின் உந்தகம்! புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர்; அஞ்சாமை அனைவரும் பெற வேண்டும் என்ற அரிமா நோக்காளர்!

தமிழ்நாடு என்ற பொய்கையிலே வண்ணக் கோலத்துடன் வன்ன முகம் காட்டி காட்சியளித்த அன்னி பெசண்ட் என்ற ஞானத்தாமரை, வானிலே பூத்தது! வாழ்க அன்னி பெசண்ட் பிராட்டியின் மக்கள் தொண்டு!