அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/இசையா? மொழியா?
(69)
இசையா? மொழியா?
நேபாளத்து மன்னர் ராணா 1853ல் இங்கிலாந்துக்குப் போயிருந்தார்.
விக்டோரியா மகாராணி, ராணாவை வரவேற்பதற்காக ஒரு பால்டான்ஸை ஏற்பாடு செய்திருந்தார் ராணியும் கூட அதில் கலந்து கொண்டார்.
நடனம் முடிந்ததும் ராணாவிடம் மொழி பெயர்ப்பாளர் மூலமாக, "நடனம் எப்படி இருந்தது?" எனக் கேட்டார் ராணி.
“ரொம்பப் பிரமாதம்! வெகு இனிமை!” என்றார் ராணா.
"எங்கள் மொழி, உங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்கும்போது 'ரொம்பப்பிரமாதம்; வெகு இனிமை' என எப்படிச் சொல்லுகிறீர்கள்?” என்றார் ராணி.
“பறவைகளுடைய மொழி யாருக்காவது தெரியுமா? ஆயினும், அவற்றின் குரல் எல்லோருக்கும் இனிமையாகத்தான் இருக்கிறது!” என்றார் ராணா.