அமுதவல்லி/காதல் பொல்லாதது!



9. காதல் பொல்லாதது!

டெலிபோன் அழைத்தது. "ஹெல்லோ! யார் பேசறது?

ஓ, வாணியா?.... ஆமாம், நான் தான்... உன் அத்தான் தான் பேசறேன். இதோ, வீட்டுக்குத் தான் புறப்பட்டுக் கிட்டிருக்கேன்!... நீ இப்போதே டிரஸ் பண்ணிக்க ஆரம்பிச்சிடு, அப்பத்தான் நான் வந்து சேர்றதுக்கும் நீ புறப்பட்றதுக்கும் சரியாகவிருக்கும்! அடடே, கோபம் வந்துவிட்டதா? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், வாணி! என்ன ஷீபான் சில்க் தானே? பேஷ்! ஆர்கண்டி சோளியா? ரொம்பப் பொருத்தம்; ரொம்பப் பொருத்தம்! மினர்வாவுக்கு...! படத்தின் பெயரை மறந்திடாதே! ஒரு பெண் இரட்டை வேஷத்தில் இருவேறு குணச்சித்திரப் பாத்திரமாக நடிக்கிறாளாம். நண்பர்கள் சொன்னார்கள். இதோ, இன்னும் அரை மணியில் நான் வாணி விலாசத்தில் இருப்பேன். ஆமாம், வாணி! நீ தானே நான்! நான் தானே நீ? ஓ. கே!’

ரிஸீவர் தன் இடத்தில் மோனத் தவம் இருந்தது. எழுந்த மணி ஓசையின் மெல்லிய அலையில் வாணி சற்று முன் சிரித்த சிரிப்பு மிதந்தது; எதிரொலித்தது சிரிப்பில் வாணி உருவெடுத்தாள். பெண்கள் பாக்கியசாலிகள். சிரிக்கத் தெரிகிறது; சிரிக்க முடிகிறது. அவர்கள் இல்லையென்றால், உலகத்திலே சிரிப்பே தோன்றியிராதோ.. ? இல்லை. உலகமே தான் தோன்றியிருக்காதோ? பூவை எஸ். ஆறு முகம் 177

முகுந்தனுக்குச் சிந்திக்கத் தெரியாது; அதற்கு அவசியமும் கிடையாது. அவன் அப்படி; அவனுடைய வேலை அப்படி மாதா மாதம் தலைவலி மருந்துச் செலவு மிச்சம் தான். அப்படித் தான் அவன் எண்ணியிருந்தான். பின் எப்படி இந்த எண்ண அலைகள் பிறக்கின்றன? ஏன் பிறக்கின்றன? அவனுக்கு மண்டை ஓடு சூடேறி விட்டது.

மேஜை மீதிருந்த கண்ணாடித் தூண்டில் அவன் முகம் துலாம்பரமாகத் தெரிந்தது. 'டை'யைச் சரி செய்து கொண்டான். பைல் ஒன்று அவன் கையில் இருந்தது. புறப்பட்டான்.

“தாரா"

"....."

"தாரா"

மெல்லிய அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது-பெண்!யார் அது?-ஹேமாவா? பூமாவா? அல்லது தாராவே தானா?

மங்கையருக்கு இந்தக் கண்ணீர் தானாமே பொறுமையைப் போதிக்கிறதாம்-உங்களுக்குத் தெரியுமா?

"தாரா!"

அழைப்பு தூது சென்றது; அழைத்தவன் தூது சென்றான்.

தாராவின் கருவண்டுக் கண்களிலே கண்ணீர்த் துளிகள் சிரித்தன. சிரித்தனவா? சிந்தித்தன - சிந்திக்க வைத்தன-அவளையல்ல- அவனை.

அவனுக்குச் சிந்திக்க வேண்டிய தலையெழுத்து இல்லை என் 

178

அமுதவல்லி

றேனே? ஒரு வேளை அந்தத் தலையெழுத்தையே சிந்திக்க வைக்கப் போகிறானோ?

ஆம்!

வாணியிடம் சற்றுமுன் பேசினானே, அந்த வார்த்தைகள் கூக்குரலிட்டன: “ஆமாம், வாணி! நீ தானே நான்! நான் தானே நீ!’

முகுந்தனின் பெருமூச்சுக்கு உறவு முறை இனி எதி ற்கு ?

தாரா வின் பெருமூச்சு அவன் நெஞ்சடியில் முட்டி மோ தியது.

அவள் கையில் டவல் இருந்தது. சோப்பு டப்பா வேறு.

‘போய்விட்டு வா”

அவனால் அடுத்த அடி பெயர்த்து வைக்க முடிய வில்லை.

தாரா மீண்டாள். சோப்பு நுரையில்தான் அழகு ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் அவனை வெறிக்கப் பார்த்தாள். ஊமையாக, அழகியி ன் முன் பெரிய வக்கீல் கூட ஊமையாகப் போய்விட வேண்டு மாம். இப்பொழுது அழகியே ஊமையாகிவிட் டாளே! அவளுக்குக் கண்கள் பொங்கிவந்தன.

‘உனக்கு இன்னம் வேலை இருக்கா? மணி தான் ஐந்தாகப் போகுதே? உடல்நிலை சரியில்லையானால் வீட்டுக் குப் போய் ஒய்வு எடுத்துக் கொள்ளேன். நாளைக்கு வந்ததும் அந்த பாலன்ஸ் ஷீட்டை ைடப் பண்ணி விட்டால் தீர்ந்தது!” 

