அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/எழுதிக்கொண்டே இருந்தவர்


(7) ழுதிக்கொண்டே ருந்தவர்



தன்னுடைய 13-வது வயதில் இறகு பேனாவினால் எழுதி,

எழுத்தர் அலுவல் பார்த்த பிரெஞ்சுக்காரருக்கு, நாவல் எழுதும் ஆர்வம் உண்டானது ஆச்சரியம் அல்லவா? -

'அந்த வயதில், சிந்தித்துச் சுயமாக எழுதினால், மற்றவர் மதிப்பார்களா? என்று எண்ணவில்லை. ஊக்கம் பிறந்தது; எண்ணம் வளர்ந்தது; எழுத்துப் பிறந்தது!

அவர் யார்? அவரே அலெக்ஸாண்டர் டூமாஸ்! டூமாஸ் எழுதுவதில் சலிப்பதில்லை. கை வலித்தபோதிலும் விடுவதில்லை. பல மணி நேரங்கள் - ஏன் பல நாட்கள் கூட எழுதிக் கொண்டே இருந்தவர். தன்னுடைய எண்ண அலைகளுக்குத் தடையாக உணவு உறக்கம் எதுவும் தடையாக இருந்து விடக் கூடாதே என்று அவற்றை மறந்து எழுதியவர்.

ஒரு தடவை 72 மணி நேரம் உட்கார்ந்து ஒரு நாவலை எழுதி முடித்து விட்டார்.