பூவை எஸ். ஆறுமுகம்

179

‘ரொம்ப நன்றி, ஸார்!’

“போப் வர்றேன், தாரா.” ‘நல்லதுங்க.”

அந்தியில் அவள் நிழல் சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டிருந்தது.

சூழ்ந்திருந்த மயான அமைதி முகுந்தனை விரட்டி யது. மூன்றாம் மாடியிலிருந்து பாய்ந்தோடினான்

கெடிலாக் புறப்படவிருந்த சமயத்தில் மழை புறப்பட்டு விட்டது. எட்டிப் பார்த்தான். கண்ணாடிக் கதவுக்கு நந்தியாக நடிக்க மனமில்லை. டம்பப் பையும் கையுமாக தாரா நின்றிருந்தாள்.

இரக்கம் ஒரு விலங்கு-அல்ல, அது ஒரு சிலந்தி வலை. எங்கோ படித்ததை ஏன் அவன் எண்ணிப் பார்த்தான்? அதே சடுதியில் ஏன் அதை மறக்கவும் யத்தனம் செய்தான்?

“தாரா. மழை வேறு வந்துவிட்டதே?... என் னுடன் காரில் வருகிறாயா?... உன்னை மயிலாப் பூரில் கொண்டுவிட்டு அப்புறம் அடையாறு போய்க்கொள் கிறேன். அது தானே எனக்கு வழியும் கூட?...”

அவள் சிரிப்புக்கு இணக்கம் என்று அர்த்தம்.

மழைச் சரங்களினூடே கார் பறந்தது. புஷ்பக விமானமாக தெரு விளக்குகளின் அடியிலேயே வெளிச்சத்தைப் பிரித்துக் காட்டியவாறு இடைநின்ற தெருக்கள் விடைபெற்றுக் கொண்டன. நடைபாதை வாசிகள் தம்பதி சமேதராகப் பின்னிப் பிணைந்து 

180

அமுத வல்லி

கிடந்தனர். அவனுக்கோ, அவளுக்கோ அவர்களைப் பற்றி அக்கறை கிடையாது. ஆனால், அவர்கள் அவனைப் பற்றி, அவளைப் பற்றி அக் கறைப்பட்டார்கள். பேச்சு வளர்ந்தது: ‘ஏ பொண்ணு, என்னா அப்பிடிப் பாத்துக்கிணே நிக்கிறே? பாவம். ஒங் கொள்ளிக்கண்ணு அவங்க மேலே வுளுந்திடப் போவுது... புதுக் கண்ணாலம் போலே!...”

கார் திரும்பியது. அவனுடைய இடது கைக் கடிகாரத்தில் அவளுடைய வலதுகை மோதிரம் உரசி விட்டது. கார் நின்றது. சைனா பஜார் நின்றது! புஹாரி முகமன் சொன்னது.

"சாயா இரண்டு!”

எதிரும் புதிருமாக பாதரவி விளக்கில் மிதந்தார் கள். ‘டை எம்பி விழுந்தது. நைலான் புடவையை விட்டு வெளியேறத் துடித்த வண்ணாத்திப் பூச்சிகள் எம்பி எம்பிச் சிறகடித்துப் பறந்தன. விசைக் கதவுக் குறும்பு ஜாஸ்தி. ‘குடும்ப அறை’ என்ற எழுத்துக்களைக் காட்டியது.

சிகரெட்டின் ஒரு முனையில் நெருப்பும், இன் னொரு முனையில் முட்டாளும் இருப்பதாகச் சொன் னானே, யாரோ ஒருவன்?

கபாலீஸ்வரர் ஆலயத்தில் புனிதம் இருந்தது. முகுந்தன் கும்பிடக் கைகளைத் தூக்கினான். நடுங் கின. நல்ல வேளை, பிழைத்தான். கார் ஓடிக் கொண்டிருந்தது.

“நீங்களும் வாணியும் தானே இன்றைக்குப் படத்திற்குப் போகப் போகிறீர்கள். அத்தான்?"

பூவை எஸ். ஆறுமுகம்

181

“ஆமாம்’
“உங்கள் இரண்டு பேருக்கென்றுதான் பிடித்த மழையும் நின்றுவிட்டது.’
"ம்"
“அத்தான். நான் கூட படத்துக்கு வரட்டுமா?”
“ஓ! வாயேன்? ஏன், நீயும் நானும் இப்படியே திரும்பி விடுவோமா?”
“ஓ!...”*
‘ஒ. இது!”
இரு ஜோடிக் கண்களுக்கு அப்படி என்ன தான் மாளாத பேச்சோ!... முகுந்தன் காயகல்பம் சாப்பிட வில்லை. சிறுவன் . ஆனான். மணல் வீடு தோன்றி. யது. அப்போது அவன் உள்ளத்தில்- உடலில் வித்திடப்பட்ட ஒர் இன்ப வெறி -- -
“தாரா!’
“அத்தான், அத்தான் காரை நிறுத்துங்கள், நான் இங்கேயே இறங்கிக் கொள்ள வேண்டும். தலை வலி தாள முடியல்லே. குட்நைட், அத்தான் !’
வாணி விலாசத்திற்கு வந்துதான். முகத்தில் புது வெள்ளமாகப் பெருகிய வியர்வையை துடைத்துக் கொண்டான் முகுந்தன்.
வாணி! வாணி!”
“இதோ வந்திட்டேன், அத்தான்!' 

182

அமுதவல்லி

கெடிலாக் கின் பின் ஆசனத்திலிருந்து எழுந்து, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் வாணி!
உலகம் பொல்லாதது.
காதல் பொல்லாதது!
காதல்’ என்றால் என்ன அர்த்தமாம்?

காதலைத் தொடங்கும் போது ஒருவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்-முடிக்கும்போது மற்றவர்களை ஏமாற்றுகிறான். இதைத் தான் உலகம் காதல் என்று பெயரிட்டு அழைக்கிறது!’

புரட்டு!

“... காதல் என்பது ஒரு ரப்பர் பலூன். காற்றை நிரப்ப நிரப்ப அது அழகாகத் தோன்றும். நன்றாக உப்பும், ஆனால் அது எப்போது உடையும் என்பது மட்டும் நிச்சயமில்லை!...”

நிஜம் தானா?

காதல் சோம்பேறிகளின் தொழில்; சுறுசுறுப்பு மிக்கவர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்.

வாஸ்தவந்தானா!

“காதலர் இருவர் பரிமாணமாக அறிந்த பின்,

இருவர் ஆத்மாவும் அறிவும் உடலும் ஒன்று கலந்து மலர்வதுதான் இலட்சியக் காதல். அத்தகைய காதல் 

பூவை எஸ். ஆறுமுகம்

183

துன்பத்திலும் இன் பத்திலும் நோயிலும் தே காரோக் கியத் தி லும், உலகின் எந்தத் தாக்குதல்களிலும் இணை பிரியாதது!’

அப்படியா?

வாழ்க்கையிலே காதலில் வெற்றி கண்டவர் களுக்கு அது ஒரு பூலோக சுவர்க்கம்; தோல்வி அடைந்தவர்களுக்கு அது ஒரு நரகக் குழி!

பொய்! பொய்! பொய்!

முகுந்தனுக்கு உலகம், வாழ்க்கையெல்லாம் அப்பொழுது நர கக்குழியாகத்தான தோன்றியது.

அழகுக்குப் பதவுரை சொல்லும் ஆருயிர் மனைவி இருந்தாள். எம். ஏ. பட்டத்திற்குப் பலன் சொன்ன அந்த இங்கிலீஷ் கம்பெனியின் மானேஜர் பதவி இருந் தது. கெடிலாக், இருந்தது. வாணி இருந்தாள், அன்பு மனைவியாக. எல்லாம் இருந்தது- ஆனால், காதல் இல்லை ! தாரா இல்லை!

சூன்யம் நையாண்டிச் சிரிப்புச் சிரித்தது: பெண்கள் மணவறையில் அமரத் துடிப்பார்கள். ஆண்களோ, திருமண வினையினின்றும் எவ்வளவு துாரம் எவ்வளவு காலம் விலகிவிட முடியுமோ, அவ்வளவு வரை விலகியேயிருப்பார்கள்!

தாரா!

அவள் அவனுடைய உரிமைப் பெண். பிஞ்சுக் கரங்கள் கட்டிய அன்பு மணல் வீட்டை காதல் அத்தாணி மண்டபமாக நிர்மாணித்து விடவேண்டு மென்று பொழுதெல்லாம் கனவு கண்டார்கள், ஒரே

184

அமுதவல்லி

கல்லூரியில் கூட்டுப்படிப்பு- எம். ஏ. காதல் என்ற ஒன்றே அவர்களது தாரக மந்திரமாக அமைந்தது. வாழ்க்கையையே காதலாக்கிவிடப் பார்த்தார்கள். காதலையே வாழ்க்கையாக்கிவிடத் துடித்தார்கள், காதலில் தோற்றவன் உளறிக் கொட்டிய கவிதைகளை எண்ண அலைகளைத் தேடிப்பிடித்துக் கிழித்தெறிந்தார்கள். காதலில் வெற்றி கண்டவனின் அனுபவ மொழிகள் அவர்கள் வரைப் பொன் மொழிகளாயின. திருமண நாள் வந்தது - ஆனால், திருமண வேளை வரவில்லை. முகுந்தன்-தாரா இருவரும் தம்பதியானால், அவர்களில் ஒருவர் இன்னெரு. வரை வெகு சீக்கிரமே இழந்துவிட நேரிடுமாம். காதல் தோற்றது. தோற்கடிக்கப்பட்டது,

வாணி!- கானலாகி விட்ட அவனுடைய வாழ்வின் அன்பூற்றாகத் தோன்றினாள். இனிய பாதிஉயிர்த்துணை-மனை விளக்கு போன்ற முத்திரைகள் அவள் தாலிச் சரட்டில் மின்னின. .

முதல் இரவு வந்தது. ‘வாணி, நீ என் மனைவி. என்னுடன் இரத் தத்தோடு இரத்தமாக, உயிரோடு உயிராக, உணர்வோடு உணர்வாகப் பின்னிப் பிணைந்திருக்க வேண்டியவள்- நீ என் மனைவி, உயிர், உலகம்! இது என் இரண்டாம் காதல். கலியாணத்திற்குப் பிறகுதான் சிலருக்குக் காதல் கணிபு. மாம்-நாம் இந்த ரகம். உன்னிடம் நான் எதையும் மறைக்கவிரும்பவில்லை. என் முதற் காதல் தோற்று விட்டது. மறந்துவிட மாட்டாயே?- நீ தான் நான்; நான் தான் நீ...!’

வாணி புதுமைப் பெண். 

பூவை எஸ். ஆறுமுகம்

185

அவள் படித்திருந்தாள். ஒரு பெண் தன் புருஷனை வசீகரிப்பதில் தாசியாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என்பதை.

அவன், அவளுள் இரண்டறக் கலந்தான்.

என்றோ ஒரு நாள், தாரா வந்தாள். உருவம் தெரிந்தது; திகைத் தான். முதற் காதல் கண்ணிர் விட்டது. அவள் வேலை வேண்டுமென்றாள். ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆனாள். ஆபிஸ் வியவ காரங்கள் எல்லையிலேயே சுபம் கூறின.

அன்றைக்கு அழகி தாரா வின் மோதிரமும் முகுந்தனின் கைக் கடிகாரமும் கைகுலுக்கிக் கொண்ட போது-? ஒரு சில கணப் பெருழுதிலே, ஒரு பெண் நீண்ட காலத்திய உணர்ச்சிமயமான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். தாராவுக்கென்று-முகுந் தனுக்கென்று எழுதப்பட்ட எழுத்தா?- தாரா ஏன் விம்மினள் ? - உணர்ச்சிவசப் பட்டவர்களுக்கு வாழ்வு ஒரு சோக நாடகமா?

அன்று, திட்டமிட்டிருந்த திரைப் படத்திற்குத் தன் உயிரின் மறு பாதியை அவன் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதற்குள், அவன் பட்ட பாடு சொல்லத் தரமல்லவே?- ‘வாணி, மனம் சலன மடைந்த தென்னவோ வாஸ்தவந்தான். ஆனால், நான் உன்னுடைய உரிமை என்பதை ஒரு போதும் மறக்க மாட்டேன். நான் உன்னை விட்டு ஒரு நாளும் பறி போக மாட்டேன். என்னை நம்பு, கண்ணே! இது ஆணை !’

அன்பு பயம் செறிந்தது.

அ-12 

186

அமுதவல்லி

வாழ்க்கை பயம் செறிந்தது.

வாணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நோய்க்குப் பெயர் வைக்க டாக்டருக்கு ஆள் போயிருந்தான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது முகுந்தனுக்கு. அழவேண்டும் போலிருந்தது. வாணியின் தங்க மேனியில் நெருப்பு மூட்டம் போடப்பட்டிருந்தது. பத்திரை மாற்றுத் தங்கம் உருகி வழிந்தோடிக் கொண்டிருந்தது.

காட்டிலிருந்து திரும்பிய ராமர், சீதையைத் தீக் குழியில் இறங்கச் சொல்லி, அவளுடைய புனி தத் தைப் பரீட்சை செய்தாராமே?- வழிநெடுக் கதைத்துக் கொண்டு சென்றவனின் வாய்மொழி அவன் காதுகளை ஏன் முற்றுகையிட வேண்டும்.

“என் வாணி சொக்கத் தங்கம். நான் அவளுக்கு ஏற்ற கணவன் தானா என்பதைப் பரீட்சிக்க அவ ள ல்லவா எனக்குச் சோதனை நடத்தவேணும்?...-- தன்னுள் தனதாக, தானே தானாக-எண்ணமே அவனாக-அவனே எண்ணமாக, மனச் சாட்சியாக, மனிதத் தன்மையாகச் சுழன்றான்; கனன்றான்; கதறினான்.

இடது கையில் கடிகாரம் இழைந்திருந்த இடம் சுட்டது. தீக்குச்சியைக் கிழித்து அந்த இடத்தைப் பொசுக்கிவிடத் தான் துடித் தான். ஆனால், வாணி அவன் மீதல்லவா தன் அன்புப் பார்வையை வலை வீசியவாறிருக்கிறாள்: நோயின் வேதனையை மறக்க முடிந்தது போலும்! - -

பொங்கி வந்தது கண்ணிர். அவன் பார்த்து விட ஒாகாதேயென்று முகுந்தன் எதிர்ச் சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டான். அவர்களது திருமணப் 

பூவை எஸ். ஆறுமுகம்

187

புகைப்படம் இருந்தது. தேதி-30 ஜனவரி, 1953. பெண் மனத்துக்கும் ஆண் மனத்துக்கும் மூன்று முடிச்சுகள் போட்டுக் கொண்ட புனித வேளை நினைவில் ஒடியது. யாரோ ஒரு த்தியாக மனை புகுந்து, தன் உரிமையாக மனம் புகுந்த மனை விளக்கை அவன் போற்றாத வேளை யுண்டா? புக ழாத போது எண் டா? - சக்தியுள் சிவ மாகி, சிவத்துள் சக்தியாகி விட்டவர்கள்!

வாழ்க்கை புதிராகத் தான் இருந்தது. ஆனால், அவன் வரை வாணி புதிராக அமையவில்லை. பெண் புதிராம், புதிர்! பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாதவன் உளறிக் கொட்டிய பொய்-பச்சைப் பொய் இது! அப்படி யென்றால், அன்றைக்கு, அவன் தாராவைக் காரில் கொண் டுபோய் விட்டுத் திரும்பு கையில், காரினின்றும் அவன் துணைவி வாணி இறங்கி வந்தாளே...?

அந்த ஒரு நான் - ‘வாணி.”

"......"

கோபமா, வாணி!”

“ஊஹூம்’

‘பார்த்தியா, ஏன் கோபப்படனும்னு ஒரு வார்த்தை கேட்கக் காணமே?”

"ஏனாம்?”

“தாராவைக் காரில் கொண்டு விட்டு தாமத ஆமாக வந்தது க்கு...?’’

“அதிலே தவறில்லையே?’’ 

188

அமுத வல்லி

“சரி, நீ ஆபீசுக்கேயா வந்திட்டே?”

“ஆமா என்னத்துக்கு இரட்டிப்பு வேலைன்னு நான் டாக்ளி பிடிச்சு வந்து இறங்கிட்டேன். தம்புச் செட்டித் தெருவுக்கும் மினர் வா வுக்கும் ரொம்பத் துரமா என்ன?... வந்தவள். நம்ப காரிலேயே பின் வீட்டிலே உட்கார்ந்தேன், கூர்கா உங்க கிட்டே சேதி சொல்ல ஓடிவரத் துடிச்சான். உங்களுக்கு ஆபீஸ் நேரத்திலே தொந்தரவு தரக்கூடா தேன்னு தான் இப்படி நடந்து கிட்டேன். நீங்க வந்திங்க: என்னைக் கவனிக்கல்லே சின்ன தமாஷ் ஒண்ணு பண்ணலாம்னு கடுதாசியிலே ஏரோ ப்ளேன் பண்ணி உங்க தலைமேலே பறக்க விட ரெடியாயிருக் கிறப்போ , அந்தப் பொண்ணு வந்து ட்டாங்க. கம்னு அப்படியே நான் உட்கார்ந்திட்டேன். மழை பேஞ்சது. உங்க மனித மனம் ஒத்தாசை செஞ்சது. ஆக, நீங்க ரெண்டு பேரும் மாத்திரம் சாயா சாப் பிட்டிங்க...! ம்! அவங்க மைலாப்பூரிலே இறங்கிட் டாங்க. நம்ப விட்டிலே நீங்க இறங்கினதும், என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டீங்க. நான் மூச்சுக் காட்டாம.கதவைத் திறந்து வெளியே வந்த துந்தான் குரல் கொடுக் கணும்னு பத்துத் தர ம் நினை ச்சிருந் தேன். என் குரல் வரலையானா, பதட்டப்பட்டுப் போ வீங்களேன்னு நான் குரல் தந்துட்டேன். உங்களுக்கு முகம் வெளிறிப் போச்சு. சந்தர்ப்பங்கள் உதயமா கல்லையானா, அப்பால் வாழ்க்கைக்கே பொருள் தெரியாது; புரியாது. அத் தான், நீங்க வினா உடம்பை அலட்டிக்காதீங்க. உடம்புக்கு வந்தா, எனக்குப் பொறுக்காது. எனக்கு இது ஒரு கனவு மாதிரி. தான் எப்பவோ மறந்திட்டேனே?”

டாக்டர் வந்தார். “மிஸ்டர் முகுந்தன்! உங்கள் மனைவிக்கு மன உளைச்சலினால் தான் இந்த ஜூரம் பூவை எஸ். ஆறுமுகம் 189


வந்திருக்கிறது. அதிர்ச்சி தரும் விஷயம் எதுவுமே ஏற்படாமல் இருந்தால் நல்லது. நீங்கள் கவலைப் பட்டு விடாதீர்கள். இரண்டு மூன்று நாட்களில் குணமாகி விடும்" என்று உத்தாரம் சொன்னார். உடற்பரிசோதனைக் குழலும் பாசக் கயிறும் ஒன்றுக் கொன்று எதிரான இரு துருவங்கள் ஆகாதவரை உலகம் பிழைத்துவிடும்.

   டாக்டர் காப்பியைச் சுவைத் துப் பருகினார். முகுந்தனுக்குக் கசந்தது.
   "டாக்டர், வாணிக்குக் காப்பி கொடுக்கலாமல்லவா?"
   “கூடாது, கூடாது பித்தம்!”
   பித்தம் தெளிய மருந்தாகி வந்தவளுக்குப் பித்தம்!-உரிமை பூண்டவனின் கண்கள் உரிமைக் காரியின் கண்களை ஊடுருவின. கண்களின் கரையில் அமைதிக் கொடி பறந்தது. அவனுக்கு நல்ல மூச்சு வந்தது.
   ஒன்பதாம் முறையாக ஒலித்த டெலிபோன் மணி, சூழலின் அமைதியைக் கலைத்தது. மனத்திற்காவது, அமைதியாவது..?
   “ஆமாம், சரிதான்!ம்..இன்றைக்கே தபாலில் அனுப்பிவிட வேண்டும். சங்கரனின் கையெழுத்துப் போதும். லண்டனுக்குப் போய் பதில் வரணும்! ம்.. வாணிக்கு இப்போது பரவாயில்லை. நன்றி!’
   பற்களைக் கடித்தான். தாரா பஸ்பமானாள்!
   “அத்தான்"
   "ம்!"
   "யார் பேசினது?" 190                      அமுதவல்லி

   "ஆபீஸிலேருந்து"
   "உங்க சொந்தக்காரப் பெண் தாராவா?"
   “ஊஹூம் இல்லே. என்னோட அஸிஸ்டெண்ட்”
   “அத்தான், நீங்க போய்ச் சாப்பிடுங்க. மணி மூணுக்கு மேலாயிடுச்சு."
   "ஆகட்டும், வாணி! கொஞ்ச நேரம் கண்ணை மூடு, கண்னே?”
   “அத்தான், என்ன சொல்றீங்க?”
   "ஆ!..தூங்கச் சொன்னேன், வாணி!”
   "எனக்கு உயிரே போயிடும் போலிருந்திச்சு...”
   “வாணி நிம்மதியாகத் தூங்கினால்தான் உடம்புக்கு நல்லது!...”
   “உங்களுக்கும் நல்லது..."
   “ஆமாம்..."
   “அப்படியானா; நான் பாயும் படுக்கையுமானது உங்களுக்கு வீண் தொல்லை தானே? ...” .
   "வாணி, ஜுர வெறியிலே ஏதேதோ பிதற்றுறாயே? எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். நீ இப்படி கிண்டிக் கிண்டி மறுமுறையும் கேட்டால்!...”
   “அத்தான், நீங்கள் என் பக்கத்திலேயே இருக்கிறதாலே தான் எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் இருக்குது...! உங்களை என் நெஞ்சிலே வச்சுப் பூஜிக்க போன ஜன் மத்திலே நான் ரொம்பப் புண்ணியம் செஞ்சிருக்க வேணும்.”
   "கண்ணே உன் மாதிரி ஒருத்தி என் மனைவியாக வர்றதும் என் பூஜாபலன் தான்" பூவை எஸ். ஆறுமுகம்            191

   “அத்தான்!”
   "வாணி!"
   இரவு வந்தது. நிலவு வர வில்லை.
   கண்ணோடு கண் பொருத்தவில்லை இருவரும்.
   “அத்தான். பக்கத்துத் தெரு பங்கஜத்தை அவள் புருஷன் விலக்கி வைத்து விட்டாராமே...?"
   “ஊர்க் கதையெல்லாம் நமக்கு எதற்கு, வாணி? நீ தூங்கமாட்டாயா? ..."
   “நீங்கள் தூங்குங்கள் ...!” ஆகட்டும்; முதலில் நீ தூங்கு.”
   “சரி ...! அத்தான், நான் பூவும் மஞ்சளுமாக என்றைக்கும் இருப்பேனல்லவா?..."
   “நிச்சயமாக!”
   “உங்கள் நிழலில் ஒண்டும் பாக்யம் எனக்கு எப்போதும் கிடைக்குமல்லவா?"
   “நிச்சயமாக!” “என்னை நீங்கள் மறந்திடமாட்டீங்களே?..." 
   "நீல வானம் நிறைமதியை மறக்கமுடியுமா?"
   
   “நீங்கள் ரொம்ப அழகாகப் பேசறீங்க!” 
   
   "நீ ரொம்ப அழகாக இருக்கே!" 
   
   “அத்தான், இதுக்கு மட்டும் பதில் சொல்லிப்பிடுங்க, நான் தூங்கிப்பிட்றேன். உங்கள் மேலே எனக்குள்ள உரிமை என்னிக்கும் திருடு போகாமல் இருக்குமில்லையா?” 192                     அமுத வல்லி

   "ஆண்டவன் சாட்சியாக, என் பேரிலே உனக்கிருக்கும் உரிமை ஒருநாளும் பறிபோகாது!... உன் காய்ச்சலுக்குக் காரணம் புரிந்து விட்டது. தாராவை நாளைக்கே வேலையை விட்டு விலக்கிவிடுகிறேன். இனி திருப்தி தானே?..."
   இன்பக் கனவுகளின் அடிவாரத்திலே, வாணி ஆனந்தமாக நித்திரை வசப்பட்டுக் கிடந்தாள்.
   முகுந்தன், காலடியில் கிடந்த அந்த மோதிரத்தைத் தூர விட்டு வீசினான். 'தாரா' என்ற எழுத்துக்கள் சிரித்தன_விஷச் சிரிப்பு; போதைச் சிரிப்பு!
   காதலுக்கு இதயம் இல்லை.
   காதலுக்குக் கண் இல்லை.
   சுட்டிப்பயல் ஓடுவதைப் போல் இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் தன்னை மறந்து, தான் தாங்கிச் செல்லும் ஆயிரமாயிரம் இதயங்களைப் பொறுப்புணர்ச்சியுடன் நினைந்து கொண்டு ஒடிக் கொண்டிருந்தது.
   ஆந்தைக் கண்களில் அழகா சொட்டும்? ஆனால், இருளின் கண்களில் அழகு சொட்டியது; வழிந்ததுதழலிலே தண்மை சிரிக்கும் பாங்கிலே.
   இரண்டாம் வகுப்புப் பெட்டியை அவனால் ரசிக்க முடியவில்லை. அருகில் அவள் இருந்திருக்க வேண்டாமா?-பதட்டப்பட்டு விடாதீர்கள், சுவாமிகளே! அவள் என்றால், அவனுக்கு முன்றானை போடும் பாக்கியம் பெற்றவள் -உரிமை பூண்டவள் ஆம். அவள்-அவளே தான்!-வாணி! நாளைத் திரும்பும்போது, இந்தப் பாழும் இருளில் கூட அவன் பூரண நிலவைத் தரிசிப்பான் அல்லவா ? பூவை எஸ். ஆறுமுகம்            193

   பிரித்து வைத்திருந்த மலரின் ஏடுகள் அவன் கண் முன் ஓடின. அவன் கண்கள் மலரின் ஏடுகளிலே ஒட வேண்டாமா?
   ஒரு காக்காய் குருவிகூட அவனுக்குச் சக பிரயாணியாக்-சக பிராணியாக இல்லை. பண வீக்கம் என்று எழுதட்டுமா? பண முடக்கம் என்றே புரியும் படி எழுதிவிடலாமா? இல்லை, மேலை  நாகரிகம் மெளஸ் இழந்து வருகிறதென்று அர்த்தமா?-ஏதோ ஒன்று. தொலையட்டும் , சனியன்!
   ஹோல்டாலில் பதிந்திருந்த கை கடுத்தது தலையை உயர்த்திக் கொண்டான். காற்று தேவைப் படவில்லை. அணைத்தான்.
   “அன்புள்ள அத்தான் அவர்களின் பாதார விந்தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம். என் உடம்பு முழுவதும் தேறிவிட்டது. இந்த முப்பது நாட்களும் முப்பது யுகங்களாகி விட்டன. உங்கள் அன்பு நிழலில் தான் நான் உள்ளம் தேறுவேன். என்றைக்குத் தஞ்சை வருவீர்கள்? சீக்கிரம், அத்தான், சீக்கிரம்!
                   இப்படிக்கு, 
                 
                  உங்கள்அடியாள்
                     
                      வாணி 


    பி.கு.:-நினைவிருக்கட்டும்- அகநானூறு. 
   சிரிப்பினுள் சிந்தை ஒடுங்கினான். சித்தனல்லமுகுந்தன்! தூக்கம் சொக்கியது. காற்று சுழன்றடித்தது; விம்மி வெடித்தது. தூங்கிப் போனவன் கண் மலர்ந்தான்.
   அழகு கொலு வீற்றிருந்தது. வெறுமைக்குப் பிரியா விடை. திரும்பினான். அழகு ரோஜா ஒன்று 194                      அமுதவல்லி

கண் உறங்கிக் கொண்டிருந்தது. ‘இனம்' காண முடியவில்லை. முகம் மடித்து வைக்கப்பட்ட கரங்களில் புதைந்து கிடந்தது. 'ஆராரோ' பாட ஆசைப்பட்டானோ, என்னவோ? சதி விரதன் என்றால்-

   எழுத்துகள் பூதாகாரமாகத் தெரிந்தன. 'உனக்கு மேலே பேரும் அழகா இருக்கேன்னான். நான் ஒண்ணும் அழகில்லேன்னேன். நீயா, நீயா, நீயான்னு கிட்ட வந்து .’
   மலரை மூடினான். திரும்பிப் பார்த்தான். உடம்பில் சூடு; நெஞ்சில் சூடு; நினைவில் சூடு.
   வாணி அன்றைக்கு சாவின் தலைவாசலில் நின்ற போது கூறினாளே, அதை இப்போது திரும்பவும் நினைவுபடுத்தினான். "அத்தான், எனக்கு உள்ள உரிமை என் உயிருள்ள வரை பறிபோவதை - பிறரால் பறிக்கப்படுவதை நான் சகிக்கமாட்டேன். இன்னொன்று. நளாயினி கதை எனக்கு இஷ்டப்படுவ தில்லை. தன் கணவனின் மிருக இச்சையைப் பூர்த்தி செய்ய வேண்டி, தன் புருஷனை -தீராத நோயாளிக் கணவனை-அவன் விரும்பிய தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றாளாமே? நிலைநிறுத்தப்பட்ட கற்பின் கதைக்குக் கை தொழுகிறேன். ஆனால் அவள் தன் உரிமையை இழந்ததை..சே! சே!...அத்தான், நீங்கள் என் சொத்து-உரிமை!"
   பூகம்பமாக நடுங்கியது உடம்பு.
   அழகி புரண்டாள்; அழகு வெள்ளம் கால்வாய் கட்டி நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்துக் கொண்டிருந்தது. யார், தாராவா?
   அழகுச் சொக்கட்டானின் தீ நாக்குகள் பராசக்தியாக எரிந்து கொண்டிருந்தன. யார், வாணியா? பூவை எஸ். ஆறுமுகம்            195

   கண்களைத் தீட்டிக் கொண்டு பார்த் தான். “தாரா என்ற இரண்டெழுத்துகள் பிறை நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தன. இருபது பேய் கொண்டவன் நிலை அவனுக்கு.
   தாராவை வேலையினின்று நீக்கிவிட வேண்டிய நிலையில் வைத்துவிட்டது வாணியின் உரிமைப் போர் . அப்பொழுது அவள் நிலவுப் புன்னகையும், காட்டாற்றுக் கண்ணீருமாக விடை பெற்றுச் சென்றதை அவன் ஏன் எண்ண வேண்டும்?
   அவன் உடம்பு சாம்பலாக ஆகும் வரை , நினைவை விட்டுப் பிரிவினை பெறாத ஒரு சம்பவம் அது தாராவுக்கும் முகுந்தனுக்கும் பிஞ்சுப் பிராயம். மணல்வீடு கட்டி புருஷன்-பெண் ஜாதி விளையாட்டு விளையாடினார்கள், அப்போது, அப்போது ?
   அந்த ஸ்பரிசத்தை, புரியாத சம்பந்தத்தை, நிறைவேற்ற முடியாத பருவத்திலிருந்த வெறியை எண்ணும் போதெல்லாம், வாணியில் தாராவைத் தரிசித்தான் அவன்-பாழாய்ப்போன ஆண் மனம் ! ஆனால், இப்போது-?
  "தாரா!"
  நாக்கின் மேலண்ணத்தில் தாரா ஒட்டிக் கொண்டாள்.
   பேய்க் காற்று; பேய் மழை. ஊழிக் கூத்து ரயில் தடம் புரண்டது, “ஐயோ!"-கோடிக் குரல்கள்!
   அடித்துப் போட்டாற் போலக் கிடந்தான் முகுந்தன். அவன் வலது கன்னத்தில் பதிந்திருந்த ஐந்து விரல்களில் ரத்தம் பீறிட்டது. 196                   அமுத வல்வி
     “தாரா’ என்று அழைத்தான். புனிதம் மாறாமல் கிடந்தது ரோஜா. அவன் கண்கள் அவளைத் துழாவின. ‘ஆ’ என்று கூச்சல் போட்டான். நெற் றியிலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்தோடி வந்த குருதித் துளிகள் ஒவ்வொன்றாக அந்த மஞ்சள் கயிற்றின் மேல் விழுந்து, பிறகு வெட்டி விடப்பட்ட கால்வாய் வழி மண்ணை முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
  தஞ்சைச் சந்திப்பு நிலையத்திலே அவன் ரத்ததானம் செய்து கொண்டே கிறுக்குப் பிடித்தவன் போல ஓடினான். வாணி ஓட ஓடத் துரத்தினாலோ?

வாணி! வாணி

கால் இடறி விட்டது.

“அத் தான்!”

‘ஆ’ என் வாணி! என் வாணி! நீ கூட இந்தப் பாழும் புயலிலும் மழையிலும் அகப்பட்டுக் கொண்டு விட்டாயா?. நேற்று இரவு உலகம் பேயாகியிருந் ததே? ஐயோ!...” - -

 அத்தான், உங்களை உடனடியாகப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. ரயிலேறி விட்டேன். உலகத்தில் எங்கோ தவறு, அநீதி நடந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இயற்கைத் தாய் இப்படிச் சீறியிருக்கவே மாட்டாள். நாம் இருவரும் நல்லபடி சந்தித்தோமே, என் தாலி பாக்கியம் தான்!” என்று சொல்லித்.தன் தாலியைப் பக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொண்டாள் வாணி.

பிரகதீஸ்வரர் கோயிலில் உதய காலப் பூஜை நடந்தது. பூவை எஸ். ஆறுமுகம் 197

__________________________________

       புதுப் பிறவியுடன் ஜோடியாகக் கைசேர்த்து நடந்தார்கள்: தேவ தரிசனம் கிடைத்தது. திரும்பும் போது இன்னொரு ஜோடி தென்பட்டது.
    “ஒ, தாராவா?... வாருங்கள். அத்தான்! என்று வரவேற்றாள் வாணி.
     அத்தான், செளக்கியமா?... வாணியின் முயற்சி இல்லையென்றால், எனக்கு இவ்வளவு சீக்கிரம் கலியாணம் நடந்திருக்க முடியாது ..!” என்று குசலம் விசாரித்துக் கதை சொன்னாள் தாரா.
    “அத்தான், தாராவின் கணவர் இவர், இவர் எனக்கு அத்தான் முறை வேணும். புதுமணத் தம்பதிகள் ரயிலுக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட்டு விட்ட அவசரத் தில் ஆளுக்கொரு பெட்டியில் ஏறி விட்டார்களாம் - உங்களிடம் சொல்ல மறந்திட்டேன். நேற்று இரவு ஆடித்த புயலிலும் மழிையிலும், என் அத் தான் இல்லையென்றால், நான் இந்நேரம் உங்களைக் காணும் பாக்கியம் கூடச் செய்திருப்பேனோ, என்னவோ? உங்களைப் போலவும் மூர்த்தி அத் தான் மாதிரியும் உலகத்திலே நல்ல வங்க நர்லு பேர் இன்னம் நடமாடறதினாலேதான், ராத்திரி அடிச்ச பேய்க்காற்றும் மழையுங்கூட சீக்கிரம் ஒய்ஞ்சிடுச்சு?’’

முகிந்தனின் உள்மனம் அணு அணுவாகச்செத்துக் கொண்டிருந்தது. . தாரா! என்னை ம்ன்னிக்க மாட்டாயா? அறியாப் பருவத்திலிருந்து இன்று வரை ஏன் என்றுமே என் மனத்தை விட்டு அகலாமல், நினைத்தபோது நினைத்தபடி நறுமணம் பரப்பும் புனிதமான மனோரஞ்சிதப்பூ நீ!. வாணி, என்மீது உனக்கு இருக்கும் உரிமைக்கு இனி துளிகூடப் பங்கம் வராது. உன்னை இன்று தான் பரிபூரணமாகப் புரிந்து கொண்டேன்!...'